India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக தரைத்தளத்தில் தகவல் தொழில்நுட்பவியல் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் ஆதார் நிரந்தர பதிவு மையத்தினை மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜ், இன்று திறந்து வைத்து, ஆதார் நிரந்தர முதல் பதிவினை தொடங்கி வைத்தார். இதில் தகவல் தொழில்நுட்பவியல் டிஜிட்டல் சேவைகள் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், பட்டா, முதியோர் உதவித்தொகை, ஓய்வூதியம், சாலை, குடிநீர் வசதி, மின்சார வசதி உள்ளிட்டவைகள் தொடர்பாக 332 மனுக்கள் பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க துறை சார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் பயிற்சி பெற்று வரும் செங்கல்பட்டை சேர்ந்த ஆர்.ஸ்ருதிகா என்ற மாணவி மாநில அளவிலான 14 வயதிற்குட்பட்ட சைக்கிளிங் போட்டியில் வெற்றி பெற்று தேசிய அளவிலான ஒடிசாவில் நடைபெற உள்ள போட்டியில் பங்கேற்கவுள்ளதைத் தொடர்ந்து, மாணவிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அருண்ராஜ் சீருடை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். இவருக்கு நாமும் பாராட்டு தெரிவிக்கலாமே.
செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை (26.11.2024) மாலை 3 மணியளவில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவு மையத்தில் குறை கேட்பு கூட்டம் அமைச்சர் அன்பரசன் தலைமையிலும், மாவட்ட ஆட்சியர் அருண் ராஜ் மற்றும் அனைத்து துறை உயர் அலுவலர்கள் முன்னிலையிலும் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் பொதுமக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்ற தங்கள் தொகுதி குறைகளை மனுவாக அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், வரும் 29ஆம் தேதி, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூரில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களுக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கால்நடை பராமரிப்பு துறையின் 148 கால்நடை மருந்தகங்கள் உள்ளன. அரசு கால்நடை மருத்துவமனைக்கு கால் நடைகளை அழைத்து வர இயலாதவர்களுக்காக செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு முறையே 4 ஆம்புலன்ஸ்களும், 43 ஆம்புலன்ஸ்களும் வழங்கப்பட்டன.கால்நடை வளர்ப்போர் கால்நடைகளின் மருத்துவத்திற்கு 1962 என்ற இலவச எண்ணை இந்த இரு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தொடர்பு கொள்ளலாம்.
செய்யூர் வட்டம், மேல்மருவத்துார் அருகே உள்ள கீழ்மருவத்துாரில், அரசு மதுபான கடை எண்: 4361 இயங்கி வருகிறது. மதுப்பிரியர்கள் இங்கு மது அருந்திவிட்டு சாலையில் செல்லும் பெண்களை கேலி, கிண்டல் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று அரசு மதுபான கடையை, 100க்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகையிட்டு கடையை வேறு இடத்திற்கு மாற்றும்படி, போராட்டத்தில் ஈடுபட்டனர்
குன்றத்தூர் ஒன்றிய துணை செயலாளர், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் மு.ராகவன் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி நேற்று (நவ. 24) காலை தாம்பரத்தில் அவரது இல்லத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர் தா.மோ அன்பரசன் மாவட்ட குழு தலைவர் மனோகரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு புகழஞ்சலி செலுத்தினர்.
இன்றைய மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நெடுங்குன்றம் ஊராட்சியில் ஆலப்பாக்கம் என்ஜிஓ நகரில் அமைந்துள்ள பிரகிருத்தி அறிவாலயம் என்ற குழந்தைகள் இலவச நூலகத்தைப் பற்றி புகழ்ந்து பேசினார். இதனை ஸ்ரீராம் என்பவர் இரண்டு ஆண்டு காலமாக நடத்தி வருகிறார். அவரை இன்று நேரில் சந்தித்து பாரதிய ஜனதா கட்சி நிர்வாகி பாலாஜி தங்கேவேல் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து நினைவு பரிசை வழங்கினார்.
19 துணை தாசில்தார்களுக்கு தற்காலிகமாக தாசில்தார்களாக பதவி உயர்வு வழங்கி, கலெக்டர் அருண்ராஜ் நேற்று முன்தினம் உத்தரவிட்டார். அதன்படி, கோபி தலைமையிடத்து துணை வட்டாட்சியர் – தாலுகா அலுவலகம், பல்லாவரம் தனி வட்டாட்சியர் – நில எடுப்பு, சிறுசேரி, ஸ்ரீபெரும்புதுார், புத்தியப்பன் தலைமை உதவியாளர் – கலெக்டர் அலுவலகம், செங்கல்பட்டு மேற்பார்வையாளர் (டாஸ்மாக்) – தாம்பரத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.