Chengalpattu

News November 27, 2024

இந்திய அரசமைப்பு நாள் விழா: திருப்போரூர் MLA பங்கேற்பு

image

நாடு முழுவதும் 75ஆவது இந்திய அரசமைப்பு நாள் விழா நேற்று (நவ.26) வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில், சென்னை அசோக் நகரில் அமைந்துள்ள விசிக தலைமை அலுவலக வளாகத்தில் உள்ள அம்பேத்கர் திடலில், இந்திய அரசமைப்பு விழா கொண்டாடப்பட்டது. இதில், அரசமைப்பு சட்ட நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில், விசிக தலைவர் திருமாவளவன், திருப்போரூர் எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.பாலாஜி, நடிகர் சத்யராஜ் கலந்து கொண்டனர்.

News November 27, 2024

செங்கல்பட்டில் பள்ளிகளுக்கு விடுமுறை

image

கனமழை காரணமாக செங்கல்பட்டில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் வலுப்பெற்றுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக மாற வாய்ப்புள்ளது.இதனால் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, மாணவர்கள் நலன் கருதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்க

News November 27, 2024

விவசாயிகள் குறைத்தீர் முகாம் ஆட்சியர் தகவல்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் வரும் 29.11.2024 வெள்ளிக்கிழமை அன்று புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. என மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜ் தெரிவித்துள்ளார். விவசாயத் துறை சார்ந்த அனைத்து அதிகாரிகளும் இந்த கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்றும் விவசாயிகள் விவசாயம் சார்ந்த தொடர்பான கோரிக்கையை மனுவாக அளித்து நிவாரணம் பெறலாம் என தெரிவித்துள்ளார்.

News November 27, 2024

சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட காவலாளி கைது

image

பெரும்பாக்கம், எழில் நகரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(62). இவர் காவலாளியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த 21ந்தேதி வீட்டின் அருகே உள்ள 6 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு உள்ளார். இதனை சிறுமி பெற்றோரிடம் தெரிவித்தார். பெற்றோர் பெரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் பாலகிருஷ்ணனை போலீசார் நேற்று கைது செய்தனர்.

News November 26, 2024

செங்கல்பட்டில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

image

செங்கல்பட்டில் நாளை (நவம்பர் 27) பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் தொடர்து கனமழை பெய்து வரும் நிலையில், பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து செங்கல்பட்டில் கனமழை பெய்து வரும் நிலையில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

News November 26, 2024

கனமழை எச்சரிக்கை – அவசர உதவி எண்கள் அறிவிப்பு

image

தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக நெடுஞ்சாலை துறை சார்பில் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டு அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் மழை பாதிப்பு, நெடுஞ்சாலை துறை சாலைகள் பாதிப்பு தொடர்பாக 9381738585, 9952075411 என்ற வாட்ஸ் அப் எண் மூலம் புகார் அளிக்கலாம் என நெடுஞ்சாலை துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News November 26, 2024

சிறுமியை சீரழித்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை

image

செங்கல்பட்டு தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமி, கடந்த கடந்த 2020ஆம் ஆண்டு பொன்விளைந்தகளத்தூர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த கார்த்திக் என்பவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இச்சம்பவம் குறித்த வழக்கு, செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நேற்று கார்த்திக் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

News November 26, 2024

செங்கல்பட்டு சுற்றுப்புற பகுதிகளில் மழை

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் தற்போது கனமழை பெய்து வருகிறது. மீனம்பாக்கம், திரிசூலம், மாமல்லபுரம், கல்பாக்கம், குரோம்பேட்டை, கூவத்தூர், பல்லாவரம், தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், பம்மல், சேலையூர், மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் லேசானது முதல் மிதமான பெய்து வருகிறது. இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உங்க ஏரியாவில் மழையா?

News November 26, 2024

செங்கல்பட்டில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்றிரவு (நவ.25) நிலவரப்படி சென்னைக்கு தென்கிழக்கே 840 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது இன்று (நவ.26) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். எனவே, மாணவ, மாணவிகள், பணிக்கு செல்வோர் அனைவரும் முன்னெச்சரிக்கையாக இருங்கள். ஷேர் செய்யுங்கள்

News November 26, 2024

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

image

ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 12 மாற்றுத்திறனாளி குடும்பத்திற்கு ஈமச்சடங்கிற்கான நிதி தலா ரூ.17000, ஒரு மாற்றுத்திறனாளிக்கு ரூ.8,000 மதிப்பில் மோட்டார் பொருந்திய தையல் இயந்திரம், 3 பயனாளிகளுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டைகள், ஒருவருக்கு ரூ.15,714/– மதிப்பீட்டில் டெய்ஸி ப்ளேயர்  ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் அருண் ராஜ் பயனாளிகளுக்கு வழங்கினார்.

error: Content is protected !!