India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஃபெஞ்சல் காரணமாக, செங்கல்பட்டு மாவட்டத்தில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. பல்லாவரம், பம்மல், குரோம்பேட்டை, தாம்பரம், வண்டலூர், அனகாபுத்தூர், பெருங்களத்தூர், சிங்கப்பெருமாள் கோவில், அச்சிறுபாக்கம், கேளம்பாக்கம், கூடுவாஞ்சேரி, மதுராந்தகம் உள்ளிட்ட பகுதிகளில் மழை ருத்ர தாண்டவம் ஆடி வருகிறது. குறிப்பாக, மாமல்லபுரம் பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. உங்கள் ஏரியாவில் மழையா?
ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செங்கல்பட்டில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (நவ.30) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புயல் இன்று பிற்பகல், காரைக்கால் – மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என சொல்லப்பட்டுள்ளது. இதனால் செங்கல்பட்டிற்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க
பெங்கால் புயல் காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இந்நிலையில் தாம்பரம் மாநகர காவல் ஆணையரகம் சார்பில் வெள்ள தடுப்பு கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் பகுதியில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் நாளை காரைக்கால் – மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும்போது பலத்த காற்று வீசும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இதையடுத்து கலெக்டர் அருண்ராஜ் பொதுமக்கள் யாரும் தேவையில்லாமல் வெளியில் வரவேண்டாம், கடற்கரையோரம் செல்ல கூடாது, மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் அருகில் நிற்க கூடாது என அறிவுறுத்தியுள்ளார். புயல் பாதிப்பு குறித்து உதவி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை (நவ.30) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் நாளை பிற்பகல் மாமல்லபுரம்- காரைக்கால் இடைய கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் நாளை பிற்பகல் மாமல்லபுரம்- காரைக்கால் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், செங்கல்பட்டில் தரைக்காற்று மணிக்கு 70 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதிகபட்சமாக புயல் கரையை கடக்கும் போது கன மழையுடன் மணிக்கு 90 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்க கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் காரைக்கால் – மாமல்லபுரம் இடையே நாளை (30.11.24 சனிக்கிழமை) பிற்பகல் கரையை கடக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் இன்று செங்கல்பட்டு மாவட்டத்திற்கு வருகை புரிந்துள்ளனர். மேலும் ஆவடி பகுதியில் இருந்தும் மீட்பு குழு வருவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்திற்கு நாளை ( நவ.30) அதி கனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயலுக்கு ஃபெஞ்சல் என பெயரிடப்பட்டுள்ளது. தற்போது இது சென்னையில் இருந்து 300 கி.மீ தொலைவில் உள்ளதாகவும், நாளை பிற்பகல் மாமல்லபுரம்- காரைக்கால் இடையே கரையை கடக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
வங்ககடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, செங்கப்பட்டில் உள்ள பல்வேறு பகுதிகளில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. சிங்கப்பெருமாள் கோவில், புலிவாக்கம், பரனூர், மறைமலை நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால், சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைபெருக்கெடுத்து ஓடுகிறது. பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசிக கட்சியில், நிர்வாகிகள் தேர்வுக்காக விருப்ப மனு பெறப்படுகிறது. விருப்ப மனு வழங்க இன்று (நவ.29) கடைசி நாள் ஆகும். காலை 11 மணிக்கு சித்தாமூர், சரவம்பாக்கத்திலும், பகல் 12 மணிக்கு அச்சரப்பாக்கத்திலும், மதியம் 1 மணிக்கு சோத்துபாக்கத்திலும், பிற்பகல் 2 மணிக்கு மதுராந்தகத்திலும் மனுக்கள் பெறப்படுகின்றன. சட்டமன்றத் தேர்தல் எதிர்நோக்கி வருவதால், கட்சியை பலப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.