India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு ரயில் தடத்தில், நாளை (டிச.8) முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் 10 ரயில்களின் சேவை ரத்து செய்து, புதிய கால அட்டவணை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை, இந்த ரத்து தொடரும். கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு ரயில் தடத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் தற்போது 200 மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில், 10 ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுகிறது. ஷேர் பண்ணுங்க
பல்லாவரம் பகுதியில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்து இருவர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் அப்பகுதியில் வீடுகளில் பயன்படுத்தப்படும் குடிநீரை பருகி தரத்தினை ஆய்வு மேற்கொண்டார். மேலும் நீர் தேக்க தொட்டியும் சுத்தம் செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் நேற்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளா்களை சந்தித்தார். அப்போது, “விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்கள் மழை, வெள்ளத்தால் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, முதல்வர் ஸ்டாலின், மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.10 ஆயிரமும், விவசாயிகளுக்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரையும் வழங்க வேண்டும்” என்றாா்.
பல்லாவரம் பகுதியில், கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்த 50 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், 2 பேர் உயிரிழந்த நிலையில் 20 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். தொடர்ந்து, 20 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று காலை குரோம்பேட்டை கோதண்டம் நகரைச் சேர்ந்த 2 பேர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பல்லாவரம் பகுதியில் நேற்றிரவு மாநகராட்சி விநியோகிக்கும் குடிநீர் அருந்திய 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 37 பேருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. குடிநீரில் கழிவுநீர் கலந்து வந்ததாக கூறப்படுகிறது. குடிநீரில் ஏதாவது பாதிப்பு இருக்குமா? என்ற சந்தேகம் எழுந்த நிலையில், மருத்துவமனை ஆய்வுக்கு பிறகு தான் அது உறுதியாகும். உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கதறி அழுது வருகின்றனர்.
பல்லாவரம் பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கு அமைச்சர் தா.மோ.அன்பரன் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “குடிநீரில், கழிவுநீர் கலந்ததா என்று அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். குடிநீரில் கழிவுநீர் கலந்திருந்தால் நிறைய பேர் பாதிக்கப்பட்டிருப்பார்கள். ஏரியில் பிடித்த மீனை சாப்பிட்டத்தில் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது” என்று கூறியுள்ளார்.
குடிநீரில் கழிவு நீர் கலந்ததாக பல்லாவரம் பகுதியில் வாந்தி, மயக்கம் அடைந்து குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் 23 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் சர்ச்சையான நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று மருத்துவமனைக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து, மருத்துவர்களிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். இதில் கலெக்டர், எம்எல்ஏ பங்கேற்றனர்.
தாம்பரம் மாநகராட்சி 13வது வார்டு பல்லாவரம் பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்ததாக கூறப்படுகிறது. இதில் 23பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமைச்சர் தா.மோ.அன்பரசன், குடிநீரில் கழிவுநீர் கலக்கவில்லை என்றும் அதிகாரிகள் குடிநீரை ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
தாம்பரம் மாநகராட்சி 12வது வார்டு காமராஜர் நகர் கன்டோன்மென்ட் பல்லாவரம் மலைமேடு பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்ததாக கூறப்படுகிறது. இதை அறியாமல் குடித்த அப்பகுதி மக்கள் வாந்தி, மயக்கமடைந்து 20க்கு மேற்பட்டோர் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு ஏற்கனவே திரிவேதி, வரலட்சுமி ஆகிய 2 பேர் உயிரிழந்த நிலையில் இன்று (டிச.5) காலை மோகனரங்கன் (42) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
B.Pharm, D.Pharm சான்று பெற்றவர்கள், தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முதல்வர் மருந்தகம் அமைக்க www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க இன்றே (டிச.5) கடைசி நாள் என்பதால், விருப்பமுள்ள தொழில்முனைவோர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மானியமாக ரூ.3 லட்சம் 2 தவணைகளாக ரொக்கமாகவும், மருந்துகளாகவும் வழங்கப்படும்.
Sorry, no posts matched your criteria.