Chengalpattu

News December 10, 2024

மின்சாரம் தாக்கி ஐடி ஊழியர் உயிரிழப்பு

image

திண்டுக்கல்லைச் சேர்ந்த வீரசக்தி (22), மேடவாக்கத்தில் தங்கி TCS தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். நேற்று நள்ளிரவு வீட்டின் அருகே உள்ள ஒரு கடையில் உணவு வாங்கிக் கொண்டு வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டில் உணவை சாப்பிட்டுவிட்டு, 4ஆவது மாடியில் இருந்து குப்பையை கீழே வீசியுள்ளார். அப்போது, உயிர் அழுத்த மின் கம்பியில் அது சிக்கிக் கொண்டது. அதனை அகற்ற முயன்றபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

News December 10, 2024

தனியார் பேருந்து U -Turn எடுத்தபோது விபத்து

image

ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில், இன்று அதிகாலை தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, திடீரென பேருந்து U Turn எடுத்தபோது, பேருந்து மீது பின்னால் வந்த லாரி பலமாக மோதியது. இந்த விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களை அங்கிருந்தந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

News December 10, 2024

திருவண்ணாமலைக்கு 1982 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

கார்த்திகை தீபத்திருநாள் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு வரும் டிசம்பர் 12 ஆம் தேதி 269 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. அதேபோல் 13ஆம் தேதி 643 பேருந்துகளும், 14 ஆம் தேதி 801 பேருந்துகளும், 15ஆம் தேதி 269 பேருந்துகளும் என மொத்தம் 1982 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. 

News December 9, 2024

செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு 

image

சைபர் கிரைம் மோசடிகள் நாளுக்கு அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு செங்கல்பட்டு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. லோன் செயலிகள், மின்சார கட்டணம் வசூல், வீடியோ கால் மோசடி, சமூக வலைத்தளம் மோசடி, வங்கி மேலாளர் பேசுவதாக மோசடி, வேலை வாங்கி தருவதாக மோசடி என பல்வேறு மோசடிகள் நடைபெறுகின்றன. எனவே பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

News December 9, 2024

அமைச்சர் தலைமையில் குறை கேட்பு கூட்டம்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை 10ம் தேதி மாலை 3 மணி அளவில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் அன்பரசன் தலைமையிலும், மாவட்ட ஆட்சியர் அருண் ராஜ் முன்னிலையிலும் குறை கேட்பு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் அனைத்து துறை உயர் அலுவலர்கள் பங்கேற்க இருக்கின்றனர். எனவே உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள பிரச்சனைகளை மனுவாக அளிக்கலாம் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 9, 2024

செங்கல்பட்டு அருகே கழிவுநீர் விவகாரம்; 12 பேர் டிஸ்சார்ஜ் 

image

தாம்பரம் மாநகராட்சி காமராஜர் நகர், கன்டோன்மென்ட் பல்லாவரம் மலைமேடு பகுதிகளுக்கு, சமீபத்தில் குடிநீர் விநியோகிக்கப்பட்டது. இந்த குடிநீரில் கழிவுநீர் கலந்திருந்ததாகவும், அதை பருகியதால் உடல் உபாதை ஏற்பட்டு 60க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் நேற்று 12 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். நான்கு பேர், தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர். புதிதாக யாரும் அனுமதிக்கப்படவில்லை.

News December 9, 2024

நிவாரண பொருட்கள் வழங்க த.வெ.க.வினருக்கு அனுமதி மறுப்பு

image

பல்லாவரத்தில் கழிவுநீர் கலந்த குடிநீரை பருகியதால் பாதிக்கப்பட்ட பலர், குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். அவர்களுக்கு பிரட், பிஸ்கட், ரஸ்க் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்க த.வெ.க., கட்சியினர், மருத்துவமனைக்கு நேற்று சென்றனர். அப்போது மருத்துவமனை நிர்வாகம் அவர்களுக்கு அனுமதி மறுத்தனர். இதனால், த.வெ.க.வினர் வெளியே வந்து நிவாரண பொருட்களை வழங்கினர்.

News December 8, 2024

முதல்வர் மருந்தகம் அமைக்க கால அவகாசம் நீட்டிப்பு

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் ‘முதல்வர் மருந்தகம்’ அமைக்க விருப்பமுள்ள, பி.பார்ம் மற்றும் டி.பார்ம் சான்று பெற்றவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதலுடன் www.mudhalvarmarundhagam.in.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு கடந்த 5ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது வரும் 10ஆம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்க தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்க

News December 8, 2024

வேலை தேடுவோரை குறிவைத்து மோசடி: டிஜிபி

image

வேலை தருவதாக இணையம் மூலமாக விளம்பரம் செய்து, அதை நம்பி வரும் மக்களை, தங்களின் இடத்துக்கு வரவழைத்து சிலர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்ற மோசடிகளில் சிக்கிக் கொள்ளாமல் விழிப்புடன் இருக்க வேண்டும். இத்தகைய மோசடிகளுக்கு ஆளாகி இருந்தால் சைபர் க்ரைம் கட்டணமில்லா தொலைபேசி எண் 1930-ஐ அழைத்து புகார் தெரிவிக்கலாம். அல்லது www. cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகாரை பதிவு செய்யலாம்.

News December 8, 2024

வருவாய் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்

image

தாம்பரம் மாநகராட்சியின் வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வந்த சிவக்குமார், மறைமலைநகர் நகராட்சிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல், வருவாய் உதவியாளராக பணியாற்றி வந்த தண்டபாணி, மாங்காடு நகராட்சிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும், தாம்பரம் மாநகராட்சியில் உதவி பொறியாளராக இருந்த சந்தோஷ் குமார், திருநெல்வேலி மாநகராட்சி உதவி பொறியாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

error: Content is protected !!