Chengalpattu

News December 29, 2024

பள்ளத்தில் கார் கவிழ்ந்து பெண் உயிரிழப்பு

image

ஆந்திர மாநிலம் செட்டிப்பள்ளியை பகுதியைச் சேர்ந்தவர் சேகர். இவர் தனது மனைவி மற்றும் உறவினர்களுடன் நேற்று காலை மாமல்லபுரத்திற்கு காரில் சுற்றுலா சென்று கொண்டிருந்தார். அப்போது மாமல்லபுரம் அடுத்த காரணை பகுதியில் திடீரென சாலையில் பாம்பு ஒன்று குறுக்கே வந்துள்ளது. காரை சாலையோரம் நிறுத்த முற்பட்டபோது, கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சேகரின் மனைவி அஞ்சலி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

News December 28, 2024

மனைவி மீது சந்தேகம்: பெட்ரோல் ஊற்றி கொளுத்திய கணவர்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வீராபுரம் கிராமத்தில் அங்கன்வாடி ஊழியராக பணியாற்றி வருபவர் கலையரசி (38). இவரது கணவர் செந்தில்குமார் (44). இருவரும் ஆதனூரில் வசிக்கின்றனர். கலையரசிக்கும் வீராபுரம் ஊராட்சி மன்ற தலைவருக்கும் தகாத உறவு இருப்பதாக சந்தேகம் அடைந்த கணவர், நேற்று இரவு தன் மீதும் மனைவி மீதும் பெட்ரோலை ஊத்தி தீ வைத்தார். தற்போது இருவரும் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை சிகிச்சை பெறுகின்றனர்.

News December 28, 2024

கள்ளசாராயம் விற்பனை செய்த பெண்ணுக்கு சிறை

image

பொன்விளைந்தகளத்தூர் அடுத்த புன்னப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் இந்திரா. இவர், கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி கள்ளசாராயம் விற்பனை செய்த குற்றத்திற்காக போலீசார் இவரை கைது செய்தனர். மேலும், இதுகுறித்த வழக்கு செங்கல்பட்டு தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நேற்று இந்திராவின் மீது குற்றம் நிரூபணம் ஆனதால் அவருக்கு 2 ஆண்டு சிறை மற்றும் ரூ.5000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தனர்.

News December 27, 2024

மன்மோகன் சிங் மறைவால் ‘இந்திய நாட்டிய விழா’ ரத்து

image

மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகத்தில் தமிழக சுற்றுலாத் துறை சார்பில், இந்திய நாட்டிய விழா கடந்த 22ஆம் தேதி தொடங்கியது. இந்நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானதால் ‘இந்திய நாட்டிய விழா’ ஜன.1ஆம் தேதி வரையில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சுற்றுலாத் துறை தெரிவித்துள்ளது. ஜன.2ஆம் தேதி மாலை வழக்கம்போல் நாட்டிய விழா நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 27, 2024

செல்போன்  டவர் அமைப்பதாக மோசடி; போலீசார் எச்சரிக்கை 

image

தங்களுக்கு சொந்தமான இடத்தில் டவர் வைத்து மாதந்தோறும் வாடகை தருவதாக பொய்யாக கூறி, வங்கி விவரங்களைப் பெற்று ஏமாற்றி பணம் பறிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள் நடைபெறுகின்றது. எனவே பொதுமக்கள் எச்சரிக்க இருக்கும்படி செங்கல்பட்டு மாவட்டம் காவல்துறை சார்பில் சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

News December 27, 2024

108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பணிக்கு முகாம்

image

108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர், ஓட்டுனர் ஆகிய பணியிடங்களுக்கு, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், நாளை (டிச.28) காலை 10 – 2 மணி வரை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. இலவச தாய் – சேய் நல வாகன ஓட்டுனர் பணியிடங்களும் நிரப்பப்படவுள்ளது. மேலும் விவரங்களுக்கு, 044 2888 8060, 2888 8075, 2888 8077 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க. 

News December 27, 2024

மன்மோகன் சிங் மறைவு: அதிமுக ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு

image

தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை அதிகரித்ததைத் தொடர்ந்து, இன்று (டிச.27) செங்கல்பட்டு மாவட்டத்தில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்தார். இதையடுத்து, அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அதிமுக தலைமை தெரிவித்துள்ளது.

News December 27, 2024

மரத்தில் கார் மோதிய விபத்தில் நண்பர்கள் இருவர் பலி

image

பவுஞ்சூர் அடுத்த லத்துார் கிராமம் முதல் தெருவைச் சேர்ந்த சந்தோஷ் (30) தனது நண்பர் கார்த்திக் உடன் நேற்று மாலை மாருதி பெலினோ காரில், பவுஞ்சூரில் இருந்து மதுராந்தகம் நோக்கிச் சென்றார். ஜமீன் எண்டத்துார் கிராமத்திலுள்ள தனியார் கல்லூரி அருகே சென்றபோது, சாலையின் வலதுபுறம் இருந்த இலுப்பை மரத்தில் பலமாக மோதி கார் விபத்துக்குள்ளானது. இதில், சந்தோஷ், கார்த்திக் இருவருமே சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

News December 26, 2024

குடிபோதையில் மாடியில் இருந்து தவறி விழுந்தவர் பலி

image

கூடுவாஞ்சேரி சீனிவாசபுரம் பகுதியை சார்ந்தவர் தினேஷ்(36). கேபிள் டிவி ஆபரேட்டரான இவருக்கும் அவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு காரணமாக அதிகமாக குடித்துள்ளார். இதில் வீட்டின் மொட்டை மாடியில் இருந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் இன்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசார் விசாரிக்கின்றனர்.

News December 26, 2024

விமானத்தில் இயந்திர கோளாறு: 113 பேர் தப்பினர்

image

சென்னையில் இருந்து 107 பயணிகள் உட்பட 113 பேருடன் பெங்களூர் புறப்பட்டுச் சென்ற இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், நடுவானில் பறந்தபோது விமானத்தில் திடீர் இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக, விமானம் சென்னை விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறை விமானி தகுந்த நேரத்தில் கண்டுபிடித்ததால், விமானம் ஆபத்திலிருந்து தப்பியதோடு 113 பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.

error: Content is protected !!