India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
செங்கல்பட்டில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக டாம்கோ நிறுவனம் சார்பில் இன்று டிசம்பர் 31ஆம் தேதி ஐந்து பெண்களுக்கு தலா ரூ.2.5 லட்சம் கடனுதவியும், 5 பெண்களுக்கு 30 ஆயிரம் மதிப்பில் தையல் இயந்திரங்களை மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜ் வழங்கினார்.
அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ஆம் நாளினை சிறப்பிக்கும் பொருட்டு மாவட்ட அளவிலான பேரறிஞர் அண்ணா மிதிவண்டிப் போட்டிகள் 04.01.2025 அன்று காலை 7.00 மணிக்கு செங்கல்பட்டு, திருப்போரூர் கூட்ரோட்டிலிருந்து தொடங்கப்பட உள்ளது. மேலும் விவரங்களுக்கு, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் கைபேசி எண்ணில் 7401703461 தொடர்பு கொள்ளலாம் என செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
வண்டலுாரைச் சேர்ந்த 10 வயது சிறுமி, 2019ஆம் ஆண்டு மண்ணிவாக்கத்தைச் சேர்ந்த நாகராஜ், என்பவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். இவ்வழக்கு, செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில், நீதிபதி நசீமாபானு முன்னிலையில் நடந்து வந்தது. குற்றம் நிரூபிக்கப்பட்டதால், நாகராஜுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.3,000 அபராதமும் விதித்து, நீதிபதி நசீமாபானு, நேற்று தீர்ப்பளித்தார்.
புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு நாளை பிற்பகல் முதல் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள முக்கிய சாலைகளான ECR, OMR, GST மற்றும் பல முக்கிய சந்திப்புகள் உட்பட மொத்தம் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபடவுள்ளனர். சுமார் 180-க்கும் மேற்பட்ட மிக முக்கிய இடங்களில் ரோந்து காவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், மொத்தம் 671 போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுப்டுள்ளனர்.
பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்தர் தலைமையில் செங்கல்பட்டு பழைய பேருந்து நிறுத்தம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி இல்லாததால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.
வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தென்மேற்கு திசையில் நகர்ந்து மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் தெற்கு ஆந்திர மற்றும் வடதமிழக கடலோரப் பகுதிகளில் நிலவுகிறது. இதனால், இன்று செங்கல்பட்டு உள்ளிட்ட வடதமிழக கடலோரப் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கள் சீசன் துவங்க உள்ள நிலையில், மதுராந்தகம் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார், கள் விற்பனை தொடர்பாக எச்சரிக்கை போஸ்டர் ஒட்டி வருகின்றனர். அதில், சுற்றுவட்டார பகுதிகளில் கள் இறக்குபவர்கள், கள் விற்பனை செய்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்து சிறையில் அடைக்கப்படுவர். மேலும் அடைக்கப்படுவர் அபராதம் மற்றும் வங்கி கணக்கு முடக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வரும் ஜனவரி 14, 15, 16 தேதிகளில் தென் மாவட்டங்களுக்கு வழக்கமாக செல்லும் அனைத்து விரைவு ரயில்களிலும், டிக்கெட் முன்பதிவு முடிந்துள்ளது. பொங்கல் சிறப்பு ரயில்கள் எப்போது அறிவிக்கப்படும் என்று பயணிகள் எதிர்பார்த்து உள்ளனர். இந்நிலையில், தாம்பரம் – திருநெல்வேலி, தாம்பரம் – கன்னியாகுமரி உள்ளிட்ட 5 சிறப்பு ரயில்கள் இயக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
தாம்பரம், ஆதனுார் ஊராட்சி ஜெயலட்சுமி நகரில் வசிப்பவர்கள் செந்தில்குமார் – கலையரசி தம்பதியர். இருவருக்கும் இடையே கடந்த சில தினங்களாக கருத்து வேறுபாடு காரணமாக, அடிக்கடி சண்டை வந்ததாகக் கூறப்படுகிறது. நேற்று முன்தினம் (டிச.27) தூங்கி கொண்டிருந்த மனைவி மீது செந்தில்குமார் பெட்ரோலை ஊற்றியதோடு தன் மீதம் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார். உடல் கருகிய இருவரும் சிகிச்சை பலனின்றி நேற்று (டிச.28) உயிரிழந்தனர்.
ஆந்திர மாநிலம் செட்டிப்பள்ளியை பகுதியைச் சேர்ந்தவர் சேகர். இவர் தனது மனைவி மற்றும் உறவினர்களுடன் நேற்று காலை மாமல்லபுரத்திற்கு காரில் சுற்றுலா சென்று கொண்டிருந்தார். அப்போது மாமல்லபுரம் அடுத்த காரணை பகுதியில் திடீரென சாலையில் பாம்பு ஒன்று குறுக்கே வந்துள்ளது. காரை சாலையோரம் நிறுத்த முற்பட்டபோது, கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சேகரின் மனைவி அஞ்சலி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
Sorry, no posts matched your criteria.