India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
போகி பாண்டியான இன்று வீட்டில் உள்ள பழைய பொருட்களை எரிப்பது வழக்கமாக உள்ளது. இதனால் கடும் காற்று மாசு ஏற்படுகிறது. இந்த போகிக்கு பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற பெயரில் துணி, பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பதை விட பிழையனவாம் கோவம், வெறுப்பு களைந்து புதியனவாம் அன்பு, பாசம் வளர்ப்போம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
வியாசர்பாடியை சேர்ந்தவர்கள் சுரேஷ் ராவ் – நந்தினி தம்பதி. இவர்களுக்கு ஏழு மாத பெண் குழந்தை ஒன்று உள்ளது. குழந்தைக்கு தீடீரென உடல் நிலகுறைவு ஏற்பட்டதால் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். பின்னர் வீடு திரும்பிய நிலையில், அதிகாலையில் குழந்தை மூச்சு பேச்சில்லாமல் இருந்துள்ளது. அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக குறியுள்ளனர்.
பம்மலைச் சேர்ந்தவர் முகமது முபின். பம்மல், நாகல்கேணி, எம்.ஜி.ஆர்., தெருவில், டிங்கரிங் ஷெட் நடத்தி வருகிறார். இவரது கடையில், பெயின்டிங் மற்றும் பழுது பார்ப்பதற்காக, 5 கார்கள் நிறுத்தப்பட்டிருந்தன. நேற்று நள்ளிரவில் கடையில் தீ விபத்து ஏற்பட்டு, பொருட்கள் தீ பிடித்து எரிந்தன. தகவலறிந்து வந்த தாம்பரம் தீயணைப்புத் துறையினர், தீயை அணைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ரோஷணை காவல் ஆய்வாளர் தரணேசுவரி தலைமையிலான போலீசார், திண்டிவனம் – வந்தவாசி நெடுஞ்சாலையில், பட்டணம் கூட்டுச் சாலை அருகே நேற்று (ஜன.11) வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த காரில் புகையிலை பொருள் கடத்தியதும், அவர்கள் மதுராந்தகத்தை சேர்ந்த பூ.ஜோதிராஜ் (32), தனசேகரன் (42) என்பதும் தெரியவந்தது. மேலும், அவர்களிடமிருந்து 250 கிலோ புகையிலைப் பொருள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சென்னை மத்திய போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகத்தின் சார்பில், பல்வேறு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட போதை பொருட்களை செங்கல்பட்டு அடுத்த தென்மேல்பாக்கத்தில் உள்ள மருத்துவ கழிவுகள் எரியூட்டும் இடத்தில் எரித்து அழிக்கப்பட்டன. இதில் 1,777 கிலோ கஞ்சா, 3 கிலோ ஹாஷிஷ், 19.2 கிலோ மெத்தாம்பெட்டமைன், 3.8 கிலோ ஹெராயின், 1.3 கிலோ கொகைன் உள்ளிட்ட 2,322 கிலோ போதைப்பொருட்கள் எரித்து அழிக்கப்பட்டன.
செங்கல்பட்டு மாவட்டத்தில் 2 நாள்கள் மதுகடைகள் இயங்காது என மாவட்ட ஆட்சியர் அருள்ராஜ் தெரிவித்துள்ளார். அதன்படி, வரும் 15ஆம் தேதி திருவள்ளுவர் தினம் மற்றும் 26 ஆம் தேதி குடியரசு தினம் ஆகிய தேதிகளில் மதுகடை இயங்காது. இதேபோல், இந்திய தயாரிப்பு அயல்நாட்டு டாஸ்மாக் மதுபான கடைகளும் மூடப்படும் என தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டில் தேசிய தொழில் பழகுநர் முகாம் ஜன.20ம் தேதி நடைபெறுகிறது எனவும், இதில், மாணவர்கள் தங்களது கல்விச் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. கூடுதல் விவரங்களை அறிந்து கொள்ள செங்கல்பட்டு, மாவட்டத் திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநரை நேரிலோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது 63790 90205, 044 – 27426554 எண் மூலம் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் அருண் ராஜ் தெரிவித்துள்ளார்.
பொங்கல் பண்டிகையையொட்டி, சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் தற்போது சொந்த ஊர்களுக்கு செல்ல துவங்கியுள்ளனர். இந்நிலையில், சொந்த ஊர்களுக்கு கார் மற்றும் இதர வாகனங்களில் செல்வோருக்கு வழித்தட மாற்றம் செய்து சென்னை காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. அதன்படி தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக ஜிஎஸ்டி சாலையில் செல்வதை தவிர்த்து, ஓ.எம்.ஆர் அல்லது வண்டலூர் சாலையில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை செங்கல்பட்டு மேம்பால சாலை கடுமையாக சேதமடைந்திருந்தது. வே2 நியூஸ் செய்தி எதிரொலியாகவும், மற்ற தனியார் தொலைக்காட்சி செய்திகள் எதிரொலியாதனையடுத்து நேற்று முன்தினம் சாலை சீரமைக்கப்பட்டது. அதன்படி நேற்று காலை முதல் சாலை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்தது.
செங்கல்பட்டு வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தில், 10ம் வகுப்பு தோல்வி, தேர்ச்சி மற்றும் அதற்கும் மேலான கல்வித் தகுதிகளை பெற்று, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவர்களுக்கு தமிழக அரசு உதவித்தொகை வழங்குகிறது. இதில், விண்ணப்பிக்க மார்ச் மாதம் 10ம் தேதிக்குள், வங்கிக் கணக்கு புத்தகத்துடன் நேரில் ஆஜராகி சமர்ப்பிக்கலாம் என ஆட்சியர் அருண் ராஜ் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.