India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தொடர் விடுமுறை கருத்தில்கொண்டு, செங்கல்பட்டு காவல்துறை ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை எண் 32 (GST சாலை)-ல் புக்கத்துறை, படாளம் சாலை சந்திப்புகளில் மேம்பாலக் கட்டுமானம் மற்றும் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருவதால், இந்த பகுதிளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட கூடும். பொதுமக்கள் இந்த சாலையை கவனத்துடன் பயணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நீங்கள் புக் செய்த கேஸ் சிலிண்டர் டெலிவரி ஆக தாமதம் ஆகுதா? இனி கவலை வேண்டாம். நாம் கேஸ் சிலிண்டர் புக் செய்தால், அடுத்த 48 மணிநேரத்திற்குள் டோர் டெலிவரி செய்யவேண்டும் என்பது விதி. ஆனால் பலர் ஒரு வாரம் அல்லது 15 நாட்களுக்குப் பிறகு கூட அதைப் பெறுகிறார்கள். அவசர காலத்தில் இப்படி இழுத்தடித்தால் இனி இந்த நம்பரில் (1906, 1800-2333-555) புகார் செய்யுங்கள். ஷேர் செய்து மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்க!
செங்கல்பட்டு மக்களே, வங்கியில் பணிவாய்ப்பை எதிர்பார்ப்பவரா நீங்கள்? இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் தொழிற்பயிற்சிக்கு 750 காலிப்பணியிடங்கள் உள்ளன. ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.15,000 வரை உதவித்தொகை வழங்கப்படும். தமிழ் மொழி கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் ஆகஸ்ட் 20-க்குள் இந்த <
செங்கல்பட்டு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் உறுப்பினருக்கு 2 (PLA) காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதிவாய்ந்த நபர்கள் <
பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க ரேஷன் கார்டு, மொபைல் எண், ஆதார் அட்டை, வங்கிக் கணக்குப் பாஸ்புக், மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஆகிய ஐந்து ஆவணங்கள் போதுமானது. <
செங்கல்பட்டு மாவட்டம் (13/08/25) இன்று செங்கல்பட்டு மாமல்லபுரம் மதுராந்தகம் ஆகிய பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணி செய்யும் காவலர்கள் விவரம் கீழே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடுவார் பொதுமக்கள் ஏதேனும் அவசர தேவை என்றால் இந்த தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும். இரவு பணி செய்யும் பெண்களுக்கு இந்த செய்தியை ஷேர் செய்யுங்கள்.
கொச்சியை போல சென்னை கோவளத்தில் வாட்டர் மெட்ரோ கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது.
நீர்வளத் துறை (WRD) வாட்டர் மெட்ரோவை செயல்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கையை (DPR) தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் வருகின்றன.
இதன் முதல்கட்டமாக கூவம் நேப்பியர் பாலம் மற்றும் கோவளம் இடையேயான பக்கிங்ஹாம் கால்வாயை மீட்டெடுத்து தூர்வாரப்படும். என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை இன்று இரவு ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. DSP தலைமையில் அதிகாரிகள் செங்கல்பட்டு, மாமல்லபுரம், மதுராந்தகம் ஆகிய வட்டங்களில் உள்ள ஒன்பது காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் ரோந்து செல்ல உள்ளனர். பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
தாம்பரம் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவி தேவைப்படும் பொதுமக்கள், குறிப்பாக இரவு நேரங்களில் பணிக்கு செல்லும் பெண்கள், காவல் நிலையம் வாரியாக கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை அனைவரும் தெரிந்துகொள்ள பகிருங்கள்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தொழில்நுட்ப பிரிவில் உள்ள 41 உதவி புரோகிராமர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.Sc,BCA, MCA, M.Sc படித்த 18 வயது முதல் 37 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.35,900-1,31,500 வரை வழங்கப்படும். இப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு நடத்தப்படும். விருப்பமுள்ளவர்கள் <
Sorry, no posts matched your criteria.