Chengalpattu

News February 16, 2025

அரசு பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு

image

வாலாஜாபாத், ராஜவீதி பகுதியில் வசித்து வருபவர் பழனி. மர வியாபாரம் செய்து வரும் இவர், தனது உதவியாளர் வரதன் உடன் நேற்று (பிப்.15) வாலாஜாபாத் – தாம்பரம் சாலை சேர்க்காடு பகுதியில் உள்ள உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு பைக்கில் சாலையை கடக்க முயன்றனர். அப்போது தாம்பரத்திலிருந்து வாலாஜாபாத் நோக்கி சென்ற அரசு பேருந்து அவர்கள் மீது மோதியது. இதில், வரதன் உயிரிழந்தார். பழனி படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

News February 15, 2025

செங்கல்பட்டு மாவட்ட வன அலுவலகம் ஏப்.1இல் தொடக்கம்

image

செங்கல்பட்டு மாவட்டத்திற்கான தனித்துவமான வன அலுவலகம் அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. முன்பாக, விவசாயிகள் மற்றும் அதிகாரிகள், வனத்துறையுடன் தொடர்பு கொள்ள காஞ்சிபுரம் செல்ல வேண்டியிருந்தது. புதிய அலுவலகம் ஏப்.1இல் செயல்படத் தொடங்குவதால், விவசாயிகள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு நேரம் மற்றும் செலவு மிச்சமாகும். வனப்பகுதி அனுமதிகள், பயிர் சேத இழப்பீடு உள்ளிட்ட பணிகள் இனி செங்கல்பட்டிலேயே முடிக்கப்படும்.

News February 15, 2025

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: போக்சோ வழக்கில் கைது

image

கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையத்தில் மேற்பார்வையாளரான கருப்பசாமி, அனுபுரம் நகரிய குடியிருப்புகளில் உள்ள சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து, சிறுமிகள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். பெற்றோர்கள், சதுரங்கபட்டினம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து, கருப்பசாமியை நேற்று (பிப்.14) கைது செய்த மகளிர் போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News February 15, 2025

வாழ்வில் திருப்பம் தரும் திருப்போரூர் கோயில்

image

இயற்கை பேரிடர்களால் 6 முறை அழிவைச் சந்தித்து, 7ஆவது முறையாக திருப்போரூர் முருகன் கோவில் கட்டப்பட்டுள்ளது. இதனைக் கந்த சுவாமி கோயில் என்றும் அழைக்கின்றனர். இந்த முருகனைத் தரிசித்தால் ஆறுபடை முருகனை தரிசனப்பலன் அனைத்தும் கிடைக்கும் என்பது வரலாறு. தாரகனுடன் போர் நடந்ததால் இத்தலத்திற்கு போரூர், தாருகாபுரி, சமராபுரி என்ற பெயர்கள் ஏற்பட்டன. வாழ்வில் திருப்பம் தரும் கோயில் என்றும் சொல்லப்படும்.

News February 15, 2025

கிளாம்பாக்கம் செல்லும் பயணிகளுக்கு குட் நியூஸ்

image

விமான நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம் பேருந்து முனையம் வரை மெட்ரோ ரயிலை சாலை மேம்பாலத்துடன் இணைத்து நீட்டிப்பதன் பரிந்துரைக்கான விரிவான திட்ட அறிக்கையை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சித்திக் தலைமைச் செயலகத்தில் சமர்ப்பித்தார். வழித்தடத்தின் மொத்த நீளம் 15.46 கி.மீ. ஆகும். 13 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைய உள்ளது. இவர், ரூ.9,335 கோடி செலவில் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 15, 2025

பேருந்து – லாரி மோதி விபத்து: 5 பேர் காயம்

image

விழுப்புரத்திலிருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு சென்ற அரசு பேருந்தும், சேலத்திலிருந்து ஆவின் பால் ஏற்றிச் சென்ற லாரியும் நேற்று (பிப்.14) திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 5 பேர் லேசான காயமடைந்தனர். இதன் காரணமாக, அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த மதுராந்தகம் போலீசார், போக்குவரத்தை சீர் செய்தனர்.

News February 14, 2025

அஞ்சல் துறையில் வேலை… உடனே அப்ளை பண்ணுங்க

image

அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். செங்கல்பட்டு மாவட்டத்தில் மட்டும் 59 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச் 3ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். <>ஷேர் பண்ணுங்க<<>>

News February 14, 2025

செல்போனுக்கு சார்ஜ் போட்டுவிட்டு தூங்கியவர் பலி

image

உ.பி.யைச் சேர்ந்தவர்கள் விபின் (32), சர்வன்குமார் (25), சுதீர்வர்ஷன் (27). மூவரும் செட்டிபுண்ணியம் பகுதியில் தங்கி கட்டுமான வேலை செய்து வந்தனர். 2 நாட்களுக்கு முன்பு எப்போதும்போல் மூவரும் தங்கள் செல்போன்களை சார்ஜ் போட்டுவிட்டு தூங்கிவிட்டனர். அப்போது மின் கசிவு ஏற்பட்டதில், தீ பற்றி சர்வன்குமார் பலியானார். இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

News February 13, 2025

கல்லூரி மாணவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

image

மதுராந்தகம் அருகே உள்ள பெரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் புனித வேல் (20). நேற்று (பிப்.12) விவசாய நிலத்தில் நீர் பாய்ச்சுவதற்காக மின் மோட்டாரை ஆன் செய்தபோது, மின் கசிவு ஏற்பட்டு இவர் மீது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மேலும், மதுராந்தகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News February 13, 2025

அதிக லாபம் வரும் என ஏமாற வேண்டாம்

image

செங்கல்பட்டு மாவட்ட காவல் அலுவலகத்தில், நேற்று (பிப்.12) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் மாதாந்திர குற்ற ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில், அரசுத்துறையினர் அனைவரும் கலந்து கொண்டு செங்கல்பட்டில் அதிக பேர் பங்கு சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் வரும் என்ற போலியான செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு விஷயங்களை செங்கல்பட்டு காவல்துறை மக்களுக்கு எச்சரித்துள்ளது.

error: Content is protected !!