India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்போரூர் அடுத்த ஆலத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவர் நேற்று மாலை தன்னுடைய பிள்ளைகளை பள்ளியில் இருந்து அழைத்து வர தனது பைக்கில் சென்றார்.தண்டலம் அருகே வந்த போது வேகமாக வந்த கார் மோதி,சுரேஷ் சம்பவ இடத்திலேயே இறந்தார். மேலும் காரில் பயணம் செய்த 6 பேர் காயமடைந்தனர்.இதற்கிடையே விபத்தில் இறந்த சுரேஷின் உறவினர்கள்,பொதுமக்கள் சடலத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
செங்கல்பட்டு அருகே சென்னேரி கிராமத்தை சார்ந்தவர் மாறி 55 பாம்பு பிடிக்கும் பணியை மேற்கொண்டு வந்தார் இந்நிலையில் இவரது வீட்டின் அருகே வயல்வெளியில் கடந்த 14ஆம் தேதி பாம்பு பிடிக்க சென்ற போது கண்ணாடிவிரியன் பாம்பு கடித்ததாகவும் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார் செங்கல்பட்டு தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்
செங்கல்பட்டில், தொழில்முனைவோர்கள் 50க்கும் மேற்பட்டவர்கள், முதல்வர் மருத்தகம் அமைக்க விண்ணப்பித்த நிலையில், அதில் 20 பேர் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்டத்தில், கூட்டுறவு வேளாண்மை கடன் சங்கள் 15 இடங்களிலும், 20 பேர் என மொத்தம் 35 முதல்வர் மருந்தகம் அமைக்க உத்தரவு வழங்கப்பட்டது. இம்மருந்தகங்களை முதல்வர் ஸ்டாலின் வரும் 24ஆம் தேதி, காணொலி காட்சி வாயிலாக திறந்து வைப்பதாக கலெக்டர் அருண்ராஜ் தெரிவித்தார்.
வாரஇறுதி விடுமுறையை முன்னிட்டு, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு வரும் 21ம் தேதி 245 பேருந்துகளும், 22ஆம் தேதி 240 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. பொதுமக்கள் இந்த சேவையை பயன்படுத்தி கொள்ளுங்கள்.
அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். செங்கல்பட்டு மாவட்டத்தில் மட்டும் 59 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச் 3ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். <
கூடுவாஞ்சேரி – சிங்கபெருமாள் கோவில் ரயில் நிலையங்களுக்கு இடையே ரூ.90.74 கோடியில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தின் வலதுபுறப் பகுதியை அமைச்சா் தா.மோ. அன்பரசன் முன்னிலையில் அமைச்சர் எ.வ.வேலு நேற்று (பிப்.19) திறந்து வைத்தாா். இதன் மூலம் வெகுவாக போக்குவரத்து நெரிசல் குறையும். சுமார் 20 ஆண்டுகால காத்திருப்புக்கு நேற்று விடிவுகாலம் பிறந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். உங்கள் கருத்து என்ன?
செங்கல்பட்டில், இன்ஃப்ளூயன்ஸா தொற்று பரவி வருகிறது. இருமல், தொண்டை அலா்ஜி, காய்ச்சல், உடல் சோா்வு, உடல் வலி, தலைவலி, சளி, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்பட்டால் உடனே பரிசோதனை செய்ய வேண்டும். அறிகுறிகள் மற்றும் நோயின் தீவிரத்தைப் பொருத்து சிகிச்சையளிக்க வேண்டும். தீவிர பாதிப்புள்ள 65 வயதுக்கு மேற்பட்டவா்கள், 5 வயதுக்கு குறைவான குழந்தைகள் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ளலாம்.
மதுரவாயல், ஆலப்பாக்கத்தில் உள்ள வேலம்மாள் வித்யாலயா பள்ளியில், தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் வாரும் 22ஆம் தேதி நடக்கிறது. தமிழ், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், கணிதம், பொருளாதாரம், வரலாறு, இந்தி, அறிவியல் என 10,000 ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். தொடர்புக்கு – 8248470862, 9442568675, 8015343462. இந்த வேலைவாய்ப்பு முகாம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கிறது.
இதையடுத்து மாணவியின் பெற்றோர் செங்கல்பட்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மாணவியின் சமூக வலைதள கணக்கை வைத்து போலீசார் விசாரணை நடத்தி, அவர் சென்னை கொளத்தூரைச் சேர்ந்த சுரேஷ் குமார் (38) என்பதும் தனியார் நிறுவனத்தில் காவலாளியாகவும், பகுதி நேர ‘பைக் டாக்ஸி’ ஓட்டுநர் என்பதையும் கண்டுபிடித்தனர். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைந்தனர்.
செங்கல்பட்டு மருத்துவ கல்லூரி மாணவிக்கு கடந்த மாதம் snapchat செயலி வாயிலாக ஒருவர் தொடர்பு கொண்டுள்ளார். அந்த நபர், மாணவியை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி அந்தரங்க புகைப்படங்களையும் கேட்டிருக்கிறார். பின்னர் அந்த நபரின் பேச்சில் சந்தேகமடைந்த மாணவி வீடியோ காலில் வரும்படி அழைத்திருக்கிறார். அதற்கு மறுத்த அந்த நபர் மாணவியின் அந்தரங்க புகைப்படங்களை வெயியிட்டுவிடுவேன் என மிரட்ட தொடங்கி உள்ளார்.
Sorry, no posts matched your criteria.