Chengalpattu

News August 18, 2025

செங்கல்பட்டு: ஆதார் தொலைந்து விட்டதா? கவலை வேண்டாம்

image

செங்கல்பட்டு மக்களே உங்கள் ஆதார் கார்டு தொலைந்து விட்டதா? <>இந்த UIDA <<>>என்ற இணையத்தில் ஆதார் சேவைகளுக்கு (Aadhaar Services) என்பதை கிளிக் செய்து, ஆதார் அங்கீகார வரலாற்றை (Aadhaar Authentication History) என்பதை தேர்ந்தெடுக்கவும். அதில் Retrieve Aadhaar என்பதை கிளிக் செய்து பெயர், மொபைல் நம்பர் மற்றும் captcha, OTP எண்ணை பதிவிட்டு மீட்டெடுக்கலாம்.1947 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க

News August 18, 2025

தாம்பரம் மாநகராட்சியில் “சகவாழ்வு திட்டம்”

image

தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை, பொது சுகாதாரத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை இணைந்து செயல்படுத்தும் “சகவாழ்வு திட்டம்” தெருநாய்களுக்கான வெறிநாய் தடுப்பூசி முகாம், தாம்பரம் மாநகராட்சியில் இன்று (ஆக. 18) துவக்கி வைக்கப்பட்டது. இதில் தெருநாய்களை பிடித்து அவற்றிற்கு வெறிநாய் தடுப்பூசி போடப்பட்டது. இந்நிகழ்வில் கவுன்சிலர் யாக்கூப் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

News August 18, 2025

செங்கல்பட்டு: கரண்ட் கட்டா? இதை பண்ணுங்க

image

மழை காலம் தொடங்கி விட்ட நிலையில், கனமழையின் காரணமாக மின்மாற்றி, மின்கம்பம் சேதம் ஏற்பட்டு உங்க ஏரியாவில் மின்தடை ஏற்பட்டால் புகாரளிக்க மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. உங்கள் செல்போனில் <>இங்கே கிளிக்<<>> செய்து “TNEB Mobile App” பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். அல்லது 94987 94987 என்ற கட்டணமில்லா எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் பதிவு செய்யலாம். ஷேர் பண்ணுங்க

News August 18, 2025

செங்கல்பட்டு: வங்கியில் வேலை, ரூ.93,000 சம்பளம்

image

மத்திய பொதுத்துறை வங்கியான யூனியன் பேங்கில் காலியாக உள்ள 250 மேனேஜர் பணியிடங்கள் நிரப்பபடவுள்ளன. இதற்கு MBA முடித்த, 25 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.93,960 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து, வரும் ஆகஸ்ட் 25-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான எழுத்து தேர்வு சென்னையில் நடைபெற உள்ளது. வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.

News August 18, 2025

செங்கல்பட்டு: வங்கியில் வேலை, ரூ.93,000 சம்பளம்

image

மத்திய பொதுத்துறை வங்கியான யூனியன் பேங்கில் காலியாக உள்ள 250 மேனேஜர் பணியிடங்கள் நிரப்பபடவுள்ளன. இதற்கு MBA முடித்த, 25 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.93,960 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து, வரும் ஆகஸ்ட் 25-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான எழுத்து தேர்வு சென்னையில் நடைபெற உள்ளது. வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.

News August 18, 2025

தாம்பரம் – நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்

image

தாம்பரம் – நாகர்கோவில் இடையே பண்ருட்டி வழியாக இன்று (ஆக.18) அதிவிரைவு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி வண்டி எண் (06011) தாம்பரத்தில் இருந்து மாலை 3:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் பண்ருட்டி, சிதம்பரம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, நெல்லை, வள்ளியூர் வழியாக மறுநாள் காலை 5:15 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.

News August 17, 2025

செங்கல்பட்டு இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக, காவல்துறை இன்று இரவு ரோந்துப் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு, மாமல்லபுரம், மற்றும் மதுராந்தகம் ஆகிய மூன்று வட்டங்களுக்குட்பட்ட ஒன்பது காவல் நிலையங்களில், துணை காவல் கண்காணிப்பாளர் (DSP) தலைமையில் காவல்துறையினர் ரோந்து செல்லவுள்ளனர்.

News August 17, 2025

ஆத்தூர் சுங்கச்சாவடியில் அனுமதி இலவசம்

image

தொடர் விடுமுறை முடிந்து தென் மாவட்டங்களிலிருந்து சென்னை திரும்பும் மக்கள் ஒரே நேரத்தில் படையெடுத்ததால், செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்தை சீரமைக்க, அங்குள்ள வாகனங்கள் கட்டணமின்றிச் செல்ல இலவசமாக அனுமதிக்கப்படுகின்றன. இதன் மூலம் நெரிசல் குறைந்து, போக்குவரத்து சீராகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

News August 17, 2025

செங்கல்பட்டு: திடீர் மின்தடையா ? உடனே CALL பண்ணுங்க!

image

மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே 9498794987 என்ற பிரத்யேக TNEB சேவை எண் பயன்பாட்டில் உள்ளது . இதன்மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE

News August 17, 2025

செங்கல்பட்டு: செல்போன் தொலைந்தால் கவலை வேண்டாம்!

image

செல்போன் தொலைந்து போனாலோ அல்லது திருடு போனாலோ இனி கவலை இல்லை. சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <>இணையத்தில் <<>> செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை உள்ளிட்டு புகார் அளிக்கலாம். இதில் புகாரளித்தால் முதலில் செல்போன் செயலிழக்க செய்யப்படும். பின் செல்போனை டிரேஸ் செய்து கண்டறிந்து மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இதன் மூலம் 5 லட்சம் மொபைல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!