Chengalpattu

News February 27, 2025

முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கைது

image

திருக்கழுக்குன்றம் அருகே அதிமுக பேரூராட்சி செயலாளர் தாக்கப்பட்டதை கண்டித்து அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டிருந்தனர். இதற்கு காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், 300க்கும் மேற்பட்ட போலீசார் போராட்டம் நடைபெறும் இடத்தில் குவிக்கப்பட்டனர். அப்போது, அதிமுக சாலை மறியலில் ஈடுபட முயன்றபோது, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மாவட்ட செயலாளர் ஆறுமுகம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

News February 27, 2025

யூனியன் வங்கியில் வேலை: அப்ளை பண்ணுங்க

image

பொதுத்துறையை சேர்ந்த யூனியன் வங்கியில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘அப்ரென்டிஸ்’ பிரிவில் தமிழகம் முழுவதும் 122 காலிப் பணியிடங்கள் உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க எதாவது ஒரு பட்டப்படிப்பு படித்திருந்தால் போதும். 20 -28 வயது உடையவராக இருக்க வேண்டும். மாதம் ரூ. 15 ஆயிரம் வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் வரும் மார்ச் 5ஆம் தேதிக்குள் <>விண்ணப்பிக்க <<>>வேண்டும். ஷேர் பண்ணுங்க

News February 27, 2025

100 CCTV கேமராக்களை ஆய்வு செய்து கைது

image

காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் பூட்டி இருக்கும் வீடுகளின் கதவுகளை உடைத்து திருட்டில் ஈடுபட்ட பலே திருடர்கள் 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தனிப்படை போலீசார் காஞ்சிபுரத்திலிருந்து சென்னை வரையில் உள்ள 100க்கு மேற்பட்ட CCTV கேமராக்களை ஆய்வு செய்து பல்லாவரம் பம்மல் பகுதியைச் சதாம் உசேன், சுரேஷ், பரிபாய்தீன் ஆகியோரை கைது செய்துள்ளனர்.

News February 26, 2025

பத்திரிக்கையாளர்கள், பவுன்சர்கள் இடையே வாக்குவாதம்

image

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் 2ஆம் ஆண்டு தொடக்க விழா மாமல்லபுரம் பூஞ்சேரியில் உள்ள சொகுசு விடுதியில் இன்று (பிப்.26) நடைபெற்று வருகிறது. விழா அரங்கிற்குள் செல்ல செய்தியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், செய்தியாளர்கள் மற்றும் பவுன்சர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் பவுன்சர்கள் தாக்கியதில் பத்திரிகையாளர் இளங்கோவன் நிலைகுலைந்தார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

News February 26, 2025

விஜய் வீட்டிற்குள் செருப்பு வீசிய நபரால் பரபரப்பு

image

நீலாங்கரையில் உள்ள த.வெ.க. தலைவர் விஜய் வீட்டிற்குள் செருப்பு வீசிய நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இளைஞர் ஒருவர் திடீரென குழந்தையின் செருப்பை விஜயின் வீட்டிற்குள் வீசினார். அங்கிருந்த காவலாளிகள் அந்த நபரை அங்கிருந்து வெளியேற்றினார்கள். விசாரணையில், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது. மாமல்லபுரத்தில் விஜய் கட்சியின் 2ஆம் ஆண்டு தொடக்க விழா இன்று நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

News February 25, 2025

மயங்கி விழுந்து மூச்சு திணறி இளைஞர் பலி

image

செங்கல்பட்டு அண்ணாநகர் 9-வது தெருவை சேர்ந்தவர் துரை. இவர் அப்பகுதியிலுள்ள மெக்கானிக் கடையில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் காலை பணிக்கு செல்வதற்காக இவர் மேற்கண்ட பகுதிக்கு வந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அவருக்கு மயக்கம் ஏற்பட்டு ஜி.எஸ்.டி., சாலையோரம் மூடப்படாத கால்வாயில் இருந்த கழிவு நீரில் மூழ்கி மூச்சு திணறி உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 25, 2025

தீராத நோய்களை தீர்க்கும் மருந்தீஸ்வரர் திருக்கோயில்

image

செங்கல்பட்டு திருக்கச்சூரில் அமைந்திருக்கும் அருள்மிகு கச்சபேஸ்வரர், மருந்தீஸ்வரர் திருக்கோயில், சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 259வது தேவராத்தலமாகும்.இங்கு அர்ச்சனை செய்தால் தீராத நோய்கள், துன்பங்கள், கிரஹ தோஷங்கள், கண் நோய்கள் தீரும்.சுவாமிக்கு வஸ்திரங்கள் சாத்தி அபிஷேகம் செய்து வழிபடலாம். சிவராத்திரிக்கு இந்த கோவிலுக்கு சென்று சிவபெருமானின் அருளை பெறுங்கள்.

News February 25, 2025

பழங்குடியினர் இளைஞர்களை தேர்வு செய்யும் பணி

image

செங்கல்பட்டு கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்ட அறிக்கை, செங்கல்பட்டு மாவட்டத்தை மையமாகக் கொண்டு, திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான பழங்குடியினர் இளைஞர்களை தேர்வு செய்யும் பணி, செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக, மக்கள் குறை தீர்க்கும் கூட்ட அரங்கில், இன்று (பிப்.25) காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடக்கிறது. தகுதியுள்ளவர்கள் ஆவணங்களுடன் பங்கேற்று பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

News February 25, 2025

POST OFFICE JOB- விண்ணப்பித்தால் போதும் சூப்பர் வேலை

image

அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். செங்கல்பட்டில் மட்டும் 53 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.29,380 வரை சம்பளம் வழங்கப்படும். 18- 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச் 3ஆம் தேதிக்குள் <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News February 25, 2025

குறைதீர் கூட்டத்தில் 497 மனுக்கள்

image

செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், மாவட்ட வருவாய் அலுவலர் சேக் முகையதீன் தலைமையில், வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. இதில் உதவி ஆணையர் கலால் ராஜன்பாபு உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 497 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க, மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவிட்டார்.

error: Content is protected !!