Chengalpattu

News March 1, 2025

ஹோட்டல் மாஸ்டர் பணியின்போது உயிரிழப்பு 

image

செங்கல்பட்டு மாவட்டம் புத்திரன்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் குமார். இவர், கருங்குழி பகுதியில் உள்ள தனியார் உணவகத்தில் பணிபுரிந்து வந்தார். நேற்று (பிப்.28) காலை பணியின்போது திடிரென மயங்கி உள்ளார். சக பணியாளர்கள் அவரை மீட்டு மதுராந்தகம் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சோதித்தபோது, அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். போலீசார் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News February 28, 2025

செங்கையில் கனிமங்கள் எடுக்க விண்ணப்பிக்கலாம்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில், குவாரி குத்தகைதாரர்கள் கனிமங்களை எடுத்துச் செல்ல, ‘இ-பெர்மிட்’க்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். 25ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்ட இப்பணியால், அனுமதி சீட்டுகள் விரைவாக கிடைக்கும். விதிகள் பின்பற்றப்படாவிட்டால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் கூறியுள்ளார். 

News February 28, 2025

நினைத்ததை நிறைவேற்றும் சாய் விபூதி பாபா

image

சிட்லபாக்கம் அஸ்தினாபுரம் பகுதியில், எம்.சி. நகர் உள்ளது. அங்கு வெங்கட்ராமன் நகரில் முதல் மெயின் ரோட்டில் சாய் விபூதி பாபா ஆலயம் உள்ளது. இக்கோவிலில், எங்கும் நடக்காத அதிசயமாக அடிக்கடி விபூதி தானாகவே கொட்டுகிறதாம். மேலும், இங்கு தினமும் காலை 7 மணிமுதல் இரவு 9 மணிவரை சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. வியாழன் அன்று கூடுதல் சிறப்பு. நினைத்ததை நிறைவேற்றும் பாபாவாக மக்களால் நம்பப்படுகிறது. ஷேர் பண்ணுங்க.

News February 28, 2025

விமான நிலையத்தில் மலிவு விலை உணவகம் திறப்பு

image

மீனம்பாக்கம் விமான நிலையத்தில், மத்திய அரசின் ‘உடான் யாத்ரி கபே’ திட்டத்தின் மூலம் மலிவு விலை உணவகம் திறக்கப்பட்டுள்ளது. ஒன்றிய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு, நேற்று (பிப்.27) இத்திட்டத்தை பயணிகளுக்காக தொடங்கி வைத்தார். இதில், காபி, டீ – ரூ.10, தண்ணீர் பாட்டில் – ரூ.10, சமோசா ரூ.20, ஸ்வீட் ரூ.20க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News February 28, 2025

SBI வங்கியில் வேலை: கைநிறைய சம்பளம்

image

SBI வங்கியில் ஓய்வு பெற்றவர்களுக்கான 88 வேலைவாய்ப்பு வெளியாகியுள்ளது. வங்கி சேவைகள் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் மற்றும் கடன் / தணிக்கை / அந்நிய செலாவணி ஆகியவற்றில் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். விண்ணப்பிக்கும் நபர்கள் 60 – 63 வயது வரை இருக்கலாம். ஒப்பந்த முறையில் பணியமர்த்தப்படுவர். தகுதி அடிப்படையில் ரூ.45,000 – ரூ.80,000 வரை மாதம் சம்பளம் வழங்கப்படும். <>ஷேர் பண்ணுங்க <<>>

News February 28, 2025

நிர்வாகி மீது தாக்குதல்: அதிமுக சார்பில் போராட்டம்

image

திருக்கழுக்குன்றம் பேரூராட்சி அதிமுக செயலாளர் தினேஷ்குமாரை கடந்த 25ஆம் தேதி வினோத், அப்பு உள்ளிட்டோர் பயங்கர ஆயுதங்கள் கொண்டு சரமாரியாக வெட்டினர். இதனால் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனை கண்டித்து, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. அப்போது, போலீசார் ஜெயக்குமார் உள்ளிட்ட 50 பேரை குண்டு கட்டாக கைது செய்தனர்.

News February 28, 2025

இயா்போன் பயன்பாடு செவித் திறனை பாதிக்கும்

image

ஹெட்போன், இயா்போன் போன்ற கருவிகளை நீண்ட நேரம் பயன்படுத்தினால் செவித்திறன் பாதிக்கும் என்று பொது சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. எனவே செங்கல்பட்டு மக்களே அதன் பயன்பாட்டை கூடுமான வரையில் தவிா்க்க வேண்டும். 50 டெசிபல் அளவுக்கு குறைவாக வைத்து பயன்படுத்த வேண்டும். இயா்போனை 2 மணி நேரத்துக்கும் மேல் பயன்படுத்துவதைத் தவிா்க்க வேண்டும். குழந்தைகள் கைப்பேசி, தொலைக்காட்சியை அதிக ஒலியுடன் பாா்க்கக் கூடாது.

News February 27, 2025

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயில்

image

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் உள்ள பிரபலமான வேதகிரீஸ்வரர் கோயில் 160 மீட்டர் உயரம் கொண்ட வேதகிரி மலையின் மேல் அமைந்துள்ளது. கோயிலுக்கு தினமும் பகல் நேரத்தில் இரண்டு கழுகுகள் வந்து சென்றது அங்கு ஒரு அரிய நிகழ்வு. நகரின் தென்மேற்கு முனையில் நீர்தொட்டி சிகிச்சைமிக்கதாக கருதப்படுகிறது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இலட்ச தீப நிகழ்ச்சியில் கொண்டாடப்படும் சிப்பிகள் கண்டுபிடிக்கப்படுகின்றன.

News February 27, 2025

செல்வத்தை அள்ளித்தரும் அருள்மிகு காளத்தீஸ்வரர் கோவில்

image

செங்கல்பட்டு காட்டாங்குளத்தூரில் அமைந்துள்ளது அருள்மிகு காளத்தீஸ்வரர் கோவில். திருவண்ணாமலை தலத்தில் அருணாசலேஸ்வரரை வழிப்பட்டு திரும்பிய ராகுவும் கேதுவும் ஓர் இரவு இங்கே தங்கி ஈசனை வழிபட்டதாக ஐதீகம்.இங்கு நந்திதேவருக்கு நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் வீட்டில் ஆபரணங்கள் சேரும் என்பது நம்பிக்கை. தினந்தோறும் நடைபெறும் பள்ளியறை பூஜை வைபவத்தை தரிசித்தால் குழந்தை வரம் வாய்க்கும் என்பது நம்பிக்கை.

News February 27, 2025

செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: பள்ளி மாணவி அசத்தல்

image

செங்கல்பட்டு சதுரங்க கழகம் சார்பில், மாவட்ட அளவில் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி செங்கல்பட்டில் நடந்தது. இதில், 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இந்தப் போட்டியில், செங்கல்பட்டு வித்யாசாகர் குளோபல் பள்ளி மாணவி நித்யா, 25 வயதுக்கும் குறைவான பிரிவில் மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றார். இவருக்கு சுழற்கோப்பை, பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இவர், மாநில போட்டிக்கு தேர்வானார்.

error: Content is protected !!