Chengalpattu

News October 17, 2024

பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும்

image

செங்கல்பட்டு மாவட்ட பள்ளி, கல்லூரிகள் இன்று வழக்கம் போல் இயங்கும் என மாட்ட ஆட்சியர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்தது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று மற்றும் நேற்று முன்தினம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. நேற்று மாலை ஓரளவு மழை சீரானதால், இன்று வழக்கம் போல் பள்ளி, கல்லூரிகள் இயங்கும். ஷேர் பண்ணுங்க

News October 17, 2024

ஊராட்சியில் மழை நிவாரணப் பணிகளை ஆட்சியர் ஆய்வு

image

முடிச்சூர் ஊராட்சியில் ஒவ்வொரு ஆண்டும் மழையின் போது அமுதம் நகர், மகாலட்சுமி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் மழை வெள்ளத்தில் பாதிக்கப்படும். இந்நிலையில் தற்போது பெய்து வரும் மழையில் பாதிப்புகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ், ஊராட்சி அலுவலகத்தில் அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உடன் ஆலோசனை மேற்கொண்டார். உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி ஆட்சியர் அறிவுறுத்தினார்.

News October 16, 2024

செங்கல்பட்டு மாவட்டத்தில் இரவில் வந்து பணி அதிகாரிகளின் விவரம்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் (16.10.2024) இன்று இரவு ரோந்து பார்க்கும் அதிகாரிகளின் விவரம் காவல் நிலையம் வாரியாக மக்களின் இலகுவான தொடர்புக்கு வெளியிடப்படுகிறது. https://x.com/SP_chengalpattu/status/1846528998740054263?t=sy7F8mAKmA41qgemUIuqTg&s=08 என்ற எக்ஸ் பக்கத்தில் விவரமாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் விவரத்தை தெரிந்து கொள்ளலாம்.

News October 16, 2024

எக்ஸ் பக்கத்தில் புகாரையடுத்து துணை முதல்வர் ஆய்வு

image

தாம்பரம் அருகே அகரம் தென் ஊராட்சி கஸ்பாபுரம் கிருஷ்ணா நகர் பகுதியில் மழைநீர் சாலையில் தேங்கி இருப்பதாகவும், ஊராட்சி நிர்வாகம் கண்டு கொள்வதே இல்லை எனவும் அப்பகுதியைச் சார்ந்த குடியிருப்பு வாசி ஒருவர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இதனையடுத்து இன்று மாலை திடீரென கஸ்பாபுரத்தில்ஆய்வு மேற்கொண்ட துணை முதல்வர் மழை நீரை அகற்ற உத்தரவிட்டார்.

News October 16, 2024

மோசமான வானிலை காரணமாக 6 விமானங்கள் ரத்து

image

சென்னை விமான நிலையத்தில் தொடர் மழை மற்றும் புயல் எச்சரிக்கை காரணமாக, விமான பயணிகள் எண்ணிக்கை மிகவும் குறைந்தது. இதன் காரணமாக, இன்று சென்னை விமான நிலையத்தில் 3 வருகை விமானங்கள், 3 புறப்பாடு விமானங்கள் என மொத்தம் 6 விமானங்கள் இதுவரை ரத்து செய்யப்பட்டுள்ளன. மதுரை, சேலம், சீரடி போன்ற இடங்களுக்கு செல்லும் உள்நாட்டு விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஷேர் பண்ணுங்க

News October 16, 2024

விமான நிலையத்தில் போக்குவரத்து சேவை தொடக்கம்

image

பருவமழை பெய்து வருவதால், சென்னை விமான நிலைய பயணிகளின் கோரிக்கையை ஏற்று, நேற்று இரவு முதல் மாநகர பேருந்துகள் சென்னை விமான நிலையத்திற்குள் உள்நாட்டு விமான நிலைய பகுதி, சர்வதேச விமான நிலைய பகுதி ஆகிய இடங்களுக்குள் வந்து விமான பயணிகளை ஏற்றி செல்கின்றன. இது, விமான பயணிகள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தொடர்ந்து இயக்கப்பட வேண்டும் என்ற விமான பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஷேர் பண்ணுங்க

News October 16, 2024

கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை விவரம்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று (அக்.15) காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை மழை பதிவான விவரம் (மி.மீ.): செங்கல்பட்டு 32, திருப்போரூர் 59.50, கேளம்பாக்கம் 62.40, திருக்கழுக்குன்றம் 30.40, மாமல்லபுரம் 87, மதுராந்தகம் 31.70, செய்யூர் 13.10, தாம்பரம் 65.50 என மொத்தம் 381.60 மழை பதிவாகியுள்ளது. சராசரியாக 47.70 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. மகாபலிபுரத்தில் அதிகபட்சமாக 87 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

News October 16, 2024

செங்கல்பட்டு மாவட்டத்தின் 23 ஏரிகள் நிரம்பின

image

செங்கல்பட்டு மாவட்டத்தில், நீர்வளத்துறை கட்டுப்பாட்டில், 528 ஏரிகள் உள்ளன. இதில், 23 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. மேலும், 51 ஏரிகள் 76%, 99 ஏரிகள் 51%, 172 ஏரிகள் 26%, 183 ஏரிகள் 25% நீர் நிரம்பி வருகின்றன. இதனால், ஏரிகளை கண்காணிக்கும் பணியில், நீர்வளம், வருவாய் மற்றும் உள்ளாட்சி துறை ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பருவமழை தொடங்கியதால், நீர் இருப்பு மற்றும் நீர் வரத்து அதிகரிக்கும்.

News October 16, 2024

குடியிருப்பு பகுதியில் புகுந்த 10 அடி நீள மலைப் பாம்பு

image

பல்லாவரம் அடுத்த பொழிச்சலுாரில் உள்ள குடியிருப்புப் பகுதியில், 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பதுங்கி இருப்பதாக அப்பகுதி மக்கள் தாம்பரம் தீயணைப்பு துறையினருக்கு தவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள், 2 மணிநேரம் போராடி பாம்பை பிடித்து கிண்டி வனத்துறையிடம் ஒப்படைத்தனர். பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துக்களைப் பிடிக்க 044 22200335 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்து.

News October 16, 2024

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று அதிக அளவு மழை பெய்யும்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று அதிக அளவு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்படுபவர்களுக்கு உணவு, பிரட், பிஸ்கட், தண்ணீர், மருத்துவர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அவசர உதவி, புகார்கள் மற்றும் தகவல்களை கட்டணமில்லா தொலைபேசி எண்: 1077, தொலைபேசி : 044-2742 7412, 044-2742 7414, வாட்ஸ் அப்: +91 94442 72345 தெரிவிக்கலாம்.