India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்போரூர் கந்த சுவாமி கோயிலில், நாள்தோறும் காலை 6மணி முதல் மதியம் 12:30மணி வரையும், மாலை 3:30மணி முதல், இரவு 8:30மணி வரையும் கோயில் நடை திறக்கப்பட்டு சாத்தப்படும். இந்நிலையில் வரும் செப். 7 ந்தேதி சந்திர கிரகணம் என்பதால் காலை 6:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, பகல் 1 மணிக்கு நடை சாத்தப்படும். அதன் பின்னர் மறுநாள் 8-ந்தேதி காலை 6 மணிக்கு நடை திறக்கப்படும் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று(செப்.02) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ள இடங்கள்.
▶️ ஐ.எம்.ஏ ஹால் மேற்கு தாம்பரம்
▶️ இந்திரா நாராயண மஹால், செங்கல்பட்டு
▶️ பெருக்கரணை சமுதாயக்கூடம், சித்தாமூர்
▶️ நூலக கட்டடம், அச்சரப்பாக்கம்
▶️ கணேஷ் மகால், திருப்போரூர்
▶️ கிராம ஊராட்சி மன்ற அலுவலகம், காட்டங்கொளத்தூர்
பொதுமக்கள் நேரில் சென்று மனுக்களை அளித்து பயன்பெறலாம்
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பிறதுறை பணிகளைத் திணிப்பது, வாக்கி-டாக்கி மூலம் திட்டப் பணிகளை ஆய்வு செய்வதைத் தவிர்ப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. மாவட்டச் செயலாளர் குணசேகரன் தலைமையில், மாவட்டத் தலைவர் சுதர்சன் முன்னிலையில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது
செங்கல்பட்டு மாவட்டத்தில் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக, காவல்துறை இன்று இரவு ரோந்துப் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு, மாமல்லபுரம், மற்றும் மதுராந்தகம் ஆகிய மூன்று வட்டங்களுக்குட்பட்ட ஒன்பது காவல் நிலையங்களில், துணை காவல் கண்காணிப்பாளர் (DSP) தலைமையில் காவல்துறையினர் ரோந்து செல்லவுள்ளனர்.
செங்கல்பட்டு மக்களே இனி எந்தவொரு வருவாய்த் துறை அலுவலத்திற்கும் நேரில் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. பட்டா மாறுதல் விண்ணப்பிக்க, பட்டா- சிட்டா புலப்பட விவரங்களை பார்வையிட அதை சரி பார்க்க, மேலும் பட்டா விண்ணப்பித்தலின் நிலையை இந்த <
செங்கல்பட்டு, சிங்கப்பெருமாள்கோவில் பகுதியைச் சேர்ந்த திமுக நிர்வாகியும், தொழிலதிபருமான ரித்தீஸ், நேற்றிரவு குடும்பத்தினருடன் மகன் வீட்டிற்குச் சென்று இன்று காலை வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 140 பவுன் தங்க நகை கொள்ளை போனது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
செங்கல்பட்டு மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில், அச்சிறுப்பாக்கம், திருக்கழுக்குன்றம், திருப்போரூர் உள்ளிட்ட ஊராட்சி ஒன்றியங்களில், அலுவலக உதவியாளர், பதிவறை எழுத்தர் உள்ளிட்ட பணிக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. 8ம் வகுப்பு தேர்ச்சி போதும். மாதம் ரூ.15,700-50,000 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இன்று முதல் செ.30ம் வரை <
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் உள்ள இரண்டாவது அலகு, தொழில்நுட்ப பராமரிப்புப் பணிகள் காரணமாக இன்று முதல் 75 நாட்களுக்கு மின் உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆலையின் 220 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட முதல் அலகு, கடந்த எட்டு ஆண்டுகளாக தொழில்நுட்பக் கோளாறு காரணமாகச் செயல்படவில்லை. தற்போது, இரண்டாவது அலகும் நிறுத்தப்பட்டதால், மொத்த மின் உற்பத்தியும் தடைபட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில், அச்சிறுப்பாக்கம், திருக்கழுக்குன்றம், திருப்போரூர் உள்ளிட்ட ஊராட்சி ஒன்றியங்களில், அலுவலக உதவியாளர், பதிவறை எழுத்தர் உள்ளிட்ட பணிக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. 8ம் வகுப்பு தேர்ச்சி போதும். மாதம் ரூ.15,700-50,000 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இன்று முதல் செ.30ம் வரை <
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்தில் உள்ள சிறுதாவூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். போதிய இடவசதி, வகுப்பறைகள், கழிப்பறை மற்றும் விளையாட்டு மைதானம் இல்லாததால் மாணவர்கள் சிரமப்பட்டனர். மாவட்ட ஆட்சியர் ஆய்வின் பேரில், புதிய கட்டிடம் கட்ட ரூ.2.26 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.