India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
செங்ல்பட்டில் இன்று இரவு 7 மணி வரை இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட தமிழக கடலோர பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிழவுவதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 3 தினங்களுக்கு ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறைமலை நகர் அண்ணா சாலையில் உள்ள அரசு மதுபானக்கடையில் இன்று பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டது. கடையிலிருந்து புகை வருவதைக் கண்டு மறைமலை நகர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், தீயை அணைத்தனர். ஃப்ரிஜில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரிந்தது. இச்சம்பவம் குறித்து மறைமலை நகர் போலிசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மறைமலை நகரில், ஜீவன் மருத்துவமனையின் 2ஆவது கிளை நேற்று திறக்கப்பட்டது. திறப்பு விழாவில், அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு திறந்து வைத்தார். இந்நிகழ்வில், காஞ்சிபுரம் எம்.பி. க.செல்வம், செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன், செங்கல்பட்டு நகர்மன்ற தலைவர் தேன்மொழி நரேந்திரன், மருத்துவமனை நிறுவனர் டாக்டர் ஓ.வி.ஜெயகுமார், நகர்மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், தமிழகம் முழுவதும் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் (அடுத்த 3 மணி நேரத்திற்கு) பகல் 1 மணி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டிலிருந்து வெளியே செல்வோர் குடை எடுத்துச் செல்லவும். ஷேர் பண்ணுங்க
ரத்தினமங்கலத்தைச் சேர்ந்த 17 வயது பள்ளி மாணவனை, நேற்று மாலை வண்டலூரில் 5 பேர் கடுமையாக தாக்கி கத்தியால் வெட்டினர். இந்த சம்பவம் தொடர்பாக கிளாம்பாக்கம் போலீசார் 5 பேரை கைது செய்து விசாரணை செய்தனர். அதில், பெண்ணை காதலிப்பதில் ஏற்பட்ட தகராறில் தாக்கியதாக தெரியவந்தது. இந்த விவகாரம் தொடர்பாக பெருங்களத்தூரை சேர்ந்த திவாகர் (18) சஞ்சய் (18), கிரிதரன் (18) மற்றும் 2 சிறுவர்களை கைது செய்தனர்.
மாமல்லபுரம் கலங்கரை விளக்கம் காணும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை, கடந்த 10 ஆண்டுகளில் 300 சதவீதமாக அதிகரித்துள்ளதாக இந்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மாமல்லபுரம் கலங்கரை விளக்க மேல்தளத்திலிருந்து, சுற்றுபுற அழகை, பறவை பார்வையில் கண்டு ரசிக்கலாம் என்பதால், பயணிகள் கலங்கரைவிளக்க சுற்றுலாவிற்கு ஆர்வம் காட்டுகின்றனர். உங்களுக்கு கலங்கரை விளக்கம் பிடிக்குமா?
பல்லாவரத்தில் இன்று மாலை செங்கல்பட்டு மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலுக்கான செயல்திட்டங்கள் மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.
சென்னை விமான நிலையத்தில் சர்வதேச முனையத்திலிருந்து, உள்நாட்டு முனையத்திற்கு டிரான்சிட் பயணிகள் வரும் வழியில் உள்ள 7 அடி உயரம் 3 அடி அகலம் கொண்ட கண்ணாடி கதவு திடீரென உடைந்து நொறுங்கியது. இதையடுத்து, விமான நிலைய அதிகாரிகள், அந்த வழியை மூடிவிட்டு, பயணிகளை வேறு வழியாக அனுப்பி வருகின்றனர். சென்னை விமான நிலையத்தில் கண்ணாடிகள் உடைவது, தொடர்ந்து வருவதால் பரபரப்பு உள்ளது.
இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 17 ராமேஸ்வரம் மீனவர்கள், இலங்கையிலிருந்து ஏர் இந்தியா பயணிகள் விமானம் மூலம் சென்னை வந்தனர். சென்னை விமான நிலையத்திற்கு வந்த மீனவர்களை, தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்று, அரசு ஏற்பாடு செய்திருந்த வாகனங்களில் அவரவர் சொந்த ஊரான ராமேஸ்வரத்திற்கு அனுப்பி வைத்தனர். இலங்கையில் மீட்கப்பட்டதற்காக மீனவர்கள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.
மாமல்லபுரம் போலீஸ் குடியிருப்பு வளாக கட்டடத்தில், நேற்று முன்தினம் இரவு 7:30 மணிக்கு மர்ம பொருள் பலத்த ஓசையுடன் வெடித்து சிதறியது. இதில், கட்டட சுவர் சிதறி, வீடுகளின் ஜன்னல்கள் உடைந்தன. தொடர்ந்து, வெடி விபத்து ஏற்பட்ட இடத்தில், வெடிகுண்டு தடுப்பு பிரிவினர், தடய அறிவியல் துறையினர் ஆகியோர் நேற்று சோதனை நடத்தினர். வெடித்தது வெடிகுண்டுதானா? என்பதை, ஆய்வுக்கு பின்னரே தெரிவிக்க முடியும் என தெரிவித்தனர்.
Sorry, no posts matched your criteria.