India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் மேல்மருவத்தூர் லட்சுமி பங்காரு கல்லூரியில், வரும் 26ஆம் தேதி அமைச்சர் தலைமையில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் 200க்கும் மேற்பட்ட முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 50,000 காலியிடங்களுக்கு நிரப்ப உள்ளனர். காலை 9 மணி முதல் 3 மணி வரை நடைபெற உள்ளது. 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். ஷேர் பண்ணுங்க
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று (22.10.2024) மாலை 3.00 மணியளவில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவு மையத்தில் “குறை கேட்பு கூட்டம்” குரு-சிறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையிலும், மாவட்ட ஆட்சியர் மற்றும் அனைத்து துறை உயர் அலுவலர்கள் முன்னிலையிலும் நடைபெற உள்ளது.
ஓடிசா மாநிலத்திலிருந்து, பிளாஸ்டிக் தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று, ஓஎம்ஆர் சாலையில் பாண்டிச்சேரி நோக்கி சென்றது. அப்போது பையனூர் பகுதியில் பின்னால் வந்து கார்களுக்கு வழிவிடுவதற்காக சாலையோரம் ஒதுங்கியதாக தெரிகிறது. அப்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 2023-24 கல்வியாண்டில் ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு கல்வி பயின்று பொது தேர்வு எழுதி முதல் 3 இடங்களை பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் வழங்கினார். உடன் அரசு அதிகாரிகள் பலர் இருந்தனர்.
தீபாவளி பண்டிகை வரும் 31ஆம் தேதி தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ள நிலையில் பொதுமக்கள் தங்களது சொந்த ஊர் செல்வதற்காக வரும் அக்.28, 29, 30 ஆகிய தேதிகளில் கிளாம்பக்கம், கோயம்பேடு மற்றும் மாதவரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மொத்தம் 14,086 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
செங்கல்பட்டு பேருந்து நிலையத்தில் இருந்து திருப்பதி வரை காஞ்சிபுரம், அரக்கோணம் வழியாக காலை 4.20 மணிக்கும், பிற்பகல் 12.00 மணிக்கும் செல்லும் காற்று மாசுபாடு இல்லாத பேருந்தினை மக்களின் பயன்பாட்டிற்காக செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன், நகர்மன்ற தலைவர் தேன்மொழிநரேந்திரன் ஆகியோர் கொடியசைத்து துவங்கி வைத்தனர். அந்த பேருந்தில் பழைய பேருந்து நிலையம் வரை பயணச்சீட்டு பெற்று பயணித்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருணா குளம் பகுதியச் சேர்ந்த பார்த்திபன் (36). இவருடைய அம்மாவின் இரண்டாவது கணவர் கோபால் (68). இன்று காலை கோபாலுக்கும், பார்த்திபனுக்கும் இடையே மது போதையில் ஏற்பட்ட தகராறில் கோபால் கோடாரியை கொண்டு பார்த்திபனின் தலையில் தாக்கியுள்ளார். இதில், சம்பவ இடத்தில் பார்த்திபன் உயிரிழந்தார். மைது குறித்து மதுராந்தகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்ட சுகாதாரத் துறையில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் மற்றும் பல்நோக்கு பணியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் உள்ள 14 இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இன்று மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். https://chengalpattu.nic.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.
விக்கிரவாண்டியில் 27.10.2024 அன்று நடைபெறும் தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் கொள்கை திருவிழா அழைப்பிதழை நேற்று மாவட்டத் தலைவர் மின்னல் குமார் தலைமையில் பழைய பல்லாவரம் பகுதி பொதுமக்களுக்கு வீடு வீடாகவும் கடைகளுக்கும் சென்று வழங்கி, மாநாட்டில் பங்கேற்கும்படி அழைப்பு விடுக்கப்பட்டது.
செங்கல்பட்டு அடுத்த அனுமந்தபுத்தேரியைச் சேர்ந்த யுவராஜ்(27) என்பவருக்கு 6 மாத பெண்குழந்தை உள்ளது. தனியார் நிறுவனத்தில் வேலை புரிந்த இவர், ஒரு மாதமாக வேலைக்கு செல்லாத காரணத்தினால், குடும்ப செலவுக்கு ஆன்லைன் ஆஃப் மூலம் கடன் வாங்கியுள்ளார். கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில், மன உளைச்சலில் இருந்தவர் நேற்று முன்தினம் இரவு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
Sorry, no posts matched your criteria.