Chengalpattu

News July 17, 2024

2,768 ஆசிரியர் பணி: வரும் 21ஆம் தேதி தேர்வு

image

தமிழகம் முழுவதும் தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் பணிக்கு, கூடுதலாக 1,000 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால், 2,768 பணியிடங்களுக்கு வரும் 21ஆம் தேதி தேர்வு நடைபெறவுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் இந்த தேர்வானது நடைபெறவுள்ளது. தேர்வு கூடங்கள் பற்றிய விவரங்கள் ஹால் டிக்கெட்டில் தெரிவிக்கப்படும். இன்னும் ஓரிரு நாட்களில் ஹால் டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

News July 17, 2024

இலவச ஆன்மிக சுற்றுலாவுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

image

அம்மன் கோயில்களுக்கு மூத்த குடிமக்களை இலவசமாக ஆன்மிக சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லும் திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை செயல்படுத்தி வருகிறது. ஆடி மாதம் அழைத்துச் செல்லப்படும் இந்த சுற்றுலாவுக்கு செல்ல விரும்புவோர் விண்ணப்பிக்க இன்றே (ஜூலை 17) கடைசி நாளாகும். இந்து சமயத்தை பின்பற்றும் 60 முதல் 70 வயதுடையவர்கள் இத்திட்டத்திற்கு HRCE இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

News July 17, 2024

நுகர்வோர் தன்னார்வலர்கள் உடனான காலாண்டு கூட்டம்

image

செங்கல்பட்டு மாவட்ட அளவிலான நுகர்வோர் தன்னார்வலர்கள் உடனான காலாண்டு கூட்டம் நேற்று 16.07.24 மாலை செங்கல்பட்டு ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. நுகர்வோர் தன்னார்வலர்கள் உடைய கோரிக்கைகள் மாவட்ட வழங்கள் அலுவலர் முன்னிலையில் விவாதிக்கப்பட்டது. மேலும் ரேஷன் கடைகளில் உணவுப்பொருட்கள் தாமதமாக கிடைப்பதாகவும் சரியான நேரத்தில் கிடைக்காததால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைவதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது.

News July 17, 2024

மின் கட்டண உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்- அன்புமணி

image

பாட்டாளி மக்கள் கட்சியின் 36ஆவது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு இன்று செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் சார்பில், சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட மேடவாக்கம், பெரும்பாக்கம் போன்ற 15 இடங்களில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கட்சி கொடி ஏற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கினார். அப்போது செய்தியாளர்களிடம், மின் கட்டண உயர்வை எதிர்த்து வரும் 19ஆம் தேதி சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவித்தார்.

News July 16, 2024

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் மாநில செயற்குழு கூட்டம்

image

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் இன்று மாமல்லபுரம் தனியார் மஹாலில் நடைபெற்றது. இதில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ‌.எம்.விக்கிரமராஜா கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இதில் வியாபாரிகள் நலன் சார்ந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிகழ்ச்சியில் தென்சென்னை கிழக்கு மாவட்ட அனைத்து வியாபாரிகள் பங்கேற்றனர்.

News July 16, 2024

தொழில்முனைவோர்களுக்கு ஆட்சியர் அழைப்பு

image

தமிழகத்தில் சிறிய அளவிலான ஜவுளி பூங்கா அமைப்பதை ஊக்குவிக்கும் வகையில், உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துவதற்கும், சிறிய ஜவுளி பூங்கா அமைக்க முன் வரும் தொழில் முனைவோருக்கு 50 சதவீத மானியத்துடன் ரூ 2.5 கோடி வரை நிதியுதவியையும் தமிழக அரசு வழங்குகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் சிறிய அளவிலான ஜவுளி பூங்கா அமைக்க தொழில் முனைவோர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News July 16, 2024

ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளிகளுக்கு மருத்துவ பரிசோதனை

image

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய ஆற்காடு சுரேஷ், பொன்னை பாலு, ராமு (எ) வினோத், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன் (எ) மன்னா சந்தோஷ், விஜய், அப்பு, சிவசக்தி (எ) சிவா, கோகுல் (எ) கோழி, அருள் ஆகியோரை வேனில் தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு இன்று அழைத்து வரப்பட்டு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. மருத்துவ பரிசோதனை முடிந்த பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.

News July 16, 2024

பாமக 36ஆவது ஆண்டு துவக்க விழா கொண்டாட்டம்

image

பாமக 36ஆவது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு இன்று மேடவாக்கம் பகுதியில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கட்சி கொடி ஏற்றி தொண்டர்கள் மத்தியில் உரை நிகழ்த்தினார். இதில் பள்ளி மாணவ மாணவியருக்கு கல்வி உபகரணங்கள், பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் மற்றும் மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பாமக தலைவர் நிர்மல் குமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

News July 16, 2024

விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் – ஆட்சியர் தகவல்

image

விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் ஜூலை 19ஆம் தேதி காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் வண்ணம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என ஆட்சியர் தெரிவித்துள்ளார். விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

News July 16, 2024

கல்பனா சாவ்லா விருது விண்ணப்பிக்க அழைப்பு

image

தமிழகத்தில் துணிச்சலான மற்றும் வீர சாகச செயல் புரிந்த பெண்களுக்கு துணிவு மற்றும் வீரதீர செயலுக்கான ரூ.5 லட்சம் காசோலை, பாராட்டு சான்றிதழ், கல்பனா சாவ்லா விருது சுதந்திர தினவிழாவில் முதல்வர் வழங்குவார். செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த சாதனை பெண்கள், https://www.awards.tn.gov.in/- என்ற இணையதளத்தில் 18-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் அருண்ராஜ் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!