Chengalpattu

News July 21, 2024

செங்கல்பட்டு:இடைநிலை ஆசிரியர் பணியிட தேர்வு

image

அரசு தொடக்கப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத்தேர்வு செங்கல்பட்டு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, ஹில்டா ஹியூக்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் காலை 9:30 மணிமுதல் 1:30 மணி வரை நடைபெற்றது. இதில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 234 பேரில் 225 பேரும், ஹில்டா ஹியூக்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 234 பேரில் 226 பேர் தேர்வு எழுதினர்.

News July 21, 2024

கிளாமபாக்கம் பேருந்து நிலையத்தில் திடீர் போராட்டம்

image

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய பேருந்துகளை ஏற்பாடு செய்து தரவில்லை என்று பயணிகள் பேருந்துகளை சிறைபிடித்தனர்.வார இறுதி நாட்கள்,விஷேச நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.நேற்று கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பேருந்துகளை பயணிகள் சிறைப்பிடித்தனர்.அதிகாரிகள்,போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி மாற்று பேருந்துகளை ஏற்பாடு செய்தனர்.

News July 21, 2024

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

image

ஜூலை 23ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், பட்ஜெட்டில் தமிழகத்திற்குகான திட்டங்கள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். அதன்படி, தாம்பரம்-செங்கல்பட்டு இடையே மேம்பால விரைவுச் சாலைத் திட்டத்திற்கு ஒப்புதல் தர வேண்டும் என பிரதமர் மோடி மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை டேக் செய்து சமூக வலைதளத்தில் முதலமைச்சர் பதிவிடுள்ளார்.

News July 21, 2024

புதிய பேருந்து நிலையத்தை விரைவில் திறக்க ஏற்பாடு

image

செங்கல்பட்டு மாவட்டம் வெண்பாக்கத்தில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் 97 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்து நிலையம் பணிகள் தற்போது 70% முடிவடைந்துள்ளதாகவும், விரைவில் பேருந்து நிலையத்தை பயணிகள் பயன்பாட்டிற்கு திறப்பதற்கான பணிகள் நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

News July 20, 2024

சாலைகளில் உலவும் மாடுகளை பிடிக்க உத்தரவு

image

செங்கல்பட்டு மாவட்டத்தில், தேசிய நெடுஞ்சாலை, கிழக்கு கடற்கரை சாலை, மாநில நெடுஞ்சாலை உள்ளிட்டவற்றில், மாடுகள் உலா வருகின்றன. இதனால், அடிக்கடி சாலை விபத்து ஏற்பட்டு, பலர் இறந்துள்ளனர். அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தவிர்க்க, சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து, அவற்றின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க, மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

News July 20, 2024

செங்கல்பட்டில் இரு ரவுடிகள் கைது

image

செங்கல்பட்டு டிஎஸ்பி புகழேந்தி தலைமையிலான தனிப்படை போலீசார் கொளவாய் ஏரி அருகே கூலிப்படை தலைவர்கள் அன்வர் மற்றும் விஜி இருவரும் மாடியிலிருந்து குதித்து தப்பிக்க முயன்றனர்.இதனால் இருவருக்கும் கால் உடைந்து மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டுள்ளனர்.இவர்கள் இருவரும் பிரபல ரவுடிகளை கொலை செய்ய திட்டமிட்டது தெரியவந்தது.இவர்கள் இருவர் மீதும் தலா பத்து வழக்குகள் இருபப்தக காவல் துறை தரப்பில் தெரிவிப்பு.

News July 20, 2024

தாம்பரம் டி.எஸ்.பி மாற்றம்

image

தமிழகத்தில் டி.எஸ்.பி உள்ளிட்ட 9 காவல் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து டி.ஜி.பி சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன்படி, தாம்பரம் சிறப்பு குற்றப்புலனாய்வு டி.எஸ்.பி-ஆக பணியாற்றி வந்த P.இளஞ்செழியன் மணிமங்கலம் காவல் உதவி ஆணையாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அங்கு பணியாற்றிய K.ராஜபாண்டியன் ஈரோடு டி.எஸ்.பி- ஆக மாற்றப்பட்டுள்ளார்.

News July 19, 2024

அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்

image

தாம்பரம் மாநகராட்சியை கண்டித்து இன்று அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், அதிமுக ஆட்சியில் ரூ.25 கோடியில் சிட்லபாக்கம் ஏரி மேம்பாட்டு பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்றது, அதை திமுக கிடப்பில் போட்டது. மேலும், சொத்துவரி உயர்வை கண்டித்தும், திமுக அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் தலையில் நடைபெற்றது.

News July 19, 2024

வேலை வாய்ப்பு: பணி நியமன ஆணை வழங்கல்

image

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் இன்று சிறிய அளவிலான சிறப்பு வேலைவாய்ப்பு முகாமினை மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் துவங்கி வைத்தார். அப்போது, தேர்வு செய்யப்பட்ட வேலை நபர்களக்கு பணி நியமன ஆணையினை வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

News July 19, 2024

விவசாயிகள் குறைதீர் கூட்டம்

image

செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் கலெக்டர் அருண் ராஜ் தலைமையில் இன்று(19.7.24) நடைபெற்றது. இதில், மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். சார்-ஆட்சியர் நாராயணர் சர்மா, கூடுதல் ஆட்சியர் அனாமிகா ரமேஷ், அரசு அலுவலர்கள் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!