Chengalpattu

News July 24, 2024

தொழிலாளர் வீட்டு வசதி திட்ட ஒருங்கிணைப்பு கூட்டம்

image

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வீட்டு வசதி திட்டம் தொடர்பான மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது. தொழிலாளர் உதவி ஆணையர், சமூக பாதுகாப்புத் திட்டத்தின் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுடன் மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜ் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

News July 24, 2024

செங்கல்பட்டு மக்களுகு சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

image

அறிமுகமில்லாத செல்போன் எண்களிலிருந்து வரும் அழைப்புகளை நம்ப வேண்டாம். தங்களின் நெருங்கிய நண்பர்களை போலவே குரலை மாற்றி பேசி நம்ப வைத்து, பின்னர் அவசரம் எனக்கூறி அடிக்கடி பணம் கேட்டு பணத்தை திருடும் சைபர் கிரைம் குற்றங்கள் நடைபெறுகின்றது. எனவே எச்சரிக்கையாக இருக்கும்படி செங்கல்பட்டு மாவட்ட சைபர் கிரைம் போலீசார் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

News July 24, 2024

செங்கல்பட்டில் 56 குற்றவாளிகளின் வங்கி கணக்குகள் முடக்கம்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த 13.07.2024 முதல் 23.07.2024 வரை மதுவிலக்கு குற்றத்தில் ஈடுபட்ட 58 குற்றவாளிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதில், 56 குற்றவாளிகளின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. மேலும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 8 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அதில், 4 குற்றவாளிகளின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

News July 24, 2024

செங்கல்பட்டில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

image

செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள தலைமை தபால் நிலைய வளாகத்தில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் மத்திய அரசை கண்டித்து இன்று(24) ஆர்பாட்டம் நடைபெற்றது. நாடாளுமன்றத்தில், எதிர்கட்சி உறுப்பினர்களை இடைநீக்கம் செய்து விட்டு, எந்த விவாதமும் இன்றி நிறைவேற்றிய 3 குற்றவியல் சட்டங்களை திரும்பபெற கோரியும், தொழிற்சங்க கோரிக்கைகளை புறக்கணித்த பட்ஜெட்டை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.

News July 24, 2024

‘சிறகை விரிக்கலாம் வாருங்கள்’ கவிதை போட்டி

image

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவர்களின் தனித் திறனை வெளிக் கொணரும் வகையில் ‘சிறகை விரிக்கலாம் வாருங்கள்’ என்ற தலைப்பில் கவிதை போட்டி நடைபெற்றது. முதன்மை கல்வி அலுவலர் கற்பகம் தொடங்கி வைத்த இந்த போட்டியில், 66 மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது திறனை வெளிப்படுத்தினர். இதில், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

News July 24, 2024

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது

image

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்ட்டுள்ளார். சென்னையைச் சேர்ந்த ரவுடி வைரமணி, ஆம்ஸ்ட்ராங் கொலைக்குப் பின்பு தனது சொந்த ஊரான வீரநல்லூரில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, தனிப்படை போலீசார் நெல்லையில் அவரை கைது செய்தனர். அவர் ஆற்காடு சுரேஷின் கூட்டாளி என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது, கொலை சம்பவத்தில் தொடர்பு உள்ளதா என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News July 24, 2024

புதிய அரசு பேருந்து இயக்கம்

image

செங்கல்பட்டு – மாமல்லபுரம் வழித்தடத்தில், 60ஆம் எண் கொண்ட ஒரேயொரு அரசு பேருந்து மட்டும் இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், பயணிகளின் கோரிக்கையை ஏற்று 508ஆம் எண் கொண்ட என்ற புதிய அரசு பேருந்து இன்று முதல் இயக்கப்படுகிறது. இது சென்னை மாநகருக்குள்ளும் செல்லும். இதில், எக்ஸ்பிரஸ் கட்டணமாக ரூ.25 வசூலிக்கப்படுகிறது. குறிப்பாக, பெண்களுக்கு கட்டணமில்லை என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News July 24, 2024

ரூ.5 கோடி செலவில் இணைப்பு திட்டம்

image

சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஊரப்பாக்கத்தையும், வண்டலூர் – கேளம்பாக்கம் சாலை நல்லாம்பாக்கம் பகுதியையும் இணைக்கும் 14 கி.மீ. சாலையை சீரமைத்து புதிதாக அமைக்க ரூ.5 கோடி மதிப்பில் நேற்று பணிகள் தொடங்கப்பட்டன. இதற்கு, அமைச்சர் தா.மோ.அன்பரசன் பூமி பூஜை போட்டு தொடங்கி வைத்தார். மேலும், இதில் ஆட்சியர் அருண்ராஜ், எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி, அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

News July 24, 2024

செங்கல்பட்டில் நாளை மின்தடை

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நாளை (ஜூலை 25) மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால், காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை வண்டலூர், பெருங்களத்தூர், மேற்கு தாம்பரம், மாடம்பாக்கம் பிரதான சாலை, சிட்லபாக்கம், மேடவாக்கம், பெரும்பாக்கம் ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என்றும், பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் 2 மணிக்கு மேல் மின்விநியோகம் கொடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 24, 2024

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கை

image

செங்கல்பட்டு மற்றும் பெரும்பாக்கம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) நேரடி மாணவர் சேர்க்கைக்கு 16.07.2024 முதல் 31.07.2024 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் விவரங்கள் தெரிந்து கொள்ள 9499055673 அல்லது 9962986696, 044-29541192 என்ற தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் : govtiticpt603111@gmail.com தொடர்பு கொள்ளலாம் என செங்கல்பட்டு ஆட்சியர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!