India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பார்க்கும் அதிகாரிகளின் விவரம் காவல் நிலையம் வாரியாக மக்களின் இலகுவான தொடர்புக்கு வெளியிடப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு மாவட்ட SPயின் எக்ஸ் பக்கத்தில் பார்த்து தெரிந்துகொள்ளலாம் என செங்கல்பட்டு காவல் துறை தெரிவித்துள்ளது.
செங்கல்பட்டு ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்டம் முழுவதும் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சியில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வேண்டி பெறப்பட்ட 95 மனுதாரர்களுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் பாலாஜி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் ஹமிதா பானு, எலும்பு முறிவு மருத்துவர் நவீன் குமார் ஆகியோர் தலைமையிலான குழுவினர் கொண்டு நேர்முகத் தேர்வு நடைபெற்றது.
சென்னை கிளம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து ராமநாதபுரத்திற்கு ரூ.70 கோடி மதிப்புள்ள 6 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருளை கடத்த முயன்ற பைசல் ரகுமான், இப்ராஹிம் ஆகியோரை போதைப்பொருள் தடுப்பு போலீசார் இன்று கைது செய்தனர். மேலும் செங்குன்றம் அருகே போதைப்பொருள் பதுக்கி வைத்திருந்த குடோனை சோதனை செய்து 954 கிராம் மெத்தபெட்டமைன் மற்றும் ரூ.7 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இன்று (ஜூலை 29) மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் சுபாநந்தினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில், சுற்றுவட்டார பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக வழங்கினர். மனுக்களை பெற்றுக்கொண்டு அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.
தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலையில் 2ஆவது நாளாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. பராமரிப்பு பணிக்காக, சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையே 55 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால், தாம்பரம் பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் அலை மோதி வருகிறது. இதனால், மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் கூடுதல் பேருந்து இயக்கப்பட்டாலும், போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது.
கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையத்திற்கு இயக்கப்பட்டு வந்த மாநகர பேருந்து தடம் எண் 104 C CUT சர்வீஸ் மற்றும் 104 C என்று மாற்றப்பட்டு அதே வழித்தடத்தில் இயங்கும். அதேபோல் கோயம்பேடு – கூடுவாஞ்சேரி பகுதியில் இயங்கும் தடம் எண் 104 C சர்வீஸ், 104 C X என்று மாற்றப்பட்டு அதே வழித்தடத்தில் இயங்கும் என்று போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநர் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும், விளையாட்டு போட்டிகளின்போது காயங்கள் ஏற்பட்டால், குரோம்பேட்டை ரேலா மருத்துவமனையில் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும் என்று ரேலா மருத்துவமனையின் தலைமை பேராசிரியர் ரேலா தெரிவித்துள்ளார். இதற்காக, அபினவ் பிந்தரா பவுண்டேஷன் மற்றும் எஸ்.ஓ.ஏ.ஆர். டிரஸ்ட் ஆகியவற்றுடன் நேற்று புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முகிலன், அப்பு, நூர் விஜய் ஆகிய 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். ஏற்கெனவே, 18 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 21 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதால், மேலும் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது.
தாம்பரம் மாநகராட்சியில் உள்ள அனைத்து தெருக்களிலும், பெயர் பலகைகள் மாற்றப்பட்டு வருகின்றன. இதில், பல தெருக்களில் எழுத்து பிழைகளுடன் பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. இதுகுறித்து மாநகராட்சியிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழை கொச்சைப்படுத்தும் வகையில் எழுத்து பிழைகளுடன் பெயர் பலகை வைப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தாம்பரம், செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை செல்லும் 55 மின்சார ரயில்கள் இன்றும் ரத்து செய்யப்பட்டுள்ளன. தாம்பரம் ரயில் பாதை பராமரிப்புப் பணிகள் காரணமாக, காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை இயக்கப்படும் பெரும்பாலான மின்சார ரயில்கள் ரத்து. அதற்கு பதிலாக, பகல் மற்றும் இரவு நேரங்களில் சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த சிறப்புகள் ரயில்கள் 20 நிமிட இடைவெளியில் இயக்கப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.