India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் அடுத்த ஆலந்தூர் பகுதியில், சக்தி ஐஸ்வர்யா என்பவர் வசித்து வருகிறார். இவர், 5 ஆண்டுகளாக வில்வித்தை பயிற்சியை பயின்று வருகிறார். இந்நிலையில், சேலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான வில்வித்தை போட்டி 2024இல் பங்கேற்ற இவர், 18 வயது பிரிவில் வெள்ளிப் பதக்கத்தையும், சீனியர் மற்றும் மாஸ்டர் பிரிவில் மீண்டும் வெள்ளிப் பதக்கம் வென்று பெருமை சேர்த்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சார்பில், நிர்வாக காரணங்களுக்காக 8 துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோரை பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் அருண் ராஜ் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, கோமதி, சைமன் ஜெரால்ட், அர்ச்சனா தேவி, ஜெயக்குமார், மோகனா, வெங்கடேஷ், பெருமாள், ராஜசேகரன் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
செங்கல்பட்டில் கொலை செய்ய சதித்திட்டம் திட்டிய ரவுடியை ஆயுதங்களுடன் போலீசார் கைது செய்தனர். வல்லம் பகுதியைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான மாறன் (36) மீது 4 கொலை வழக்கு உட்பட 10 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர், பாறைநகர் சுடுகாடு பகுதியில் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாகக் கூறப்படுகின்றது. தகவல் அறிந்து வந்த போலீசார், நேற்று மாறனை கைது செய்து, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.
செங்கல்பட்டு உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் மற்றும் பொதுமக்களிடம் மனுக்கள் பெறும் கூட்டம், அமைச்சர் அன்பரசன் தலைமையில் நேற்று நடந்தது. அப்போது பேசிய அவர், மின் அழுத்த குறைபாடு, மின்கம்பங்கள் மாற்றக் கோரி அதிக மனுக்கள் வந்துள்ளன. இதற்கு, மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்” என்றார்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே பந்தலூர் பகுதியை சேர்ந்தவர் அப்சாரா (28). இவர் செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை மருத்துவராக பணியாற்றி வருகின்றார். செங்கல்பட்டு அண்ணாநகரில் வாடகை வீட்டில் தங்கி இருந்த பெண் மருத்துவர் அப்சாரா இன்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தாம்பரம் மாநகராட்சியில் அனகாபுத்தூரில் பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து முடிக்காத திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளார். மேலும், அம்மா உணவகத்தை முடக்க நினைக்கும் திமுக அரசை வன்மையாக கண்டிப்பதாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, நீலகிரி உள்பட 27 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி செங்கல்பட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொள்ள வந்த அமைச்சர் அன்பரசன் புதிதாக தொழில் துவங்க கடன் உதவியாக ரூ.1 லட்சம் காசோலையை 3 பேருக்கு வழங்கினார். இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள் வரலட்சுமி, பாலாஜி உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துக்கொண்டனர்.
பல்லாவரம் – தாம்பரம் – கூடுவாஞ்சேரி இடையே இன்று முதல் ஆகஸ்ட் 2ஆம் தேதி வரை இரவு 11:30 முதல் அதிகாலை 2:30 வரை மின்சார ரயில்கள் இயக்கப்படாது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதே போன்று ஆகஸ்ட் 3 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை காலை 10:30 முதல் மதியம் 1:30 வரையும், இரவு 11:30 முதல் அதிகாலை 2:30 வரை மின்சார ரயில்கள் இயக்கப்படாது என தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் தெரிவித்துள்ளது.
தாம்பரம் மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இதில் அதிமுக உறுப்பினர்கள் கருப்பு உடை அணிந்து பங்கேற்று, பின்னர் நிர்வாகத்தை கண்டித்து வெளிநடப்பு செய்தனர். ஐ.ஏ.எஸ். அதிகாரி கையெழுத்தைப் போட்டு போலியாக ஆவணங்கள் தயாரித்துள்ளனர், நாய்கள் பிடிக்கப்படவில்லை, உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்து வெளிநடப்பு செய்தனர். அதிமுக உறுப்பினர்கள் நாய் பொம்மையுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
Sorry, no posts matched your criteria.