India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்போரூர் அடுத்த குன்னப்பட்டு கிராமத்தில் ஜப்பான் சிட்டி தொழில் பேட்டையில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். நேற்று இரவு அஜித்குமார் (34) என்ற காவலர் வட மாநில தொழிலாளர் ஒருவரிடம் இருந்த ரூ.1,000 பறித்துக் கொண்டதாக தெரிகிறது. இது குறித்த புகாரின் பேரில் வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கர்க் உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
மதுராந்தகம் அருகே ஜானகிபுரம் கிராமத்தில் சிவன் கோவிலின் திறந்தவெளி மண்டபத்தின் அருகே மண்ணில் புதைந்த நிலையில் கி.பி. 7ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர் காலத்திய மூத்த தேவி சிலை ஒன்று வரலாற்று ஆய்வாளர்கள் நேற்று கண்டெடுத்தனர். சுமார் 2 அடி உயரமும் ஒன்றரை அடி அகலத்துடன் உள்ள இந்த சிலை உள்ளது. மேலும் மாந்தன் மாந்தி உருவத்தோடு, கரண்ட மகுடத்துடன் அணிகலனற்ற காதுகளுடன் கழுத்தில் சவடியுடன் காணப்படுகிறது.
தமிழகத்தில் இன்று(ஆக.04) மாலை 5.30 மணி வரை 16 மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மாலை 5.30 மணி வரை இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
போரூர், ஐயப்பன்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் குமரன் (53). இவர், கடந்த 2 நாட்களுக்கு முன்பு போரூர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டார். இன்று (ஆகஸ்ட் 4) மதியம் போரூர் சுங்கச்சாவடி அருகே பைக்கில் ரோந்து சென்றபோது, அவ்வழியாக வந்த ரேஸ் பைக் இவர் மீது மோதியது. இதில், பைக்குடன் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த ரேஸ் பைக் ஓட்டுநர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இன்று சர்வதேச நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இவ்வுலகில் நண்பர்கள் இல்லாமல் எவரும் இல்லை. உங்கள் நண்பர்களுடன் கிணற்றில் குளித்தது, கிரிக்கெட் விளையாடியது, சினிமாவிற்கு சென்றது என பல சுவாரஸ்யமாக விஷயங்களை செய்திருப்போம். சினிமாவை மிஞ்சும் அளவுக்குகூட சில செய்த சேட்டைகளை செய்திருப்போம். அந்த வகையில், நீங்க உங்க நண்பனுடனான நினைவுகளை கீழே கமெண்ட் பண்ணுங்க, நண்பனுக்கு சேர் செய்யுங்க.
ஜூலை மாதத்தில் துவரம் பருப்பு, பாமாயில் பெற முடியாத ரேஷன் அட்டைதாரர்கள், இம்மாதம் பெறலாம். ஜூன் மாதம் துவரம் பருப்பு, பாமாயில் பெற இயலாதவர்கள், ஜூலை மாதத்தில் பெறலாம் என அறிவிக்கப்பட்டது. இதனால், ஜூலை மாதத்துக்கான துவரம் பருப்பு, பாமயிலை சிலரால் பெற முடியவில்லை. எனவே, செங்கல்பட்டில் உள்ள 4,31,780 அட்டை தாரர்களில் ஜூலை மாதத்துக்கான பொருட்களை பெற இயலாதவர்கள் இம்மாதம் பெறலாம். ஷேர் பண்ணுங்க.
நேற்று (ஆகஸ்ட் 3) சனிக்கிழமை வார இறுதி விடுமுறையை முன்னிட்டு, சென்னை, செங்கல்பட்டைச் சேந்த பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர். இதற்காக, போக்குவரத்துக்கு கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. பயணிகள் அனைவரும் ஒரே நேரத்தில் பேருந்து மற்றும் கார்களில் புறப்பட்டதால், தாம்பரம் ஜி.எஸ்.டி சாலையில் கடுமையாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றன.
செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் 54ஆவது பட்டமளிப்பு விழா இன்று மாலை நடைபெற்றது. விழாவில் பட்டம் பெற்ற 100 மருத்துவ மாணவ, மாணவியர்களுக்கு அமைச்சர் மா.சுப்ரமணியன், அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் சான்றிதழ்களை வழங்கினர்.
காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவராக திமுகவைச் சேர்ந்த வண்டலூர் ஆராமுதன் கடந்த பிப்ரவரி மாதம் வண்டலூரில் ஆராமுதன் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தற்போது காலியாக உள்ள காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழு துணை தலைவர் பதவிக்கு ஆகஸ்ட் 6ஆம் தேதி காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய வளாகத்தில் மறைமுக தேர்தல் நடைபெறும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்றும், நாளையும் (ஆகஸ்ட் 3, 4) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. பகலில் வெயில் அடித்தாலும், இரவில் மழை பெய்து வருவதால் குளிச்சியான சூழல் நிலவி வருகிறது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஷேர் பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.