Chengalpattu

News August 5, 2024

பழங்கால பொருட்களை நன்கொடையாக வழங்க அழைப்பு

image

சென்னை மெரினா கடற்கரை எதிரே உள்ள பாரம்பரியமிக்க ஹுமாயூன் மஹால் கட்டிடத்தில் சுமார் 80,000 சதுர அடி பரப்பில் அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது. இந்த அருங்காட்சியகத்துக்கு, சுதந்திர போராட்டம் தொடர்பான பழங்கால பொருட்களை பொதுமக்கள் நன்கொடையாக வழங்க செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News August 5, 2024

தமிழ்நாடு சுற்றுலா விருதுகளுக்கு ஆட்சியர் அழைப்பு

image

அனைத்து சுற்றுலா தொழில்முனைவோரும் உரிய தமிழ்நாடு சுற்றுலா விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இந்த விருதுகள் உலக சுற்றுலா தினத்தன்று (27.09.2024) சென்னையில் வழங்கப்படும். அதற்கான இடம் பின்னர் அறிவிக்கப்படும். விண்ணப்பங்களை www.tntourismawards.com என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள்:20.08.2024 ஆகும்.

News August 5, 2024

தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் போராட்டம்

image

தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் இன்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முறையீடு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ 6 ஆயிரத்து 750 அகவிலைப்படி உடன் வழங்க வேண்டும், குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இந்த ஆர்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

News August 5, 2024

தமிழக அரசு, ஆட்சியர், எஸ்பி பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

image

பாஜக வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் அலெக்சிஸ் சுதாகர் மீது 3 வழக்குகள் நிலுவையில் இருந்ததால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய செங்கல்பட்டு ஆட்சியர் கடந்த மாதம் உத்தரவிட்டார். இதை எதிர்த்து, அவரது மனைவி அண்டோ ஜெனிதா சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் தமிழக அரசு, செங்கல்பட்டு ஆட்சியர், எஸ்.பி உள்ளிட்டோர் பதிலளிக்குமாறு இன்று உத்தரவிட்டது.

News August 5, 2024

நடமாடும் குழந்தைகளுக்கான இயன் முறை சிகிச்சை வாகனம்

image

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனியார் தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் நடமாடும் குழந்தைகளுக்கான இயன் முறை சிகிச்சை வாகனம் தொடங்கி வைக்கப்பட்டது. பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் இன்று (ஆக.5) இதனை தொடங்கி வைத்தார். மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் கதிர்வேல், மாவட்ட சமூக நல அலுவலர் சங்கீதா, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சற்குனா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

News August 5, 2024

அரசு பேருந்துகளில் அலை மோதும் மக்கள் கூட்டம்

image

பராமரிப்பு பணி காரணமாக கடந்த இரண்டு வாரங்களாக விடுமுறை நாட்களில் மட்டும் ரத்து செய்யப்பட்டு வந்த ரயில் சேவை, முதல் முறையாக வேலை நாளான இன்றும் ரத்து செய்யப்பட்டுள்ளது. பல்லாவரத்தில் இருந்து தாம்பரம் மார்க்கமாக கூடுவாஞ்சேரி வரையும் கூடுவாஞ்சேரியில் இருந்து தாம்பரம் மார்க்கமாக பல்லாவரம் வரையிலான மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.

News August 5, 2024

செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை வேண்டுகோள்

image

தேவையற்ற தருணங்களில் அதிக வெளிச்சம் கொண்ட வாகன மின்விளக்குகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இதனால், எதிரில் வரும் வாகன ஓட்டிகளுக்கு கவன சிதறல் ஏற்பட்டு, விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, இந்த நடைமுறையை வாகன ஓட்டிகள் கடைபிடிக்க வேண்டுமென செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும், ஆய்வு செய்யும்போது பிடிபட்டால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்துள்ளது.

News August 5, 2024

வேன் மோதி துப்புரவு பணியாளர் பலி

image

தாம்பரம் – முடிச்சூர் சாலையில், கர்நாடகா மாநிலத்தைச் சார்ந்த தர்மன்னா (28) இன்று (ஆகஸ்ட் 5) காலை துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது கோயம்பேட்டில் இருந்து தக்காளி ஏற்றி வந்த வேன் ஒன்று அவர் மீது மோதியது. இதில், தர்மன்னா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் பணியாற்றிய லட்சுமணன் (23) படுகாயம் அடைந்தார். இந்த விபத்து தொடர்பாக ஓட்டுநரை கைது செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News August 5, 2024

கேளம்பாக்கத்தில் 67.40 மி.மீ மழை

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் விடிய விடிய மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக கேளம்பாக்கத்தில் 67.40 மி.மீ மழை பதிவாகி உள்ளது. செங்கல்பட்டு மழை அளவு: செங்கல்பட்டு – 44 மி.மீ., திருப்போரூர் – 38.6 மி.மீ., கேளம்பாக்கம் – 67.40 மி.மீ., திருக்கழுக்குன்றம்- 34.60 மி.மீ., மாமல்லபுரம் – 13 மி.மீ., மதுராந்தகம் – 25 மி.மீ., செய்யூர் – 46 மி.மீ., தாம்பரம் – 49 மி.மீ என மொத்தம் 317.60 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.

News August 5, 2024

செங்கல்பட்டில் விடிய விடிய கனமழை

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று மாலை முதல் கனமழை பெய்து வருகிறது. தாம்பரம், வண்டலூர், பம்மல், பெருங்களத்தூர், அனகாபுத்தூர், குரோம்பேட்டை, பல்லாவரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால், வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களின் இயல்வு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!