India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை கடற்கரை – விழுப்புரம், கடற்கரை – எழும்பூர் ரயில் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், இரவு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இரு வழித்தடங்களிலும் இன்றிரவு 10.30 மணி முதல் அதிகாலை 4.30 மணி முதல் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக, சென்னை கடற்கரையில் இருந்து இரவு 9.10, 9.30 மணிக்கு தாம்பரம் செல்லும் மின்சார ரயில் சேவை முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
தொடர் விடுமுறையை முன்னிட்டு, கிளாம்பாக்கத்தில் இருந்து தி.மலை, திருச்சி, மதுரை, நெல்லை, குமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று 485 பேருந்துகளும், நாளை மற்றும் நாளை மறுநாள் தி.மலைக்கு 60 பேருந்துகளும் இயக்கப்படும். கோயம்பேட்டிலிருந்து தி.மலை, நாகை, வேளாங்கண்ணி, பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இன்று 70 பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து 20 பேருந்துகளும் இயக்கப்படும்.
செங்கல்பட்டு காவல் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த ஜெ. அருள்மொழி அரசு, தஞ்சாவூர் காவல் மாவட்டம், தஞ்சாவூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளராக பணியை மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அங்கு பணியாற்றி வந்த ராமதாஸ் என்பவருக்கு பதிலாக, அருள்மொழி அரசு நியமிக்கப்பட்டுள்ளார்.
செங்கல்பட்டு அருகே பரனூர் சுங்கசாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. நாளை (சனிக்கிழமை) முதல் கிருஷ்ண ஜெயந்தி (திங்கட்கிழமை) வரை மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் இன்று சென்னையில் இருந்து ஆயிரக்கணக்கான வாகனங்கள் தென் மாவட்டங்களை நோக்கி படையெடுத்துள்ளன. இதனால் சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர்.
பள்ளிக்கரணை காவல் நிலைய எல்லையில் பல்வேறு இடங்களில் கடைகளின் ஷட்டரை உடைத்து பல திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வந்தன. அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் ஆய்வு செய்த போலீசார் ஆவடி காமராஜ் நகரை சேர்ந்த மதன்(27) என்பவரை கைது செய்தனர். இவர் YouTube பார்த்து ஷட்டர் பூட்டை உடைப்பதை கற்றுக்கொண்டு அதை பல்வேறு இடங்களில் செயல்படுத்தி கொள்ளை அடித்துள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
தாழம்பூரில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு மீண்டும் 3வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்தது. பள்ளியின் நிர்வாக மின்னஞ்சல் முகவரிக்கு Boms present in class room, ஜாபர் சாதிக் மெத் இஸ்யூ என்ற வாசகம் அடங்கிய மின்னஞ்சல் வந்தது. இதனையடுத்து, பள்ளி முதல்வர் ருக்மணி புகாரின் பேரில் வெடிகுண்டு நிபுணர்களுடன் போலீசார் சோதனை செய்து வருகின்றனர். இப்பள்ளிக்கு கடந்த மாதம் மிரட்டல் வந்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் உள்ள பெரும்பாக்கம், குரோம்பேட்டை உள்ளிட்ட 6 பேருந்து பணிமனைகளில் 500 மின்சார பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த பணிமனைகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்த மற்றும் மின்சார பேருந்துகளை பராமரிக்க நடப்பு ஆண்டில் ரூ.111.50 கோடி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
வார இறுதி நாளையொட்டி, கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு இன்றும், நாளையும் 330 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது. இதேபோல் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து வேலூர், ஓசூர், புதுச்சேரி, திருவண்ணாமலை ஆகிய ஊர்களுக்கு 80 சிறப்புப் பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும்.
திருக்கழுக்குன்றம் பேருராட்சியில் வார சந்தை உள்ள M.N குப்பம் பகுதியில் ரூ. 2 கோடி 40 லட்சம் மதிப்பீட்டில் 100 கடைகள் கட்ட அரசு நிதி ஒதுக்கீடு செய்தது. இந்நிலையில் இன்று பேரூராட்சி தலைவர் யுவராஜ் தலைமை தாங்கி புதிய கடைகள் கட்ட பூமி பூஜையுடன் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். இந்த கடைகள் மூலம் பேரூராட்சிக்கு வருவாய் அதிகரிப்பதுடன் வியாபரிகளும் பயன்பெறுவர் எனத் தெரிவிக்கப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மூலம் ஊராட்சிகளில் தனிநபர் மற்றும் குழு தொழில்களை உருவாக்கவும், ஏற்கனவே உள்ள தொழில்களை மேம்படுத்தவும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, தொழில் முனைவோர், தொழில் மேம்பாட்டிற்குத் திட்டமிடுபவர்கள் ஆட்சியரகத்தில் செயல்படுத்தப்படும் மதி சிறகுகள் தொழில் மையத்தை அணுகி பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் அழைப்பு விடுத்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.