India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்போரூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர், விசிக கட்சியைச் சேர்ந்தவர் எஸ்.எஸ்.பாலாஜி. இவர், கடந்த 21ஆம் தேதி முதல் சட்டமன்ற தொகுதி பணிகள் மற்றும் கட்சி பணிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டதால், வலது காலில் வலி ஏற்பட்டது. இதையடுத்து, மருத்துவ சிகிச்சை மேற்கொண்டதில் மருத்துவர்கள் 2 நாட்கள் ஓய்வில் இருக்க கூறியதால், 2 நாட்கள் மருத்துவ ஓய்வில் இருப்பதாக நேற்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மதுராந்தகம் அடுத்த மேலவலம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் நவீன்குமார்(20). இவர், நேற்று முன்தினம் தனது பைக்கில் தந்தை கண்ணனை அழைத்துக் கொண்டு படாளம் சென்றார். தந்தையை இறக்கிவிட்டு, வீடு திரும்பும்போது படாளம் லாரி பார்க்கிங் அருகே அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று நவீன்குமார் மீது மோதியது. இதில், கீழே விழுந்த அவர் மீது பின்னால் வந்த லாரி ஒன்று அவர் மீது எறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
செங்கல்பட்டு மாவட்டத்திற்கு வரும் 31ஆம் தேதி முழு வேலை நாள் ஆகும். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் 53ஆவது ஆடிப்பூரத் திருவிழாவை முன்னிட்டு, கடந்த 6ஆம் தேதி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சித் தலைவர் அருண் ராஜ் அறிவித்தார். மேலும், விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஆகஸ்ட் 31ஆம் தேதி வேலை நாள் என்றும் அவர் தெரிவித்தார். இதனால் 31ஆம் தேதி விடுமுறை என்று நினைத்து விடவேண்டாம்.
அரசு போக்குவரத்து ஊழியர்களின் 15வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை இன்று 27.08.24 காலை 10.00 மணிக்கு நடைபெறவுள்ளது என தமிழக போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்து பயிற்சி பணிமனையில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தை கூட்டத்தில் CITU, ATP, LPF உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் கலந்து கொள்ள உள்ளன.
ஆர்.எஸ்.எஸ் தேசிய தலைவர் மோகன் பகாவத் பாண்டிச்சேரியில் இருந்து திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை செங்கல்பட்டு வழியாக சென்னை செல்லவுள்ளார். இதனால், இன்று (ஆக.26) செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கசாவடியில் வெடிகுண்டு செயலிழப்பு சோதனை குழு மற்றும் போலீசார் வாகனங்களில் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை அடுத்த செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பல்லாவரம் மேம்பாலம், குரோம்பேட்டை ரேடியல் மேம்பாலம், சிட்லப்பாக்கம் மேம்பாலம் என மூன்று மேம்பாலங்கள் இடைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரை மேற்கொள்ளப்பட மெட்ரோ பணிகள் காரணமாக இந்த பாலங்கள் இடிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதில், பல்லாவரம் மேம்பாலம் சமீபத்தில் தான் கட்டி முடிக்கப்பட்டது.
கேளம்பாக்கம் ஸ்பேஸ் ஜோன் இந்தியா நிறுவனம் மற்றும் மார்ட்டின் குழுமம் இணைந்து, மிஷன் ரூபி 2024 என்ற மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட் மூலம் செயற்கைக்கோள்களை அண்மையில் திருவிடந்தை கடற்கரையில் இருந்து விண்ணில் செலுத்தியது. தற்போது, அந்த ராக்கெட் திரும்ப ஏவுதளத்திற்கு வரும்போது கரையில் இருந்து 1.8 கி.மீ தொலைவில் கடலில் விழுந்தது. இதை தேடும் பணியில் நீர்மூழ்கி வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலமாக உளவியலாளர், மனநல சமூக சேவகர் ஆகிய பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். இவர்கள், செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரியில் பணிபுரிய வேண்டும். மேலும் விண்ணப்ப படிவங்கள் https://chengalpattu.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று ஆட்சியர் அறிவித்துள்ளார்.
கல்பாக்கம் அடுத்த டச்சுக்கோட்டை கடற்கரையில், ஆசான் மார்ஷியல் அரிஸ் மற்றும் ஸ்போர்ட்ஸ் அகாடமி இன்டர்நேஷனல் சார்பில், உலக சாதனை தேர்வுக்காக 102 பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் சுருள் வாள் வீச்சு, வேல்கம்பு, சிலம்பம், ஆகிய தற்காப்பு கலைகளை 30 நிமிடத்தில் தொடர்ந்து செய்து காண்பித்தனர். நிகழ்ச்சி முடிவில், பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும், பயிற்சி பள்ளிக்கும் சான்றிதழ், பதக்கம் வழங்கப்பட்டது.
பரனூர் அருகே உள்ள சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், நேற்று சாலையை கடக்க முயன்ற பைக் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற 55 வயது மதிக்கத்தக்க நபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த செங்கல்பட்டு தாலுகா போலீசார், உடலை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.