India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தாம்பரம் மாநகராட்சியில் மாமன்ற கூட்டம் இன்று காலை 10:15 மணிக்கு மேயர் வசந்தகுமாரி தலைமையில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் துணை மேயர் காமராஜ், ஆணையர் பாலச்சந்தர், மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர். இந்த கூட்டத்தில் வரும் பருவ மழை குறித்து முக்கிய விவாதங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ய திட்டமிட்டுள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் வட்டத்திற்கு உட்பட்ட ஊனமாஞ்சேரி பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் என்பவர் விபத்தில் படுகாயம் அடைந்து மூளைச் சாவு அடைந்தார். இந்நிலையில் அவரது உடல் உறுப்புக்கள் தானம் அளிக்கப்பட்டது. அவரது உடலுக்கு தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் சிராஜ் பாபு அரசு சார்பில் (ஆகஸ்ட் 29) வைத்து மரியாதை செலுத்தினார். அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
மாணவிகளின் தனித்திறனை வளர்க்கும் வகையில் நடைபெற்ற ‘சிறகை விரிக்கலாம் வாருங்கள்-100’ தலைப்பில் பேச்சு போட்டி நடைபெற்றது. இதில், வெற்றி பெற்ற மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் ரொக்க பரிசும் பாராட்டு சான்றிதழையும் இன்று (ஆகஸ்ட் 29) வழங்கினார். இதில், முதன்மை கல்வி அலுவலர் கற்பகம், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் உதயகுமார் மற்றும் ஆசிரியர்கள் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தேர்தல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2025 முன்னேற்பாடு நடவடிக்கையாக மாவட்டத்திற்கு உட்பட்ட 7 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குச்சாவடி மையங்களின் பட்டியலை மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் (ஆகஸ்ட் 29) வெளியிட்டார். அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிடப்பட்ட இதனை சார் ஆட்சியர் நாராயண சர்மா பெற்றுக்கொண்டார்.
தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் 21 மாவட்டங்களில் மிதமான மற்றும் லேசான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று இரவு 9 மணிவரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டில் செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன், “மலையாள சினிமாவில் நடிகர்களின் பாதுகாப்புக்காக அமைப்பு ஒன்று இயங்கி வருகிறது. அதில் தற்போது பாலியல் சீண்டல் குறித்த புகார் எழுந்துள்ள நிலையில் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக அமைப்பைச் சார்ந்தவர்கள் அனைவரும் பதவி விலகியிருக்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டும் என்ற போர்க்குரல் நியாயமானது” என்றார்.
மாமல்லபுரம், காரணை பகுதியில் பஞ்சமி நில மீட்பு போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக, விசிக தலைவர் திருமாவளவன் சென்றார். அப்போது, தனியார் நிலத்தை சேதப்படுத்தியதாக கடந்த 2012ஆம் ஆண்டு மாமல்லபுரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய விசிக தலைவர் திருமாவளவன் உட்பட 14 பேரும், செங்கல்பட்டு மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜரானார்கள்.
பல்லாவரத்தைச் சேர்ந்தவர் மருத்துவர் சுரேஷ். இவர், வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் பெண் மருத்துவர் ஒருவருடன் நடக்க பழகி வந்துள்ளார். இந்நிலையில், பெண் மருத்துவர் வேறு ஒருவருடன் பழகியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ், அவருக்கு ஆபாசப் படங்களை அனுப்பியுள்ளார். இதைக்கண்ட அப்பெண் மருத்துவர் போலீசில் புகார் அளிக்க, புகாரின் பேரில் போலீசார் சரேஷை கைது செய்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த காரணை பகுதியில் உள்ள பஞ்சமி நிலம் மீட்பு போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தியபோது, தனியார் நிலத்தை சேதப்படுத்தியதாக 2012ஆம் ஆண்டு மாமல்லபுரம் காவல் நிலையத்தில் விசிக தலைவர் திருமாவளவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், செங்கல்பட்டு நீதிமன்றத்தில் இன்று அவர் ஆஜராக உள்ளதால், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே இன்றிரவு மற்றும் நாளை காலை இயக்கப்படவுள்ள மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னை கடற்கரையில் இருந்து இரவு 9.10, 9.30 மற்றும் நாளை காலை 4.15க்கு புறப்படும் மின்சார ரயில்கள் ரத்து. தாம்பரத்திலிருந்து இன்றிரவு 10:40, 11.20,11.40 ஆகிய நேரங்களில் புறப்படும் ரயில்களும் ரத்து. சென்னை கடற்கரை – திருவள்ளுவர் இடையே இன்றிரவு இயக்கப்பட இருந்த ரயிலும் ரத்து. SHARE
Sorry, no posts matched your criteria.