India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் கார் விபத்துக்குள்ளாகி 4 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவளம் அருகே உள்ள செம்மஞ்சேரியில் நடந்த இந்த விபத்தில், புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் ஒன்று 4:40 AM லோடு வேன் மீது மோதியது. கார் வேனுக்கு அடியில் சிக்கியதால், காரில் பயணித்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதையடுத்து, போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கேரளவைச் சேர்ந்தவர்கள் முகமது ஷரீப்(35) மற்றும் ஐஸ்வர்யா(28) இருவரும், நேற்றிரவு கூடுவாஞ்சேரி – பொத்தேரி ரயில் தண்டவாளத்தை பேசிக்கொண்டே கடக்க முயன்றனர். அப்போது, சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு நோக்கி வந்த மின்சார ரயில் ஒன்று அவர்கள் மீது மோதியது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இருவரும் காதலர்கள் என்றும், வேலை தேடி சென்னைக்கு வந்ததார்கள் என்றும் கூறப்படுகிறது.
ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் நிகில்(20), பொத்தேரியில் உள்ள கல்லூரியில் 4ஆம் ஆண்டு B.Tech படித்து வருகிறார். இவர், நேற்றிரவு 20.45 மணிக்கு பெற்றோரிடம் செல்போனில் பேசிவிட்டு 4ஆவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். கஞ்சா போதைக்கு அடிமையானதாக மாணவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று, பெற்றோரை கல்லூரிக்கு அழைத்து வர சொல்லியதால் மாணவன் தற்கொலை முயற்சி என தகவல் வெளியாகியுள்ளது.
தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை வரை இயக்கப்படும் மின்சார ரயில், செப்டம்பர் 3, 5 ,7 ஆகிய தேதிகளில் இரவு 10:40, 11:20, 11:40 ஆகிய நேரங்களில் முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது. அதே தேதியில் மறு மார்க்கத்தில் இரவு 9:10, 9:30-க்கு இயக்கப்படும் மின்சார ரயில்களும், செப். 4, 6, 8 ஆகிய தேதிகளில் காலை 4:15 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் வரும் செப். 7ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் வேடந்தாங்கல் மற்றும் கரிக்கிலி பறவைகள் சரணாலயங்களில் உள்ள நீர்நிலைகளில் விநாயகர் சிலைகளை கரைக்கக்கூடாது என்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் எனவும் ஆட்சியர் அருண்ராஜ் அறிவுறுத்தியுள்ளார்.
செங்கல்பட்டைச் சேர்ந்த சங்கர், ஜெயலட்சுமி ஆகியோர் தங்களுடைய நிலத்தின் மீது செல்லும் உயர் மின் அழுத்த கேபிள்களை மாற்றியமைக்க ரூ.81 லட்சம் கேட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த நீதிபதி தண்டபாணி, தனி நபர்களின் வீடு, நிலங்கள் பாதிக்காத வகையில் உயர் மின் அழுத்த கோபுரங்கள், கேபிள்கள் அமைக்க வேண்டும் என கருத்து தெரிவித்தார்.
விநாயகர் சதுர்த்தி வரும் 7-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தாம்பரம் மற்றும் திருநெல்வேலி இடையே இரு மார்க்கங்களிலும் சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயிலானது (06039) நாளை இரவு 10:25 க்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும். மறு மார்க்கத்தில் (06040) திருநெல்வேலியில் இருந்து நாளை மறுநாள் இரவு 10:20 க்கு புறப்படவுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் உள்ள மாநில ஊரக மற்றும் ஊராட்சி நிறுவனத்துக்கு தமிழக விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை (செப்.04) மாலை 4.30 மணிக்கு வருகை தர உள்ளார். செங்கல்பட்டு மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளவுள்ளதாகவும், ஆய்வு தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மாங்காட்டில் இரும்பு வியாபாரி மைதீன் ராஜா லூட்வின் ராஜாவுடன் வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில், மைதீன் ராஜா மகனுக்கு எம்பிபிஎஸ் சீட் வாங்கி தருவதாக கூறிய லூட்வின் ராஜ் காரில் அழைத்துச் சென்று 5 பேருடன் சேர்ந்து அவரை தாக்கி ரூ.10 லட்சம் பறித்துள்ளார். மேலும், ஒதியூர் பகுதியில் வீட்டில் அடைத்து வைத்து நிர்வாணமாக்கி ரூ.3.60 லட்சத்தை பறித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பல்லாவரம் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் திமுகவைச் சேர்ந்த இ.கருணாநிதி, இவர் மகன் ஆன்டோ கருணாநிதி மற்றும் மருமகள் மார்லினா ஆகியோர் மீது பணிப்பெண்ணை வன்கொடுமை செய்ததாக திருவான்மியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் அவர்கள் இருவர் மீதும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.