India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மாமல்லபுரம் மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்பு கலை கிராண்ட்மாஸ்டர் ஹிங் ஷஃபூ ஆர் சேகர் பிறந்தநாளை முன்னிட்டு இன்று அவரது நினைவிடத்தில் மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலை தேசிய செயலாளர் மாமல்லன் ஷி ஷிஃபூ அசோக்குமார் தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா மற்றும் தற்காப்புக் கலை பயிற்சியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
செங்கல்பட்டு காவல் மாவட்டத்தில் (07.09.24) இன்று இரவு ரோந்து பார்க்கும் அதிகாரிகளின் விவரம் காவல் நிலையம் வாரியாக மக்களின் இலகுவான தொடர்புக்கு வெளியிடப்படுகிறது. எந்த பகுதியில் யார் காவல் பணியில் உள்ளனர், என்ற மேலதிக விவரங்களுக்கு இந்த லிங்கின் மூலம் தெரிந்து கொள்ளலாம் https://x.com/SP_chengalpattu/status/1831796966424281586?t=BPTKrIS6cZELtSrA364eww&s=08 என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள, நான்காம் கட்டமாக, 73 ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அவற்றில், நீராதாரங்கள் மேம்பாடு, நெற்களம் அமைத்தல் உள்ளிட்ட, 322 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்காக, ரூ.28.75 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் தீவிரமாக நடந்து வருவதாக, ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பல்லாவரம் அருகே கீழ்கட்டளையை சேர்ந்த காவலாளி முரளி (57) என்பவர் கீழே விழுந்ததில் மூலையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு மூளை சாவு அடைந்தார். இதையடுத்து உறவினர்கள் ஒப்புதலுடன் அவரது கண், கல்லீரல், நுரையீரல், சிறுநீரகம் உள்ளிட்ட உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் முரளியின் உடலுக்கு மாலை அணிவித்து அரசு மரியாதை செய்தார்.
மத்திய மற்றும் அதையொட்டியுள்ள வடக்கு வங்கக் கடலில் நிலவும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி வடக்கு திசையில் நகர்ந்து வரும் 9ஆம் தேதி வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இதனால் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வார விடுமுறை நாள் மற்றும் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு இன்றும், நாளையும் பயணிகள் செல்வதற்கு கிளாம்பாக்கத்தில் இருந்து கூடுதல் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. TNSTC சார்பில் வழக்கமாக 1,136 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கூடுதலாக 500 பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திற்கு 166 பேருந்துகள் இயக்கப்படும்.
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆங்காங்கே விநாயகர் சிலை வைத்து வழிபடுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் அரசின் வழிகாட்டுதல்களின்படி விநாயகர் சிலை அமைக்க செங்கல்பட்டு காவல் மாவட்டத்தில் 535 இடங்களில் அரசின் விதிகளுக்குட்பட்டு விநாயகர் சிலை வைக்க காவல்துறை சார்பில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதை தவிர்த்து புதிய சிலைகள் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர், காட்டாங்குளத்தூர், உள்ளிட்ட 12 இடங்களில் இன்று ஆய்வு செய்த அதிகாரிகள் வட மாநிலத்தவர் தயாரித்து வந்த விநாயகர் சிலைகளில் ரசாயனம் கலந்து விற்பனை செய்வதை கண்டறிந்தனர். செங்கல்பட்டு வட்டாட்சியர் பூங்குழலி தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டதில் ரசாயனம் கலந்த 200 சிலைகளை காவல்துறையினர் பாதுகாப்புடன் பறிமுதல் செய்து சிலைகள் இருந்த குடோனிற்கு சீல் வைத்தனர்.
திமுக சமூக வலைதள செய்யூர் தொகுதி ஒருங்கிணைப்பாளர் S.பிரகாஷ் தலைமையில் இன்று கீழாரக்கொள்ளை கிராமத்தின் ஏரிக்கரையில் அறம் செய்ய விரும்பு குழுவின் சார்பில் சுமார் 2000 பனை விதைகள் நடப்பட்டன. இதில், S.சுரேஷ் குமார், R.கோவிந்தசாமி, D.ராமதாஸ், M.சிவராஜ், N.முனுசாமி, R.சரவணன், M.ஏழுமலை, E.சேது மற்றும் கோகுல் ஆகியோர் பங்கேற்று பனை விதை நடவு செய்ய உதவினர்.
மாடம்பாக்கம் அண்ணா நகரை சேர்ந்த மேரி ரெஜினா(57) என்பவருக்கு நேற்று ரத்தக்கொதிப்பு அதிகமானதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் மூளை சாவு அடைந்ததார். இதனையடுத்து ரெஜினாவின், இதயம், இரண்டு கண்கள், கிட்னி, லீவர், நுரையீரல் ஆகியவை இவரது குடும்பத்தினர் சம்மதத்துடன் தானமாக வழங்கப்பட்டு, 8 பேர் மறுவாழ்வு பெற்று பயனடைந்துள்ளனர். இதையடுத்து, மேரி ரெஜினாவுக்கு அரசு சார்பில் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.
Sorry, no posts matched your criteria.