Chengalpattu

News September 9, 2024

புதிய 6 மாவட்டங்களுக்கு சத்துணவுத் திட்டம் செயல்படுத்த புதிய பதவிகள்

image

புதிதாக தோற்றுவிக்கப்பட்ட செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மயிலாடுதுறை ஆகிய 6 மாவட்டங்களுக்கு சத்துணவுத் திட்ட செயலாக்கத்திற்கான புதிய பணியிடங்களை தோற்றுவித்து தமிழக அரசு அரசாணை வெளியீடப்பட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தலா 7 பதவிகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. விரைவில் புதிய பதவிகளுக்கு அலுவலர்கள் நியமிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

News September 9, 2024

பாலாற்றில் கற்கால கைகோடரி கண்டுபிடித்த அரசு பள்ளி மாணவர்

image

செங்கல்பட்டு அருகே வில்லியம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பயிலும் எட்டாம் வகுப்பு மாணவர் வினோத் என்பவர் பாலாற்றில் விளையாடச் சென்றுள்ளார். அப்போது பழமையான கற்கால ஆயுதமான கோடாரி ஒன்றை கண்டெடுத்து உள்ளார். ஏற்கனவே அந்தப் பள்ளியில் கற்கால கருவிகள் தொடர்பாக கண்காட்சி நடைபெற்று இருந்தது. அதில் இடம்பெற்ற கருவிகளை பார்வையிட்டு தெரிந்து கொண்டதால் இதனை கண்டறிய முடித்ததாக மாணவர் தெரிவித்தார்.

News September 9, 2024

பம்மலில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட 6 பெண் உட்பட 7பேர் கைது

image

பம்மல் நல்லதம்பி சாலையில் உள்ள ஒரு வீட்டில் பாலியல் தொழில் நடப்பதாக சங்கர் காவல் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்று மாலை சம்பவ இடத்துக்கு சென்ற காவல்துறையினர், அதிரடி சோதனை மேற்கொண்டதில் வீட்டில் பதுங்கியிருந்த ஒரு 6, ஒரு ஆண்களை கைது செய்தனர். விசாரணையில் மணிமங்கலத்தை சேர்ந்த சரவணகுமார் (43) அப்பகுதியில் பல பெண்களை அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபட்டது தெரிந்தது.

News September 9, 2024

செங்கல்பட்டு மாவட்ட மாணவர்கள் நீட் தேர்வு எழுத பயிற்சி மையம்

image

பள்ளி கல்வித்துறை செங்கல்பட்டு மாவட்டம் சார்பில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து நீட் தேர்வு எழுதியவர்கள் மீண்டும் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற அறிவுசார் மையத்தில் திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 9 மணி முதல் மாலை 3.30 மணி வரை பயிற்சி நடைபெறுகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள மாவட்ட கலெக்டர் மற்றும் முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

News September 8, 2024

செங்கல்பட்டு: அமைச்சர் விடுத்த வேண்டுகோள் 

image

தி.மு.கழகத்தின் பவள விழாவை – செப்டம்பர்-15 பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் அன்று காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து கழகத்தினர் வீடுகளிலும் கழக கொடியை ஏற்றி பட்டொளி வீசி பறக்கச் செய்திடுவோம் என்று காஞ்சி வடக்கு மாவட்டக் கழகத்தினருக்கு மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான தா.மோ.அன்பரசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News September 8, 2024

செங்கல்பட்டு அருகே கடும் போக்குவரத்து நெரிசல் 

image

விநாயகர் சதுர்த்தி மற்றும் வார இறுதி நாள் விடுமுறைகள் முடிந்ததால் தென் மாவட்டங்களில் இருந்து ஆயிரக் கணக்கான வாகனங்கள் ஒரே நேரத்தில் சென்னை நோக்கி கிளம்பியுள்ளதால், செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடியில் இன்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது.

News September 8, 2024

த.வெ.க. பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

image

தமிழக வெற்றிக் கழகத்தின் விழுப்புரத்தில் நடைபெற உள்ள முதல் மாநாட்டிற்கு, தமிழக காவல்துறை அனுமதி வழங்கி இருக்கின்றது. இதனை முன்னிட்டு, இன்று செங்கல்பட்டு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பில் செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தில் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி த.வெ.க. நிர்வாகிகள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியபடி, ஊர்வலமாக சென்றனர்.

News September 8, 2024

பெரும்பாக்கம் ஆட்டோ ஓட்டுநர் பெசன்ட் நகரில் கொலை

image

பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில், பெரும்பாக்கத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஜெயராஜ் (எ) ராஜன்(25) கொலை செய்யப்பட்டார். இவர் தனது மனைவி திவ்யாவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பிரிந்து அம்மா லட்சுமியுடன் வசித்துள்ளார். இந்நிலையில், நேற்று மாலை 7 மணிக்கு பெசன்ட் நகரில் உள்ள வேளாங்கண்ணி கோவிலுக்கு சென்றுள்ளார். அங்கு மர்ம நபர்கள் சிலர் அவரை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பினர்.

News September 8, 2024

பேருந்துகளில் முண்டியடித்த கூட்டம்: நள்ளிரவில் பரபரப்பு

image

விநாயகர் சதுர்த்தி, சுபமுகூர்த்த தினம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு, கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இருப்பினும், பயணிகள் எண்ணிக்கை அதிகரித்ததால், பேருந்துகள் கிடைக்காமல் நேற்று நள்ளிரவு பொதுமக்கள் அவதியடைந்தனர். நள்ளிரவில் 1,000க்கு மேற்பட்டோர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அங்கு பரபரப்பு ஏற்பட போலீசார் குவிக்கப்பட்டனர்.

News September 8, 2024

முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் சிறந்த முறையில் விளையாட்டுத் துறையில் சாதித்து தற்போது நலிந்த நிலையில் உள்ள முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு மாதம் ஓய்வூதியம் ரூ.6000 வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் இணையதள முகவரி (www.sdat.tn.gov.in) மூலம் விண்ணப்பங்கள் 30.09.24-வரை வரவேற்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு  04427238477, 7401703461 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார் .

error: Content is protected !!