India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
செங்கல்பட்டு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில், நீதிபதி நசீமாபானு முன்னிலையில் உதயகுமார் என்பவருக்கு எதிராக போக்சோ வழக்கு விசாரனைக்கு வந்தது. இதில், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்தது நிரூபிக்கப்பட்டதால், உதயகுமாருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 200 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, தமிழக அரசு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டப்பட்டது.
மேல்மருவத்தூரில் உள்ள ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் மறைந்த பங்காரு அடிகளார் கற்சிலையை நிறுவ, ஆதிபராசக்தி சித்தர் பீட நிர்வாகத்தினர் முடிவெடுத்தனர். இதற்காக மாமல்லபுரத்தில் உள்ள ஒரு சிற்பக்கூடத்தில், தமிழக அரசின் கலைச்செம்மல் விருதுபெற்ற சிற்பக்கலைஞர் முருகன் மேற்பார்வையில், மூன்றரை அடி உயரம், 1 டன் எடை கொண்ட பங்காரு அடிகளார் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த சிலை கோவிலில் நிறுவப்பட உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில், ஒருவர் டெங்கு காய்ச்சலில் உயிரிழந்ததாக நேற்று, செய்தி தொலைக்காட்சிகளில் செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இதற்கு விளக்கமளித்த மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குனர் பரணிதரன், சாதாரண காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். டெங்குவால் யாரும் உயிரிழக்கவில்லை, இதுகுறித்து வெளியான செய்தி தவறானது என கூறினார்.
செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தில் சந்தேகப்படும் படி இருந்த இளைஞரை இன்று (செப்டம்பர் 12) போலீசார் செங்கல்பட்டு நகர காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டர். போலீசாரிடம் சிக்கிய இளைஞர் சென்னை தேனாம்பேட்டை பகுதியை சேர்ந்த விக்னேஷ்குமார் (19) என தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து விக்னேஷ் வைத்திருந்த கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த விசிக நிர்வாகிகளுடன் மண்டல அளவிலான செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. 2-ஆம் தேதி கள்ளக்குறிச்சியில் நடைபெற மாநாடு குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதில் விசிக தலைவர் திருமாவளவன் பங்கேற்றார்.
சேலையூர் அடுத்த மப்பேட்டினை சேர்ந்தவர் அன்னபூரணி (36). இவரது மகள் திவ்யா ஸ்ரீ(12), திருவஞ்சேரி பகுதியில் உள்ள பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், வீட்டின் அருகே உள்ள மாணவி ஒருவருடன் திவ்யா ஸ்ரீ பேசக்கூடாது என தாய் கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்து மாணவி திவ்யா ஸ்ரீ மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் 8 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் 66 பேர் காய்ச்சல் அறிகுறி இருப்பதால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக செங்கல்பட்டு மாவட்ட சுகாதார துறை அலுவலர் பரணிதரன் இன்று (செப்டம்பர் 12) தகவல் தெரிவித்துள்ளார்.
நகராட்சி இயக்குனரகம் சார்பில் தமிழகத்தில் உள்ள நகராட்சி, மாநகராட்சிகளில் துப்புரவு அலுவலர்கள் 18 பேர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் நிர்வாகக் காரணங்களுக்காக பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த அலுவலர்கள் தங்களின் பணியிடங்களில் உடனடியாக பணியில் சேரும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் தாம்பரம் தூப்புரவு அலுவலர் பணியிடம் மாற்றப்பட்டிருந்தார்.
தொடர் விடுமுறையை முன்னிட்டு, கிளாம்பாக்கத்திலிருந்து தி.மலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, நெல்லை, நாகர்கோவில், குமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 13, 14 ஆகிய நாட்களில் 955 பேருந்துகளும், கோயம்பேட்டிலிருந்து தி.மலை, நாகை, வேளாங்கண்ணி, ஒசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 190 பேருந்துகளும், மாதாவரத்திலிருந்து 20 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள், இன்று பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். அவர்களுக்கு, கட்சி உறுப்பினர்களுக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டது. அந்த வகையில், ஊரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மாற்றுக் கட்சியினர் சிலர் பாஜகவில் இணைந்தனர். அவர்களுக்கு, இன்று மாலை உறுப்பினர் அடையாள அட்டைகளை நிர்வாகிகள் வழங்கினர்.
Sorry, no posts matched your criteria.