India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தாம்பரம் அருகே உள்ள முடிச்சூரில், ரூ.42 கோடி செலவில் புதிய ஆம்னி பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. அதன் கட்டுமான பணிகள், 95% நிறைவுற்றுள்ளது. கூடிய விரைவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேருந்து நிலையத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்க உள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார். இதனால், செங்கல்பட்டு மாவட்ட மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
மாமல்லபுரத்தில் நேற்று சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் குவிந்தனர். தீபாவளி பண்டிகையை ஒட்டி நான்கு நாட்கள் விடுமுறை என்பதால், மக்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது. இதனால், உள்ளூர் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மழை குறுக்கிடாததால், உள்ளூர் வியாபாரிகள் நன்றாக வியாபாரம் செய்தார்கள்.
தீபாவளி பண்டிகை நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக காலை 6:00 மணி முதல் காலை 7:00 மணி வரையிலும், இரவு 7:00 மணி முதல் 8:00 மணி வரை மட்டும் 2 மணி நேரம் பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. நேர கட்டுப்பாட்டை மீறி மற்றும் பொது இடங்களில் பட்டாசு வெடித்தவர்கள் மீது செங்கல்பட்டு காவல் மாவட்டத்தில் 16 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
தாம்பரம் மாநகராட்சி உட்பட்ட 70 வார்டுகளிலும் உள்ள தெருக்கள் மற்றும் சாலைகளில் பட்டாசு கழிவுகள் குவிந்து காணப்பட்டது. இதனை அகற்றும் பணிகளில் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் நேற்று, 340 வாகனங்களில், 1546 பணியாளர்கள் பட்டாசு கழிவுகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டனர். 29 டன் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டதாக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மதியம் 1 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், பல இடங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கும் வாய்ப்பு உள்ளது. வெளியே செல்பவர்கள் அதற்கேற்ப தங்கள் பயணத்தை மாற்றிக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், சைதாப்பேட்டை, ஆலந்தூர், மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் காலை மழை பெய்தது.
திருச்சியைச் சேர்ந்த முகமது உமர் (23), வண்டலூர் கிரசென்ட் கல்லூரியில் 3ஆம் ஆண்டு அறிவியல் படிப்பு படித்து வந்தார். விடுதியில் தங்கி படித்து வந்த அவர், இன்று விடுதியின் 6ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். பதறிப்போன சக மாணவர்கள் அவரை மீட்டு மருத்துவமனை கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெளியில் செல்வோர் கட்டாயம் குடை ரெயின்கோட், ஜர்கின் போன்றவற்றை கொண்டு செல்லுங்கள். மெழுகுவர்த்தி, டார்ச் போன்றவற்றை வாங்கி வைக்கவும். வயதானவர்கள், உடல்நலம் பாதிப்பு அடைந்தவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு தேவையான மருந்துகளை வாங்கி வைக்கவும். மழை பெய்யும்போது, ஜன்னல் கதவுளை மூடி வையுங்கள். மின் பழுது பார்க்க வேண்டாம். ஈரமான கைகளுடன் ஸ்விட்ச் போடாதீர்கள். அத்தியாவசிய பொருட்களை வாங்கி வைக்கவும்.
அச்சிறுப்பாக்கம் அடுத்த கொங்கரை மாம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர்கள் மோகன் – மகேஸ்வரி தம்பதியர். இவர்களுக்கு சக்தி என்ற மூன்றரை வயது குழந்தை உள்ளது. நேற்று முன்தினம் மகேஸ்வரி குளிப்பதற்காக வெந்நீர் எடுத்துச் செல்லும்போது கை தவறி குழந்தை மீது கொட்டியது. இதில் பலத்த காயமடைந்த குழந்தையை, கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை நேற்று உயிரிழந்தது.
தாழம்பூர் அண்ணா தெருவைச் சேர்ந்த ராஜா என்பவரது மகன் ஸ்ரீ சுதன் (13). இவர், அதேப் பகுதியை சேர்ந்த அற்புதராஜ் மகன் எஸ்வந்த் (12) உடன் தனியார் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை செம்மஞ்சேரி, வாழ்வெட்டி தாங்கல் குளத்தில் நண்பர்களுடன் குளிக்க சென்றனர். அப்போது, குளித்துக் கொண்டிருந்த இருவரும், நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி இறந்தனர். இதுகுறித்து செம்மஞ்சேரி போலீசார் விசாரிக்கின்றனர்.
செங்கல்பட்டு மாவட்ட அளவிலான கோக்கோ போட்டிகள் கல்பாக்கத்தில் நடைபெற்றது. இதில் மாவட்ட அளவிலான 11 மாணவிகள் அணி, 12 மாணவர் அணி பங்கேற்றது. அதில் மாவட்ட அளவில் சப்ஜூனியர் பிரிவில் கவிதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் அணியும், சீனியர் பிரிவில் மேலக்கோட்டையூர் தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பல்கலைக்கழகம் மாணவியர் அணியும் முதலிடத்தை பிடித்தன.
Sorry, no posts matched your criteria.