India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
செங்கல்பட்டில் நவராத்திரியையொட்டி 10 நாட்கள் நடைபெறும் தசரா விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. சின்னக்கடை வீதியில் 127ஆம் ஆண்டு தசரா விழா கொடியேற்றத்துடன் தொடங்கி 12ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது. இதனையொட்டி தசரா நடைபெறும் சின்னக்கடை வீதியில் பல்வேறு விளையாட்டு சாதனங்கள் ராட்சத ராட்டினம் உணவு கூடங்கள் பொழுதுபோக்கு கூடங்கள் அமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. நீங்க ரெடியா?
குரோம்பேட்டை விஜயலட்சுமி நகரைச் சேர்ந்த சாந்தகுமாரி மற்றும் பாரதிபுரம் சிதம்பரம் தெருவைச் சேர்ந்த சாந்தி ஆகிய இருவரிடமும், அண்மையில் மர்மநபர் செயினை பறித்து சென்றார். இதுகுறித்து, சிட்லப்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து, சம்பவம் நடந்த இடத்திலிருந்து சுமார் 2,000 கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து கேரள மாநிலத்தைச் சேர்ந்த சசி (52) என்பவரை கைது செய்தனர். போலீசாரை பாராட்டலாமே!
போதைப்பொருள் மற்றும் மனமயக்கப் பொருட்களின் சட்டவிரோத விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பான எந்தவொரு தகவலையும், 10581 என்ற கட்டணமில்லா உதவி எண்ணிலும், 9498410581 என்ற வாட்ஸ் அப் எண் மூலமாகவும் அல்லது spnibcid@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும் தெரியப்படுத்த வேண்டும் என்று போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு கூடுதல் டிஜிபி-யான அமல்ராஜ் கேட்டுக் கொண்டுள்ளார். ஷேர் பண்ணுங்க
திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருக்கும் கே.பிரபாகர், பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதன்படி அவர், தாம்பரம் மாநகரகாவல் ஆணையரகத்தின் மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையராக பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கடந்த 6 மாதங்களாக குற்ற பிரிவு துணை ஆணையர் பதவி காலியிடமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
செங்கல்பட்டு நகரில் தசரா விழா நாளை துவங்கப்பட உள்ள நிலையில் சார் ஆட்சியர் நாராயண சர்மா, தசரா விழா நடைபெற உள்ள இடத்தில் ஆய்வு மேற்கொண்டார். பாதுகாப்பு குறைபாடுள்ள ராட்சத ராட்டினங்களை அகற்றவும், போதுமான அளவு கழிப்பறைகள் அமைக்க வேண்டும், குடி தண்ணீர் வசதி ஏற்படுத்த வேண்டும், தீ தடுப்பு சாதனங்கள் பொருத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் சம்பா பருவ சாகுபடி நடைபெற்று வருகிறது. 4,923 மெட்ரிக் டன் உரம் இருப்பு உள்ளது. உர இருப்பு மற்றும் விற்பனையில் ஏதேனும் குறைபாடு ஏற்படும் பட்சத்தில், மாவட்ட வேளாண்மை உதவி இயக்குநர் (தகவல் மற்றும் தரக்கட்டுப்பாடு) கைப்பேசி எண்ணில் (9003727899) மற்றும் மாநில உர கட்டுப்பாட்டு மையம் வாட்ஸ் அப் எண்ணில் (93634 40360) புகார் அளிக்கலாம் என ஆட்சியர் அருண்ராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.
செங்கல்பட்டு அருகில் வேறு எங்கும் எரிவாயு நிரப்பும் நிலையம் இல்லாத காரணத்தால், ஆட்டோ ஓட்டுநர்கள் 10 கி.மீ. தொலைவில் உள்ள மகேந்திரா சிட்டி, 13 கி.மீ. தொலைவில் உள்ள படாளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று எரிவாயு நிரப்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், பொருளாதார ரீதியாக இழப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே, செங்கல்பட்டு பகுதிகளில் சி.என்.ஜி. எரிவாயு நிரப்பும் நிலையம் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் சம்பா பருவ சாகுபடி நடப்பதையொட்டி, மாவட்டத்தில் தற்போது யூரியா உரம் – 1,889 மெ.டன், டி.ஏ.பி உரம் – 627 மெ.டன், பொட்டாஷ் – 180 மெ.டன், என்.பி.கே காம்ப்ளக்ஸ் – 1,990 மெ.டன், சிங்கள் சூப்பர் பாஸ்பேட் – 237 மெ.டன் உரம் தனியார் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனை, விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.
பூம்புகார் விருதுகளுக்கான கலைஞர்களை தேர்வு செய்ய, தமிழகத்தில் உள்ள கைவினைக் கலைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கான, அறிவிப்பை, கைத்திறத் தொழில் வளர்ச்சிக் கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. பூம்புகார் மாநில விருது வழங்கப்படும் 10 பேருக்கு, தலா ரூ.50,000, 4 கிராம் தங்கப்பதக்கம், தாமிரப் பத்திரம் ஆகியவை வழங்கப்படும். தகுதியானவர்கள் வரும் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று (அக்.2) காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, அனைத்து கிராமங்களிலும் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இதில், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், கலெக்டர் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கிறார்கள். பொதுமக்கள் அந்தந்த கிராமங்களில் நடக்கும் கிராம சபை கூட்டங்களில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. காலை 11 மணிக்கு தொடங்க உள்ளது. ஷேர் பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.