India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில், கட்சியின் உறுப்பினர் உரிமைச் சீட்டு வழங்குவது மற்றும் மக்கள் நலப்பணிகள் குறித்த செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டங்கள் மாவட்டம் முழுவதும் வரும் 7ஆம் தேதி முதல் வருகிற 23ஆம் தேதி வரை 16 இடங்களில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த ஒன்றிய, பகுதி, பேரூர், நகர செயலாளர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் என மாவட்ட செயலாளர் ஆறுமுகம் அறிவுறுத்தி உள்ளார்.
செங்கல்பட்டில் மாவட்டத்தில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில், 2024 தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனையினை ஆட்சியர் ச.அருண்ராஜ் நேற்று குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். மேலும், கோ-ஆப்டெக்ஸ் வரும் 30ஆம் தேதி வரை 30% தள்ளுபடி வழங்கப்பட்டு வருகிறது. மக்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி, நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த கோ-ஆப்டெக்ஸ் துணிகளை கொள்முதல் செய்ய ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.
லட்சத்தீவு மற்றும் அதனையொட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் (வெள்ளிக்கிழமை) இன்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருவதால், வெளியே செல்லும் பொதுமக்கள் குடை மற்றும் ரெயின் கோர்ட் எடுத்துச் செல்லுங்கள். ஷேர் பண்ணுங்க
செங்கல்பட்டு அரசு கல்லூரி மருத்துவமனையில் முதல்வராக இருந்த ஆர்.ராஜஸ்ரீ என்பவர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு பணி ஓய்வு பெற்றார். அதனை தொடர்ந்து ஜோதிகுமார் என்பவர் கூடுதல் பொறுப்பாக முதல்வர் பணியை கவனித்து வந்தார். இந்நிலையில் சென்னை மருத்துவக் கல்லூரி இயக்குநர் மற்றும் சிறுநீரகவியல் துறையின் பேராசிரியர் டாக்டர்.ஜி.சிவசங்கர் செங்கல்பட்டு மருத்துவமனையின் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வங்கியின் மேலாளர் பேசுவதாகக் கூறி, வங்கி கணக்கு காலாவதி ஆகப்போகிறது எனத் தெரிவித்து லிங்க் மூலம் செல்போனில் உள்ள அனைத்து தகவல்களையும் மர்ம நபர்கள் கேட்கின்றனர் பின்னர், அதன் மூலம் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை திருடும் சைபர் குற்றங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. இத்தகைய மோசடிகளில் சிக்காமல் எச்சரிக்கையாக இருக்குமாறு செங்கல்பட்டு மாவட்ட சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.
சவுதி அரேபியா நாட்டிலுள்ள ஜெட்டா நகருக்கு, சென்னையில் இருந்து நேரடி விமான சேவைகள் ஏற்கனவே இயக்கப்பட்டு வந்தன. கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக, இந்த நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், சென்னை- ஜெட்டா-சென்னைஇடையேயான நேரடி விமான சேவைகள் 4 ஆண்டுகளுக்கு பின்பு நேற்று மாலை முதல் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளது. இந்த சேவைகள் திங்கள் மற்றும் புதன் ஆகிய இரு நாட்கள் இயக்கப்படுகின்றன. ஷேர் பண்ணுங்க
தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் சங்கத்தின் சார்பாக, நேற்று மாலை வண்டலூரில் மாநில ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், டாஸ்மாக்கில் 21 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிபவர்களை பணி நிரந்தரப்படுத்தி அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், ESI முறையை நடைமுறைப்படுத்த வேண்டும், காலி பாட்டில்கள் திரும்பப்பெறும் பணியை டெண்டர் மூலம் தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.
இந்திய விமானப்படை 1932ஆம் ஆண்டு அக்டோபர் 8ஆம் தேதி நிறுவப்பட்டதை நினைவு கூறும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 8ஆம் தேதி விமானப்படையின் நிறுவன தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதன்படி வரும் 8ஆம் தேதி 92ஆவது நிறுவன தினத்தையொட்டி, தாம்பரம் விமானப்படை தளத்தில் தேசிய அளவிலான விமானப்படை அணிவகுப்பு கொண்டாட்டம் நடைபெறுகிறது. 6ஆம் தேதி மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சி நடக்கிறது.
தாம்பரம் அடுத்த வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில், ஏராளமான விலங்குகள், பறவைகள், ஊர்வன உயிரினங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நேற்று காந்தி ஜெயந்தி விடுமுறையை முன்னிட்டு, ஏராளமானோர் குடும்பம் குடும்பமாக வந்து வண்டலூர் பூங்காவில் உள்ள உயிரினங்களை கண்டு ரசித்தனர். இதனால், நேற்று ஒரே நாளில் சுமார் 15,000 பேர் வந்ததாக பூங்கா நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டில் நவராத்திரியையொட்டி 10 நாட்கள் நடைபெறும் தசரா விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. சின்னக்கடை வீதியில் 127ஆம் ஆண்டு தசரா விழா கொடியேற்றத்துடன் தொடங்கி 12ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது. இதனையொட்டி தசரா நடைபெறும் சின்னக்கடை வீதியில் பல்வேறு விளையாட்டு சாதனங்கள் ராட்சத ராட்டினம் உணவு கூடங்கள் பொழுதுபோக்கு கூடங்கள் அமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. நீங்க ரெடியா?
Sorry, no posts matched your criteria.