Chengalpattu

News October 5, 2024

தயாநிதி அழகிரி பேரில் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

image

சேலையூர் அருகே உள்ள மப்பேடு பகுதியில் இயங்கும் சீயான் இன்டர்நேஷனல் பள்ளிக்கு, கடந்த 2ஆம் தேதி அதிகாலை 1:45 மணிக்கு தயாநிதி அழகிரி பெயரில் வெடிகுண்டு மிரட்டல் இ-மெயில் மூலம் வந்தது. இந்நிலையில், நேற்று மாலை 4 மணிக்கு தான் பள்ளி நிர்வாகம் இ -மெயிலை பார்த்து போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வெடிகுண்டு நிபுணர்களுடன் பள்ளி முழுவதும் சோதனை செய்தனர். குண்டு ஏதும் சிக்காததால் புரளி என தெரியவந்தது.

News October 5, 2024

நவம்பரில் சிறப்பு முகாம்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நவம்பர் 9, 10, 23, 24 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளது. வாக்காளர் படிவங்களை தேவையான அளவு வைத்திருக்க தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு அறிவுறுத்தினார். எனவே, செங்கல்பட்டு மாவட்ட பொதுமக்கள் புதிய இளம் வாக்காளர்களை சேர்த்து பயன்பெறுமாறு தெரிவிக்கப்படுகிறது.

News October 5, 2024

தசரா விழாவில் ராட்டினத்திற்கு அனுமதி: மக்கள் மகிழ்ச்சி

image

செங்கல்பட்டு தசரா விழாவில், போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லாத காரணத்தால் ராட்டினம் இயக்குவதற்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், செங்கல்பட்டு கலெக்டர் உத்தரவின் பேரில், சார் ஆட்சியர் ஆய்வு செய்து பொதுப்பணித்துறை மூலம் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, பாதுகாப்பு வசதிகளுடன் பெண்களுக்கு கழிப்பறை, போதிய மின் விளக்கு வசதி ஏற்படுத்தப்பட்ட நிலையில், ராட்டினத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

News October 5, 2024

நவம்பரில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யலாம்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் வாக்காளர் சிறப்பு முகாம் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. அதன்படி, 9ஆம் தேதி சனிக்கிழமை, 10ஆம் தேதி ஞாயிற்றுகிழமை, 23ஆம் தேதி சனிக்கிழமை, 24ஆம் தேதி ஞாயிற்றுகிழமை ஆகிய தினங்களில் சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற உள்ளன. இதில், வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல் போன்றவற்றை செய்து கொள்ளலாம். ஸர் பண்ணுங்க

News October 5, 2024

ரூ.4.2 கோடி மதிப்புடைய 6 கிலோ தங்கம் பறிமுதல்

image

விமான நிலையத்தில் ஒரே நாளில் அடுத்தடுத்து துபாய் மற்றும் மலேசியா ஆகிய 2 நாடுகளில் இருந்து வந்த 2 விமானங்களில், ரூ.4.2 கோடி மதிப்புடைய, 6 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு, சர்வதேச தங்கம் கடத்தும் கும்பலைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

News October 5, 2024

முன்னாள் படை வீரர்களுக்கு குறைதீர்க்க கூட்டம்

image

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் குறைதீர் கூட்டம் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் முனைவோர் கருத்தரங்கு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் தலைமையில் நடைபெற்றது. முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குனர் சீனிவாசன், மறைமலைநகர் தொழில் மைய பொது மேலாளர் பாலசுப்பிரமணி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் தணிகைவேல் மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

News October 4, 2024

குற்றச் சம்பவங்களை தடுக்க 61 சிசிடிவி கேமராக்கள்

image

கோவளம் கடற்கரை, அங்குள்ள மாதா கோவில், கைலாசநாதர் கோவில், தர்கா உள்ளிட்டவற்றிற்கு உள்நாடு, சர்வதேச சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர். இப்பகுதியில் உள்ள இ.சி.ஆர்., சாலையில், அடிக்கடி விபத்துகளும், கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் குற்றச் சம்பவங்களும் நடிகை நடக்கின்றன. இதனை தடுக்கும் பொருட்டு, வழிபாட்டு தலங்கள், முக்கிய தெருக்கள் என பல்வேறு இடங்களில் 61 நவீன சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

News October 4, 2024

தசரா விழா: ராட்டினம் இயக்க அனுமதி மறுப்பு

image

செங்கல்பட்டில், நவராத்திரி விழாவையொட்டி நூறு ஆண்டுகளுக்கு மேலாக தசரா விழா நடைபெறுகிறது. இந்த ஆண்டுக்கான தசரா நேற்று தொடங்கி வரும் 12ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், ராட்டினம் இயக்குவதற்கு அனுமதி கிடைக்காததால், அவை அனைத்தும் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், பொதுமக்கள், குழந்தைகள் ஏமாற்றத்துடன் சென்றனர். செங்கல்பட்டு நகர போலீசார், தினமும் 100 பேர், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

News October 4, 2024

பயணிகள் இல்லாமல் 10 விமானங்கள் ரத்து

image

சென்னையில் இருந்து இன்று காலை 7.45 மணிக்கு அந்தமான் செல்லும் ஆகாஷா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், காலை 11.20 மணிக்கு இலங்கை செல்லும் ஏர் இந்தியா விமானம், பகல் 1.20 மணிக்கு, பெங்களூர் செல்லும் ஏர் இந்தியா விமானம், பகல் 1.40 மணிக்கு பெங்களூர் செல்லும் ஆகாஷா ஏர்லைன்ஸ் விமானம், மாலை 3.25 மணிக்கு, மும்பை செல்லும் ஏர் இந்தியா பயணிகள் விமானம் உள்ளிட்ட 10 விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டன.

News October 4, 2024

பேருந்து மோதி வடமாநில இளைஞர் பலி

image

திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஜாகீர் உசேன் மற்றும் ஜாபர் உசேன். இருவரும் சோழிங்கநல்லூரில் உள்ள வாடகை வீட்டில் தங்கி, தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். நேற்று வழக்கம்போல் தங்களது பைக்கில் பணிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது, மேட்டுக்குப்பம் அருகே வந்தபோது பைக் நிலைத் தடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். அப்போது, பின்னால் வந்த அரசு பேருந்து மோதி ஜாகீர் உசேன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

error: Content is protected !!