India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
லட்சத்தீவு மற்றும் அதனையொட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று (அக்.7) இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருவதால், வெளியே செல்லும் மக்கள் குடை எடுத்துச் செல்லுங்கள்.
வண்டலூர் அருகே மேலக்கோட்டையூர் ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் கார்த்திக் (40). கூலி தொழிலாளியான இவரது மகன் துரைராஜ் (7), ஹனுமந்த புரம் அரசு பள்ளியில் 3ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், வீட்டின் அருகே இருந்த குட்டையில் அதே பகுதியைச் சோ்ந்த 4 சிறுவா்கள் இன்று விளையாடிக் கொண்டு இருந்துள்ளனா். அப்போது, துரைராஜ் நீரில் மூழ்கி உயிரிழந்தான். இது குறித்து போலீசார் விசாரணை செய்தி வருகின்றனர்.
தாம்பரம் அருகே உள்ள மதுரப்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் வேல்முருகன், துணை தலைவர் புருஷோத்தமன் ஆகியோரின் காசோலையில் கையெழுத்திடும் அதிகாரத்தை நிறுத்தி வைத்து செங்கல்பட்டு ஆட்சியர் அருண் ராஜ் உத்தரவு பிறப்பித்தார். இதனை எதிர்த்த வழக்கு விசாரணையில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன், ஆட்சியரின் உத்தரவுக்கு
இடைக்கால தடை விதித்து விசாரணையை தள்ளி வைத்தார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை வெள்ளம் பாதிப்பு ஏற்படும் இடத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் மீட்பு பணிகளுக்காக வருவாய் துறை, உள்ளாட்சி துறை, தீயணைப்பு துறை ஆகிய துறை அலுவலர்களை ஒருங்கிணைத்து 33 குழுக்கள் அமைத்து மாவட்ட ஆட்சியர் ச.அருள்ராஜ் உத்தரவிட்டுள்ளார். இதில், செங்கல்பட்டு சார் ஆட்சியர், மதுராந்தகம் மற்றும் தாம்பரம் கோட்டாட்சியர்கள் உள்ளிட்ட பலர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாமல்லபுரம் அருகே சாலை விபத்தில் காதலி பலியானதையடுத்து காதலன் அதே இடத்தில் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுராந்தகம் அடுத்த கடம்பூரை சேர்ந்த யோகேஸ்வரன் என்ற கல்லூரி மாணவர் தனது காதலியுடன் இன்று இருசக்கர வாகனத்தில் மாமல்லபுரம் சென்று விட்டு வீடு திரும்பிய போது விபத்து ஏற்பட்டு காதலி பலியானார். இதையடுத்து மனவேதனையில் யோகேஸ்வரன் பேருந்து முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
திருச்சி – தாம்பரம் (06190) அதிவிரைவு ரயில் சேவை, தாம்பரம் – திருச்சி (06191) விரைவு ரயில் சேவை வருகிற 11.10.24 முதல் 31.12.24 வரை இயக்கப்படவுள்ளது. வாரந்தோறும் செவ்வாய், புதன், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் இயக்கப்படும் இந்த ரயில் செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், திருப்பாதிரிப்புலியூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர் வழியாக செல்லும்.
திருக்கழுக்குன்றம் ஒன்றியம் அமமுக கட்சியின் ஆட்சி மன்ற குழு உறுப்பினர் (அரேபியன் கார்டன் ஹோட்டல் உரிமையாளர்) கே.அப்துல் நபில் மற்றும் அமமுக ஒன்றிய செயலாளர் இரா.தனசேகர் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர், கட்சியில் இருந்து விலகி இன்று திமுகவில் இணைந்தனர். திமுக மாவட்ட செயலாளர் க.சுந்தர் தலைமையில், திருக்கழுக்குன்றம் திமுக ஒன்றிய செயலாளர் சரவணன் முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டார்கள்.
சேலையூர் அருகே உள்ள மப்பேடு பகுதியில் இயங்கும் சீயான் இன்டர்நேஷனல் பள்ளிக்கு, கடந்த 2ஆம் தேதி அதிகாலை 1:45 மணிக்கு தயாநிதி அழகிரி பெயரில் வெடிகுண்டு மிரட்டல் இ-மெயில் மூலம் வந்தது. இந்நிலையில், நேற்று மாலை 4 மணிக்கு தான் பள்ளி நிர்வாகம் இ -மெயிலை பார்த்து போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வெடிகுண்டு நிபுணர்களுடன் பள்ளி முழுவதும் சோதனை செய்தனர். குண்டு ஏதும் சிக்காததால் புரளி என தெரியவந்தது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நவம்பர் 9, 10, 23, 24 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளது. வாக்காளர் படிவங்களை தேவையான அளவு வைத்திருக்க தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு அறிவுறுத்தினார். எனவே, செங்கல்பட்டு மாவட்ட பொதுமக்கள் புதிய இளம் வாக்காளர்களை சேர்த்து பயன்பெறுமாறு தெரிவிக்கப்படுகிறது.
செங்கல்பட்டு தசரா விழாவில், போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லாத காரணத்தால் ராட்டினம் இயக்குவதற்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், செங்கல்பட்டு கலெக்டர் உத்தரவின் பேரில், சார் ஆட்சியர் ஆய்வு செய்து பொதுப்பணித்துறை மூலம் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, பாதுகாப்பு வசதிகளுடன் பெண்களுக்கு கழிப்பறை, போதிய மின் விளக்கு வசதி ஏற்படுத்தப்பட்ட நிலையில், ராட்டினத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.