India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 20 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தற்போது மழை பெய்து வருகிறது. திம்மாவரம், புலிப்பாக்கம், பரனூர், மகேந்திராசிட்டி, சிங்கப்பெருமாள் கோவில், மறைமலை நகர், கூடுவாஞ்சேரி ஆகிய பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இதனால், வாகன ஓட்டிகள் மழையில் நனைந்த கொண்டே சென்றனர்.
இந்திய விமானப்படையின் 92ஆவது ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு, தாம்பரம் விமானப்படை தளத்தில் வீரர்களின் அணிவகுப்பு மற்றும் விமான சாகச நிகழ்ச்சி இன்று காலை (அக்.8) தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அணிவகுப்பில் பங்கேற்ற ஒரு வீரர் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவர், உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவருக்கு பதில் மாற்று வீரர் கலந்து கொண்டார்.
செங்கல்பட்டு நகரம் மற்றும் காட்டாங்கொளத்தூர் அதிமுக சார்பில், திமுக அரசை கண்டித்தும், சொத்து வரி உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும் செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில், நகர செயலாளர், மேற்கு ஒன்றிய செயலாளர், வடக்கு ஒன்றிய செயலாளர், முன்னாள் எம்.எல்.ஏ கணிதாசம்பத் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.
மெரினா கடற்கரையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த விமானப்படை வான் சாகச நிகழ்ச்சியைப் பார்க்க வந்ததில் 5 பேர் உயிரிழந்தனர். இதில், செய்யூர் அடுத்த கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி மணி (58) என்பவரும் இறந்துள்ளார். இவர் சென்னையில் தனது தம்பி வேலு வீட்டில் தங்கி வேலை செய்து வந்த நிலையில், இந்த சம்பவம் நடந்துள்ளது. நேற்று, பிரேத பரிசோதனை செய்து குடும்பத்தினரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.
செங்கல்பட்டு, அனகாபுத்தூரைச் சேர்ந்தவர் பாஸ்கர் (58). இவர், அதேப் பகுதியில் கரும்பு ஜூஸ் வியாபாரம் செய்து வருகிறார். பாஸ்கர் தனது வீட்டின் அருகே வசித்து வந்த 9ஆம் வகுப்பு படிக்கு சிறுமிக்கு மிட்டாய் வாங்கி தந்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான புகாரின் பேரில் சங்கர் நகர் போலீசார் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட பாஸ்கரை நேற்று கைது செய்து விசாரிக்கின்றனர்.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவு மையத்தில் இன்று மாலை 3.00 மணியளவில் “குறை கேட்பு கூட்டம்” அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையிலும், மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜ் மற்றும் அனைத்து துறை உயர் அலுவலர்கள் முன்னிலையிலும் நடைபெற உள்ளது. கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் உள்ளாட்சி மன்றப் பிரதிநிதிகள் தங்களது கோரிக்கைகளை மனுக்கள் மூலம் அளித்து பயன்பெறலாம்.
பரனூர் சுங்கசாவடி அருகே ஆவின் கடையில் இருந்து செல்போன் திருடி சென்றதாக அருணாசலம் என்பவர் புகார் கொடுத்திருந்தார். இந்த வழக்கில் நேற்று (அக்டோபர் 07) சஞ்சய், கார்த்திக், லோகேஷ், தீனா, லோகநாதன் ஆகிய ஐந்து பேரை செங்கல்பட்டு தாலுகா போலீசார் கைது செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
வண்டலூர் அருகே மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலை.யில் நடைபெற்ற பள்ளி மாணவர் இடையே (45-55 கிலோ) எடை பிரிவு சிலம்பம் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் மேம்பாட்டு துறை கூடுதல் தலைமை செயலாளர் முனைவர்.அதுல்ய மிஸ்ரா இன்று சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பதக்கங்களை வழங்கினார்.
செங்கல்பட்டு, அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் முகாம் அக்.14ஆம் தேதி காலை 10.00 மணிக்கு நடைபெற உள்ளது. மேலும் விவரங்களை அறிந்துக் கொள்ள செங்கல்பட்டு, மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநர் அவர்களை நேரிலோ / dadskillcpt@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ / 6379090205, 044 – 27426554 என்ற தொலைபேசி எண்ணின் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் Way2News நிறுவனத்தின் ‘மார்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ்’ ஆக பணிபுரிய ஆட்களை தேர்வு செய்ய உள்ளோம். 10ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். இதற்கு மாத ஊதியமாக ரூ.18,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் 9965860996, 9715705825, 9791731249 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளவும்.
Sorry, no posts matched your criteria.