Chengalpattu

News December 16, 2024

இன்று கோயிலுக்கு செல்ல மறந்துடாதீர்கள்

image

மார்கழி மாதம் இன்று (டிச.16) பிறப்பதால், கோயில்கள் அனைத்தும் அதிகாலை 4:30 மணிக்கு திறக்கப்படும். சிவன் கோயில்களில் திருவெம்பாவை, திருபள்ளியெழுச்சி பாடபடும். விஷ்ணு பகவான் கோயில்களில் ஆண்டாள் அருளிய திருப்பாவை பாடபடும். இந்த மார்கழி மாத அதிகாலை பள்ளியெழுச்சி பூஜையில் பங்கேற்பதால் கர்மவினைகள் நீங்கி புண்ணியங்கள் பெருகும் என்பது ஐதீகம். அதனால், பக்தர்கள் அனைவரும் தவறாமல் கோயிலுக்கு செல்லுங்கள்.

News December 16, 2024

மார்கழி முதல் நாளில் செய்ய வேண்டியவை

image

மார்கழி மாதப்பிறப்பன்று சூரிய பகவானை வழிபடுவது நல்லது. அதிகாலையில் எழுந்து புனித நதிகளில் நீராடி, சூரிய பகவானுக்கு நீர் படைத்து வழிபட வேண்டும். சூரிய நமஸ்காரம் செய்து, சூரிய பகவானுக்குரிய மந்திரங்களை சொல்லி மனதார வழிபட வேண்டும். இப்படி பக்தியுடனும், முறையாக வழிபட்டால் அவர்கள் செய்த பாவங்களில் இருந்து விடுபடுவார்கள். எதிர்மறை எண்ணங்கள் நீங்கி, நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்கும் என்பது ஐதீகம்.

News December 15, 2024

செங்கல்பட்டு அருகே வடிநீர் கொட்டியதில் 5 வயது குழந்தை பலி

image

திருப்போரூரை சேர்ந்தவர் சுபத்ரா. கடந்த 9 ந் தேதி வீட்டில் சாதம் வடித்த இவர் வடிநீரை ஊற்றுவதற்காக பாத்திரத்தில் கொண்டு வந்த போது எதிர்பாராத விதமாக குறுக்கே வந்த அவரது 5 வயது மகள் நற்பவி மீது வடிநீர் கொட்டியதில் உடல் வெந்தது. செங்கல்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்தார். திருப்போரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

News December 15, 2024

அரசுப் பேருந்து மோதியதில் 2 கார்கள் சேதம்

image

விழுப்புரத்தில் இருந்து செங்கல்பட்டில் உள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு, அரசு பேருந்து ஒன்று நேற்று மாலை வந்து கொண்டிருந்தது. மறைமலைநகர் நகராட்சி அலுவலகம் பகுதியில் உள்ள சிக்னல் அருகே வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, முன்னாள் நின்று கொண்டிருந்த 2 கார்கள் மற்றும் 1 பைக் மீது பலமாக மோதியது. இதில், கார்கள் 2 சேதமடைந்தன.  இதுகுறித்து போக்குவரத்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News December 15, 2024

மாமியாரை கொன்று தூக்கில் தொங்கவிட்ட மருமகள்

image

திருக்கழுக்குன்றம் அடுத்த நெரும்பூர் பகுதியைச் சேர்ந்த ராஜசேகரின் மனைவி அம்லு (38). இவர், அதே ஊரைச் சேர்ந்த சரவணன் (40) என்பவருடன் தகாத உறவில் இருந்துள்ளார். இதை அறிந்த ராஜசேகரின் தயார் லட்சுமி (50) அம்லுவை கண்டித்துள்ளார். கடந்த 10ஆம் தேதி அம்லு, அம்லுவின் தோழி பாரதி, சரவணன் மூவரும் சேர்ந்து லட்சுமியை கழுத்தை நெரித்து கொன்று தூக்கில் தொங்க விட்டுள்ளனர். மூவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.

News December 14, 2024

முன் பதிவில்லா பெட்டிக்கு பதில் முன்பதிவு பெட்டி இணைப்பு

image

தாம்பரம் முதல் ஜசிதி வரை இயக்கப்படும் வாராந்திர எக்ஸ்பிரஸ் விரைவு ரயிலில் (12376) டிசம்பர்.18 முதல் ஜனவரி 15 வரை ஒரு முன்பதிவில்லா பெட்டிக்கு பதிலாக முன்பதிவு மற்றும் படுக்கை வசதியுடன் கூடிய பெட்டி இணைக்கப்படும் என்றும், மறு மார்க்கத்தில் (12375) டிசம்பர்.21 முதல் ஜனவரி.18 வரை இதே போன்று இணைக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

News December 14, 2024

வடமாநில இளைஞரை சரமாரியாக வெட்டிய கும்பல்

image

உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவர் மகேந்திர குமார் (23). இவர், மறைமலைநகரில் உள்ள ஒரு தனியார் உணவு கம்பெனியில் பணியாற்றி வருகிறார். நேற்று இரவு பணி முடித்து அறைக்கு சென்று கொண்டிருந்தபோது, 3 பேர் கொண்ட கும்பல் இவரை வழிமறித்து செல்போன் பறிக்க முயற்சித்தது. அப்போது, மகேந்திர குமார் கூச்சலிட்டதால், அருகில் உள்ள தொழிலாளர்கள் வருவதற்குள் அந்த கும்பல் மகேந்திர குமாரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர்.

News December 14, 2024

உருவாகிறது புதிய புயல் சின்னம்: கனமழைக்கு வாய்ப்பு

image

அந்தமான் கடலில் இன்று (டிச.14) வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகவுள்ளது. இது வலுபெற்று நாளை (டிச.15) காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும். இது மேற்கு – வடமேற்கு திசையில் தமிழக கடலோர பகுதியை நோக்கி நகரும். இதன் காரணமாக டிச.16 – டிச.18 வரை சென்னை உள்பட வடகடலோர மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவா் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.

News December 13, 2024

லோன் தருவதாக மோசடி; எச்சரிக்கை!

image

லோன் தருவதாக கோரி பலர் சைபர் கிரைம் குற்றங்களில் ஈடுபடுகின்றனர். இதனால் பொதுமக்கள் பணத்தை இழக்கும் நிலை, தற்கொலை உள்ளிட்ட சம்பவங்கள் நடந்துள்ளன. இதனால் தங்களின் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு லோன் தருவதாக கூறி வரும் அழைப்புகளுக்கு பதில் அளிக்க வேண்டாம் என்று செங்கல்பட்டு மாவட்ட காவல் துறை சார்பில் சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். ஷேர் பண்ணுங்க. 

News December 13, 2024

செங்கல்பட்டு காவல்துறை எச்சரிக்கை 

image

தினம் தினம் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். மேலும், செங்கல்பட்டு காவல் துறை சார்பில் பொது மக்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் OTP குறித்து யாரிடமும் பேச வேண்டாம், தேவையற்ற அழைப்புகளை எடுக்க வேண்டாம் என செங்கல்பட்டு போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். ஷேர் பண்ணுங்க. 

error: Content is protected !!