Chengalpattu

News October 14, 2024

வடக்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம்

image

காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம், இன்று ஆலந்தூரில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் அமைச்சருமான தா.மோ. அன்பரசன் தலைமை தாங்கி பேசினார். கூட்டத்தில், துணை முதல்வர் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடுவது, 29ஆம் தேதி வெளியிடப்படும் வாக்காளர் பட்டியலை சரிபார்க்கும் பணியில் கட்சி நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

News October 14, 2024

தாம்பரம் தொகுதி கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு

image

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாம்பரம் தொகுதி 14ஆவது மாநாடு, நேற்று முடிச்சூரில் நடைபெற்றது. இந்த மாநாட்டில், பெருங்களத்தூர் மேம்பாலம் பகுதியில் பாதசாரிகள் கடக்க நடைமேம்பாலம் அமைக்க வேண்டும். அரசு நிலங்களில் வசிப்போருக்கும், ராஜீவ் காந்தி நகர் மக்களுக்கும் விரைந்து பட்டா வழங்க வேண்டும். தாம்பரத்தில் விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

News October 14, 2024

முட்டுக்காடு கடல் பகுதியில் துணை முதல்வர் உதயநிதி ஆய்வு

image

செங்கல்பட்டு மாவட்டம் முட்டுக்காடு கடல் முகதுவாரம் (ப்ளூ பீச் அருகில்) பகுதியில், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று ஆய்வு மேற்கொண்டார். மழைநீர் எளிதாக செல்லும் வகையில் என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது, அமைச்சர் தா.மோ.அன்பரசன், ஆட்சியர் ச.அருண்ராஜ் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.

News October 13, 2024

ஆத்தூர் சுங்கச்சாவடியில் கட்டணமின்றி பயணம்

image

தொடர் விடுமுறை காரணமாக, தென் மாவட்டங்களுக்கு சென்ற வாகனங்கள் இன்று சென்னை நோக்கி திரும்பி வருவதால், ஆத்தூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக, ஆத்தூர் சுங்கச்சாவடியில் வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் கட்டணமின்றி பயணித்து வருகின்றன. இதனால், தற்போது வரை போக்குவரத்து நெரிசல் இல்லாமல் வாகனங்கள் சீராக சென்று கொண்டிருக்கின்றன.

News October 13, 2024

உடல் உறுப்பு தானம் செய்த பெண்ணுக்கு அரசு மரியாதை

image

செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி அருள் நகரில் வசித்தவர் லட்சுமி (57). இவர், மூளைச் சாவு அடைந்ததால், தமிழ்நாடு உடல்‌ உறுப்பு தான ஆணையம்‌ விதிமுறைகளின்‌படி, அவரது 2 சிறுநீரகங்கள்‌, கண்கள் மற்றும்‌ கல்லீரல்‌ தானமாக வழங்கப்பட்டது. உடல் உறுப்புகளை தானம் செய்த பெண்ணின் உடலுக்கு, வண்டலூர் வட்டாட்சியர் புஷ்பலதா மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். உடல் உறுப்பு தானம் செய்ய அனைவரும் முன்வர வேண்டும்.

News October 13, 2024

செங்கல்பட்டு மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்

image

தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு அதிதீவிர (20 செ.மீ.க்கு மேல்) மழைக்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த நிலையில், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது. செங்கல்பட்டு உள்பட 4 மாவட்டங்களுக்கு வரும் 16ஆம் தேதி ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க

News October 13, 2024

ரேஷன் கடைகளில் வேலைக்கு சேர விண்ணப்பிக்கலாம்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு சங்கத்தால் நடத்தப்படும் நியாய விலைக் கடையில், 184 சேல்ஸ்மேன் மற்றும் பேக்கிங் பணிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (https://www.dvbcgl.in) வரும் நவ.7ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கல்வித்தகுதி 10ம் வகுப்பு. ஷேர் பண்ணுங்க

News October 13, 2024

செங்கல்பட்டில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று கனம்ழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, மதுராந்தகம் உள்ளிட்ட பகுதிகளில் காலை வேலைகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். மாலை வேலைகளில் செங்கல்பட்டு, மதுராந்தகம் மற்றும் செய்யூர் ஆகிய பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அக்.15ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

News October 13, 2024

செங்கல்பட்டு – நெல்லை இடையே சிறப்பு ரயில்

image

சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி விடுமுறையை முன்னிட்டு, பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். பயணிகளுக்கு உதவும் வகையில், செங்கல்பட்டு திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயில் (06003) செங்கல்பட்டில் இருந்து இன்று மாலை 3:45 மணிக்கும், திருநெல்வேலியில் இருந்து (0600) நாளை 5:40 மணிக்கு புறப்படும். ஷேர் பண்ணுங்க

News October 13, 2024

உள்ளாடையில் ரூ.72 லட்சம் மதிப்புள்ள தங்கம் கடத்தல்

image

மலேசியா நாட்டிலிருந்து சென்னை வந்த விமானத்தில், ரூ. 72 லட்சம் மதிப்புடைய 1 கிலோ சுத்தமான 24 கேரட் தங்கத்தை, உள்ளாடைக்குள் மறைத்து வைத்து கடத்திக் கொண்டு வந்த சென்னையைச் சேர்ந்த 30 வயது உடைய சுற்றுலா பயணியை சுங்க அதிகாரிகள் கைது செய்தனர். தங்கத்தை பறிமுதல் செய்த விமான நிலைய அதிகாரிகள், அந்தப் பயணியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

error: Content is protected !!