India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
செங்கல்பட்டு மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் 21ஆவது கால்நடை கணக்கெடுப்புப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜ் இன்று (04.11.2024) தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் கால்நடை பராமரிப்புத் துறை காஞ்சிபுரம் மண்டல இணை இயக்குநர் ப.ஜெயந்தி, துணை இயக்குநர் ஆ.சுந்தரேசன், செங்கல்பட்டு கோட்ட உதவி இயக்குநர் கு.சாந்தி, கால்நடை உதவி மருத்துவர்கள் மற்றும் கால்நடை ஆய்வாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்துள்ளது. நாளை முதல் செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம்,திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த திமுக மாணவர் அணி நிர்வாகி டெல்லி பாபு என்கிற விக்கி (19). கல்லூரி மாணவரான இவர், நேற்று மாலை எருமையூரில் இருசக்கர வாகனத்தில் போட்டோ எடுப்பதற்காக சென்று கொண்டிருந்தார். அப்போது, பூந்தமல்லியில் இருந்து வந்த மற்றொரு பைக் மோதி பாபு மீது மோதியது. இதில்,அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இந்த சம்பவம் தொடர்பாக தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம், தலைவர் விஜய் தலைமையிலும், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முன்னிலையிலும் செங்கல்பட்டு மாவட்டம் பனையூரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், 26 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. மேலும், சமீபத்தில் மாநாடு நிகழ்ச்சிக்கு வந்த நிர்வாகிகள் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னை விமான நிலையத்திற்கு, நள்ளிரவில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் இ-மெயில் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வெடிகுண்டு நிபுணர்கள், பாதுகாப்பு அதிகாரிகள், சென்னை விமான நிலையத்தில் நள்ளிரவில் இருந்து இன்று காலை வரை நாய்கள் உதவியுடன் விடிய விடிய மோப்ப சோதனைகள் நடத்தினர். அதன்பின், அது புரளி என்று தெரிய வந்தது. விமான நிலைய போலீசார் வழக்குபோல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுராந்தகம் அருகே உள்ள வேடந்தாங்கல் பகுதியில், புகழ்பெற்ற பறவைகள் சரணாலயம் உள்ளது. இங்குள்ள ஏரி, 86 ஏக்கர் பரப்பளவு உடையது. தற்போது, வங்கதேசம், மியான்மர், இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வலசை பறவைகள் அதிகளவில் வரத் தொடங்கியுள்ளன. இங்கு செப்., மாத கடைசி வாரத்தில், வலசை பறவைகள் வர தொடங்கும். ஆனால், தற்போது அக்., மாதத்தின் தொடக்கத்தில் 2,500 பறவைகள் வந்துள்ளன.
இந்தியாவில் தடை செய்யப்பட்ட சேட்லைட் போனுடன், சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு விமானத்தில் பயணம் செய்ய முயன்ற அமெரிக்க நாட்டைச் சேர்ந்த பயணி டேவிட் (51), சென்னை விமான நிலையத்தில் சிக்கினார். சென்னை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள், சேட்லைட் போனை பறிமுதல் செய்து, அமெரிக்க பயணியின் சிங்கப்பூர் பயணத்தையும் ரத்து செய்து, மேல் நடவடிக்கைக்காக சென்னை விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனர்.
செங்கல்பட்டில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனால் வெளியே செல்பவர்கள் குடை, ரெயின் கோட் எடுத்துச் செல்லுங்கள். தாழ்வான பகுதி மற்றும் சாலைகளில் மழைநீர் தேங்குமென்பதால், வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக செல்லுங்கள்.
சென்னை திரும்பும் பயணிகளின் வசதிக்காக, காட்டாங்கொளத்தூரில் இருந்து நாளை (நவ.4) காலை 4, 4.30, 5, 5.45, 6.20 மணிக்கு தாம்பரத்திற்கு சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்த ரயில் பொத்தேரி, கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், வண்டலூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். தாம்பரத்தில் இருந்து அதிகாலை 5.05 மணி மற்றும் 5.40 மணிக்கு காட்டாங்கொளத்தூருக்கு 2 சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது.
தாம்பரம் அருகே உள்ள முடிச்சூரில், ரூ.42 கோடி செலவில் புதிய ஆம்னி பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. அதன் கட்டுமான பணிகள், 95% நிறைவுற்றுள்ளது. கூடிய விரைவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேருந்து நிலையத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்க உள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார். இதனால், செங்கல்பட்டு மாவட்ட மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.