India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
செங்கல்பட்டு மாவட்ட பகுதிகளை (திருப்போரூர், செய்யூர், மதுராந்தகம்) உள்ளடக்கிய காஞ்சிபுரம் தொகுதியில் (செங்கல்பட்டு, இரண்டாவது சுற்று நிலவரப்படி திமுக முன்னிலை பெற்றுள்ளது. இதில் திமுக 52669 வாக்குகளும், அதிமுக 34693 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி 11507 வாக்குகளும், பாமக 15255 வாக்குகளும் பெற்றுள்ளனர்.இதன்படி, திமுக வேட்பாளர் க.செல்வம் 17976 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார்.
ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் 3வது சுற்றில் திமுக கூட்டணி வேட்பாளர் டி.ஆர்.பாலு 82,246 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் பிரேம்குமார் 31,999 வாக்குகளும், பாஜக கூட்டணி தமாக வேட்பாளர் வேணுகோபால் 17,830 வாக்குகளும், நாதக வேட்பாளர் 17,031 வாக்குகளும் பெற்றுள்ளனர். திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு 50,246 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் 2வது சுற்றில் திமுக கூட்டணி வேட்பாளர் டி.ஆர்.பாலு 54,792 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் பிரேம்குமார் 21,892 வாக்குகளும், பாஜக கூட்டணி தமாக வேட்பாளர் வேணுகோபால் 12, 345 வாக்குகளும், நாதக வேட்பாளர் 11, 558 வாக்குகளும் பெற்றுள்ளனர். திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு 32,930 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
ஸ்ரீபெரும்பத்தூர் தொகுதி முதல் சுற்று விவரம் வெளியாகியுள்ளது. திமுக கூட்டணி, 26949. அதிமுக கூட்டணி- 11015, பாஜக கூட்டணி – 5291 நாதக – 5567, திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு 15934 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை.
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் ஸ்ரீ பெரும்புதூர் தொகுதியின் தபால் வாக்கு முதல் சுற்று நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி திமுக டி.ஆர். பாலு 4072 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். தொடர்ந்து, அதிமுக கூட்டணி 2091 பெற்று இரண்டாமிடமும் , நாதக 892 பெற்று மூன்றாமிடமும், பாஜக கூட்டணி 439 பெற்று நான்காமிடமும் பெற்றுள்ளன.
18ஆவது மக்களவை தேர்தலுக்கான வாக்குகளை எண்ணும் பணி சற்றுமுன் தொடங்கியது. திருப்பெரும்புதூர் மக்களவை தொகுதியில் பதிவான தபால் வாக்குகள் முதலில் எண்ணப்பட்டு வருகின்றன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி 8.30 மணிக்கு தொடங்கும்.
தமிழகத்தில் முன்னாள் முதல்வர் மறைந்த கருணாநிதியின் 101 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சிக்குட்பட்ட 18 ஆவது வார்டு பகுதியில் கலைஞரின் திருவுருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனை தொடர்ந்து இனிப்புகள் வழங்கினர்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி 101 – வது பிறந்த நாளை முன்னிட்டு தாம்பரம் பேருந்து நிலையத்தில் மண்டல குழு தலைவர் டி.காமராஜ் ஏற்பாட்டில் 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தாம்பரம் சட்ட மன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி சிறப்பித்தார். இதில் மேயர் வசந்தகுமாரி கமலகண்ணன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த, கிழக்கு கடற்கரை சாலை சதுரங்கப்பட்டினம் காவல் நிலையத்தை ஒட்டியுள்ள பகுதியில் நேற்று திடீரென தீ பற்றியது. இதனால் புதரில் வெயிலில் காய்ந்திருந்த செடிகள் மீது தீப்பிடித்து அருகில் உள்ள பனை மரங்கள் மீது தீ பரவியது. இதில் 150 க்கும் மேற்பட்ட பனை மரங்கள் கருகின. கல்பாக்கம் தீயணைப்பு துறையினர் வந்து தீயை அணைத்தனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தை சுற்றியுள்ள நகர பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது. இதனால், பொதுமக்கள் பெருமகிழ்ச்சி அடைந்தனர். இடி வெயிலின் தாக்கத்தினால் மக்கள் சிரமப்பட்டு வந்த நிலையில், மழை பெய்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.
Sorry, no posts matched your criteria.