Chengalpattu

News October 18, 2024

இலவச மரக்கன்றுகளைப் பெற அழைப்பு

image

அச்சிறுபாக்கத்தில் உள்ள வனச்சரக அலுவலக வளாகத்தில், 20,000 மரக்கன்றுகள் கடந்த மே மாதம் நடப்பட்டன. ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல் மற்றும் பட்டா, சிட்டா, அடங்கல் உள்ளிட்டவற்றை, அச்சிறுபாக்கத்தில் உள்ள வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்து இலவசமாக மரக்கன்றுகளைப் பெற்றுச் செல்லலாம். 1 ஏக்கர் நிலத்திற்கு, 200 மரக்கன்றுகள் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஷேர் பண்ணுங்க

News October 18, 2024

செங்கல்பட்டில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

image

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில், மாவட்ட வேலை வாய்ப்புத்துறை சார்பில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில், 40க்கு மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்றன. இந்த வேலைவாய்ப்பு முகாமில் 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள், இளம் பெண்கள் பங்கேற்றனர். இந்த முகாமினை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் தணிகாச்சலம் தொடங்கி வைத்தார். தேர்வாகும் நபர்களின் விபரம் விரைவில் வெளியாகும்.

News October 18, 2024

செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரியில் வேலைவாய்ப்பு

image

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், தீவிர சிகிச்சை பதிவேடு உதவியாளர் மற்றும் காலியாக உள்ள 14 பணியிடங்களுக்கு, தகுதியானோர் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். மேலும், பணியிடங்கள், கல்வி தகுதி உள்ளிட்ட விவரங்களை <>chengalpattu.nic.in<<>> என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

News October 18, 2024

தலையணை விழுந்து மூச்சு திணறி குழந்தை உயிரிழப்பு

image

தைலாவரத்தை சேர்ந்தவர் பார்த்திபன் (32). இவரது மனைவி பவானி (30). இவர்களுக்கு 50 நாட்களேயான லோகமித்ரன் என்ற குழந்தை இருந்தது. லோகமித்திரனின் மீது நேற்று தலையணை விழுந்ததால், மூச்சுத் திணறி குழந்தை உயிரிழந்தது. நள்ளிரவு 1.30 மணிக்கு பார்த்தபோது குழந்தை மூச்சு பேச்சு இல்லாமல் இருந்துள்ளது. அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது, குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர் தெரிவித்தார்.

News October 18, 2024

அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு

image

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் காலை 10 மணி வரை திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, வீட்டை விட்டு வெளியே செல்பவர்கள் குடையை எடுத்துச் செல்லவும். மேலும், வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது.

News October 18, 2024

விராலூர் ஊராட்சியில் மழையினால் குடிநீர் தொட்டி இடிந்து விழுந்தது

image

விராலூர் ஊராட்சியில் வெற்றிக்காடு கிராமத்தில் கனமழை பெய்தால், கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அதிகாலை திடீரென இடிந்து விழுந்தது. இதனால், குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகினர். மேலும், இடிந்து விழுந்த குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு பதிலாக புதிய தொட்டி அமைக்க கோரிக்கை எழுந்துள்ளன.

News October 18, 2024

பழைய காவல் குடியிருப்பில் வெடித்த மர்மபொருள்!

image

மாமல்லபுரம் பழைய காவலர் குடியிருப்பு அருகில் இருந்த பாழடைந்த கட்டிடத்தில், பயங்கர சத்தத்துடன் மர்மபொருள் ஒன்று நேற்றிரவு வெடித்தது. இதில், கட்டிடத்தின் சுவர் இடிந்த நிலையில், மர்ம பொருள் வெடித்த அதிர்வினால் அருகில் உள்ள குடியிருப்புகளின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சிதறின. தகவல் அறிந்து அங்கு வந்த மாமல்லபுரம் டி.எஸ்.பி. ரவி அபிராம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

News October 18, 2024

தாம்பரம் மாநகராட்சிக்கு உதவி ஆணையர் நியமனம்

image

போடிநாயக்கனூர் நகராட்சி ஆணையராக இருந்த ஜி.ராஜலக்ஷ்மி, தாம்பரம் மாநகராட்சியின் உதவி ஆணையராக பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் ஒன்பது மாநகராட்சிகளுக்கு நகராட்சிகளில் பணிபுரிந்த ஆணையர்கள் பணியை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நகராட்சி நிர்வாக மற்றும் குடிநீர் வழங்க துறை சார்பில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

News October 18, 2024

புலிப்பாக்கம் அருகே லாரி ஓட்டுநரை மிரட்டி வழிப்பறி

image

அரியலூரில் இருந்து சென்னைக்கு சிமெண்ட் லோடு ஏற்றி வந்த கடையநல்லூர் அடுத்த புளியங்குடியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் விஷ்ணுதேவா(40) செங்கல்பட்டு அடுத்த புலிப்பாக்கம் ஜி.எஸ்.டி சாலை அருகில் லாரியை நிறுத்திவிட்டு தூங்கியபோது, இன்று அதிகாலை இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் இருவர் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் மற்றும் 1000 ரூபாயை பறித்து சென்றுள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News October 17, 2024

உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

image

செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளாக வேலையின்றி உள்ள இளைஞர்களிடமிருந்து 01.10.2024 காலாண்டிற்கான உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். டிசம்பர் 10ஆம் தேதிக்குள்ள விண்ணபிக்க வேண்டும்.

error: Content is protected !!