India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மாமல்லபுரம் கலங்கரை விளக்கம் காணும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை, கடந்த 10 ஆண்டுகளில் 300 சதவீதமாக அதிகரித்துள்ளதாக இந்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மாமல்லபுரம் கலங்கரை விளக்க மேல்தளத்திலிருந்து, சுற்றுபுற அழகை, பறவை பார்வையில் கண்டு ரசிக்கலாம் என்பதால், பயணிகள் கலங்கரைவிளக்க சுற்றுலாவிற்கு ஆர்வம் காட்டுகின்றனர். உங்களுக்கு கலங்கரை விளக்கம் பிடிக்குமா?
பல்லாவரத்தில் இன்று மாலை செங்கல்பட்டு மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலுக்கான செயல்திட்டங்கள் மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.
சென்னை விமான நிலையத்தில் சர்வதேச முனையத்திலிருந்து, உள்நாட்டு முனையத்திற்கு டிரான்சிட் பயணிகள் வரும் வழியில் உள்ள 7 அடி உயரம் 3 அடி அகலம் கொண்ட கண்ணாடி கதவு திடீரென உடைந்து நொறுங்கியது. இதையடுத்து, விமான நிலைய அதிகாரிகள், அந்த வழியை மூடிவிட்டு, பயணிகளை வேறு வழியாக அனுப்பி வருகின்றனர். சென்னை விமான நிலையத்தில் கண்ணாடிகள் உடைவது, தொடர்ந்து வருவதால் பரபரப்பு உள்ளது.
இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 17 ராமேஸ்வரம் மீனவர்கள், இலங்கையிலிருந்து ஏர் இந்தியா பயணிகள் விமானம் மூலம் சென்னை வந்தனர். சென்னை விமான நிலையத்திற்கு வந்த மீனவர்களை, தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்று, அரசு ஏற்பாடு செய்திருந்த வாகனங்களில் அவரவர் சொந்த ஊரான ராமேஸ்வரத்திற்கு அனுப்பி வைத்தனர். இலங்கையில் மீட்கப்பட்டதற்காக மீனவர்கள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.
மாமல்லபுரம் போலீஸ் குடியிருப்பு வளாக கட்டடத்தில், நேற்று முன்தினம் இரவு 7:30 மணிக்கு மர்ம பொருள் பலத்த ஓசையுடன் வெடித்து சிதறியது. இதில், கட்டட சுவர் சிதறி, வீடுகளின் ஜன்னல்கள் உடைந்தன. தொடர்ந்து, வெடி விபத்து ஏற்பட்ட இடத்தில், வெடிகுண்டு தடுப்பு பிரிவினர், தடய அறிவியல் துறையினர் ஆகியோர் நேற்று சோதனை நடத்தினர். வெடித்தது வெடிகுண்டுதானா? என்பதை, ஆய்வுக்கு பின்னரே தெரிவிக்க முடியும் என தெரிவித்தனர்.
செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். 10ஆம் வகுப்பில் தோல்வி – ரூ.200, 10ஆம் வகுப்பு தேர்ச்சி – ரூ.300, 12ஆம் வகுப்பில் தேர்ச்சி – ரூ.400 மற்றும் பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.600 வழங்கப்பட்டு வருகிறது. ஷேர் பண்ணுங்க
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சிறிய அளவிலான வேலை வாய்ப்பு முகாமில் தேர்வு பெற்ற 58 ஆண்கள், 25 பெண்கள் என 83 தேர்வாகினர். அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் பணி நியமன ஆணைகளை நேற்று வழங்கினார். மேலும், முதற்கட்ட தேர்வில் 143 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இந்த நிகழ்வின் போது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் தணிகைவேல் உட்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
செங்கல்பட்டு நகர காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி, அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று மாலை வீட்டின் அருகில் உள்ள மளிகை கடைக்கு சென்று வீட்டிற்கு வந்தபோதுபின்னால் வந்த இருமர்ம நபர்கள் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக வந்த புகாரையடுத்து அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்திலிருந்து காஞ்சிபுரம் செல்லக்கூடிய சாலையில் ஐந்தடி ஆழம் மற்றும் மூன்றடி அகலத்திற்கு திடீரென பள்ளம் ஏற்பட்டது. இந்த சாலையின் குறுக்கே கால்வாய் செல்வதால் சிமெண்ட் கான்கிரிட் கொண்டு அமைக்கப்பட்ட சாலையில் பள்ளம் விழுந்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பள்ளிகள், பதிவுத்துறை அலுவலகம் செல்லும் முக்கிய சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த ராஜா (30), செல்போன் விற்பனை நிலையத்தில் பணிபுரிந்து வந்தார். இவர், கடந்த 16ஆம் தேதி உடல்நிலை பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், நேற்று மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதயம், நுரையீரல், கல்லீரல், கணையம், சிறுநீரகம், குடல்கள் போன்ற உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன. கோட்டாட்சியர் தலைமையில் இறுதி சடங்கு நடைபெறுகிறது.
Sorry, no posts matched your criteria.