Chengalpattu

News October 23, 2024

திருப்போரூரை நகராட்சியாக தரம் உயர்த்த முடிவு

image

பேரூராட்சி மற்றும் அருகில் உள்ள ஊராட்சிப் பகுதிகளை ஒருங்கிணைத்து, புதிய நகராட்சிப் பகுதியாக தோற்றுவிக்க உள்ள உள்ளாட்சி நிர்வாகங்களின் பட்டியலில், திருப்போரூர் இடம்பெற்றுள்ளது. திருப்போரூர் பேரூராட்சியுடன், சுற்றுப்புற ஊராட்சிப் பகுதிகளை இணைத்து, நகராட்சியாக தரம் உயர்த்த, நகராட்சி நிர்வாகத்துறை பரிசீலித்து வருகிறது. இதனால், புதிய நகராட்சிப் பகுதியின் மக்கள்தொகை 75,000 பேருக்கு மேல் உயரும்.

News October 23, 2024

நீதிமன்ற வழக்குரைஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

image

வழக்குரைஞர்களுக்கு எதிராக சுற்றறிக்கை விட்டுள்ள தமிழ்நாடு டி.ஜி.பி. மீது உரிய நடவடிக்கை எடுத்து, மேற்படி சுற்றறிக்கையை தமிழ்நாடு அரசும், காவல்துறையும் திரும்பபெற வேண்டும் என்பதை வலியுறுத்தி, செங்கல்பட்டு வழக்கறிஞர்கள் சங்கம் (சி.பி.ஏ.) சார்பில் சங்கத்தின் தலைவர் ஆனந்தீஸ்வரன் தலைமையில், நீதிமன்ற நுழைவு வாயிலில் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குரைஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

News October 23, 2024

காவல் நிலையத்தில் பிளேடால் அறுத்து தற்கொலை முயற்சி

image

பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் யோகேஸ்வரன். இவர், மதன் என்பவரை தாக்கியதால் விசாரணைக்காக பெரும்பாக்கம் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார். அப்போது, திடீரென தான் மறைத்து வைத்திருந்த பிளேடால் தனது கழுத்தில் அறுத்துக் கொண்டார். பதறிய போலீசார் அவரை மீட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News October 23, 2024

வாலிபரை கத்தியால் வெற்றிய மர்ம கும்பல்: போலீசார் வலை

image

பெரும்பாக்கம், வீரபத்திர நகரைச் சேர்ந்தவர் வினோ ஏட்வர்சிங். இவர், வீரபத்திரன் நகர் அருகே நடந்து சென்றபோது இன்று அதிகாலை 2 மணி அளவில் மர்ம நபர்கள் அவரை வழிமறித்து சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர். அக்கம் பக்கத்தினர் உதவியுடன், தற்போது தாம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக, பெரும்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

News October 23, 2024

வடமாநில இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

image

ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சீர் முகமது (28), மேடவாக்கம் சிவகாமி நகர் பகுதியில் தங்கி அங்கேயே கட்டிட வேலை செய்து வருகிறார். நேற்று மாலை 5 மணி அளவில், கட்டிட பணி செய்யும்போது எதிர்பாராத விதமாக மின்சார கம்பி அவர் மீது பட்டதில் அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேடவாக்கம் போலீசார் உடலை கைப்பற்றி தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News October 23, 2024

வரும் 25ஆம் தேதி விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் வரும் 25ஆம் தேதி விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் காலை 10:30 மணி அளவில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு, விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகளை மட்டும், தெரிவித்து பயன்பெறலாம், என, மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.

News October 23, 2024

அமைச்சரிடம் 210 கோரிக்கை மனு அளிப்பு

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் இன்று மாலை (22.10.2024) உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி, பொதுமக்களிடம் 210 கோரிக்கை மனுக்களை பெற்றார். இந்த முகாமில் மாவட்ட ஆட்சியர் ச.அருண் ராஜ், எம்எல்ஏக்கள், அரசுத்துறை அதிகாரிகள் பலரும் பங்கேற்றனர்.

News October 23, 2024

ஆட்சியர் அலுவலகத்தில் ஓய்வூதியர் குறைதீர் நாள் கூட்டம்

image

செங்கல்பட்டு ஆட்சியர் கூட்டரங்கில் ஓய்வூதியர் குறைதீர் நாள் கூட்டம் சார் ஆட்சியர் நாராயணசர்மா தலைமையில் நடைப்பெற்றது. இதில் ஓய்வூதியர் சங்கங்களை சார்ந்தவர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டு தங்களின் குறைகளை தெரிவித்தனர். கூட்டத்தில் 11 மனுக்கள் சார் ஆட்சியரிடம் வழங்கப்பட்டது. மேலும், கடந்த கூட்டத்தில் வழங்கப்பட்ட மனுக்கள் மீதான நடவடிக்கை, உரியவிளக்கம் எடுக்கப்பட்டது.

News October 22, 2024

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை மழை

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை, இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஊரப்பாக்கம், செய்யூர், மதுராந்தகம்சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களாக வெயில் வாட்டிய நிலையில், தற்போது பெய்துவரும் மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.

News October 22, 2024

மாமல்லபுரம் காவலாளியை தாக்கிய 3 பேர் கைது

image

மாமல்லபுரம் அருகே உள்ள 5 ரதம் பகுதியில், நேற்று முன்தினம் ‘No Entry’ வெளியாக காரை தடுத்த நிறுத்திய காவலாளியை, 2 பெண்கள் 2 ஆண்கள் சேர்ந்து கம்பியால் கொடூரமாக தாக்கிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், போலீசார் விசாரணை நடத்தி தாக்குதலில் ஈடுபட்ட சண்முகப்பிரியா, கீர்த்தனா மற்றும் பிரபு இன்பதாஸ் ஆகிய 3 பேரை இன்று காலை கைது செய்தனர். மேலும், அவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!