India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தந்தை பெரியாரின் 147ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. முதல் சுயமரியாதை மாநாடு, 1929 ஆம் ஆண்டு பிப்ரவரி 17, 18 ஆம் தேதிகளில் செங்கல்பட்டில் நடைபெற்றது. இதில் ‘நாயக்கர்’ என்ற சொல் இருந்த இடத்தில் ‘பெரியார்’ என்ற சொல்லை முதன் முதலாகச் சேர்த்து ‘ஈ. வெ. இராமசாமிப் பெரியார்’ என சாதி பெயரை சாதிப்பெயரை நீக்கி, அனைவரின் பெயருக்குப் பின்னால் வரும் சாதிப் பெயரை நீக்க முன்னுதாரணமாக விளங்கினார்.
பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க ரேஷன் கார்டு, மொபைல் எண், ஆதார் அட்டை, வங்கிக் கணக்குப் பாஸ்புக், மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஆகிய ஐந்து ஆவணங்கள் போதுமானது. <
செங்கல்பட்டு மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் 17ம் தேதி தாம்பரம் வருவாய் கோட்டத்தில் காலை 10:30 மணிக்கு மதுராந்தகம் வருவாய் கோட்டத்தில் பிற்பகல் 2.30 மணிக்கு சம்பந்தப்பட்ட கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் தலைமையிலும், செங்கல்பட்டு சார் ஆட்சியர் அலுவலகத்தில் செங்கல்பட்டு சார் ஆட்சியர் தலைமையில் 18ம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது என்ன மாவட்ட ஆட்சியர் சினேகா தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று (செப்-16) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு அருகே, இளந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவரும், பாமக முன்னாள் ஒன்றியச் செயலாளரும், அன்புமணி ஆதரவாளருமான வாசு என்பவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். தனியார் நிறுவனங்களுக்குக் கேட்டரிங் மற்றும் குடிநீர் விநியோகம் செய்து வந்த இவர், லாரியில் தண்ணீர் எடுக்கச் சென்றபோது, வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். தொழில் போட்டிக்காரணமாக கொலை நடைபெற்றதா என, காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மொபைல் பயன்பாடு அதிகரித்து வரும் இந்த டிஜிட்டல் காலத்தில் லிங்க் அனுப்பி பணம் திருடுதல், வங்கி ஊழியர் போல் பேசி திருடுதல், தனிப்பட்ட தகவல்கள் திருட்டு போன்ற குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து புகாரளிக்க சைபர் கிரைம் ADGP-044-29580300, மாநில கட்டுப்பாட்டு அறை-044-29580200, TOLL FREE NO-1930ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். நண்பர்களுக்கும் பகிருங்கள் கண்டிப்பாக உதவும்.
தாம்பரம் அடுத்த சேலையூரைச் சேர்ந்த 8 வயது சிறுமி நேற்று மாலை தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது மதுபோதையில் வந்த நபர் ஒருவர் சிறுமியை மாடிக்கு தூக்கி சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்கள் போதையில் இருந்த நபரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் கேரளாவை சேர்ந்த நிஷாயுதின் (30) என்பது தெரியவந்தது.
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில அணி, பிரிவுகளுக்கு பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் செங்கல்பட்டு வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட மேற்கு தாம்பரம் மண்டலத்தில் உள்ள வழக்கறிஞர் குமரகுரு வழக்கறிஞர் பிரிவின் மாநில தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சென்னை உயர்நீதி மன்றத்தின் வழக்கறிஞராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் ஆதார் கார்டுடன் Address Proof-ஐ இணைத்து விட்டீர்களா? இல்லையெனில்,<
தமிழக ரயில்வேயில் Seclection controller பணிக்கான வேலை வாய்ப்பு வெளியாகியுள்ளது. இதற்கு எதாவது ஒரு டிகிரி முடித்த 20-30 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு மொத்தம் 368 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாத சம்பளம் ரூ.35,400 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
Sorry, no posts matched your criteria.