India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்போரூர் ஸ்ரீ கந்தசாமி திருக்கோயில் கந்த சஷ்டி விரதம் 5ஆவது நாளை முன்னிட்டு, 06-11-2024 புதன்கிழமை இன்று பூத வாகனத்தில் முருகர் மற்றும் வள்ளி தெய்வானை ஆகிய சிலைகள் வைக்கப்பட்டு, பக்தர்கள் அனைவரும் ஒன்று திரண்டு வீதி உலாவாக தூக்கி சென்றனர். பக்தர்கள் அனைவரும் முருகப்பெருமானை தரிசித்து சென்றனர்.
தாம்பரம் பகுதியில், இன்று காலை முதல் போலீசார் கஞ்சா வேட்டை நடத்தி வருகின்றனர். இந்நிலையில சூடான் நாட்டைச் சேர்ந்த பியார் அபோய் ஆராக் (31), முகமது அல்ஸ்மானே (30), முகமது ஹேதாம் எல்ராயா எல்சிக் (29) மற்றும் அதே பல்கலை.,இல் 4ஆம் ஆண்டு சட்டம் படித்து வரும் திருச்சியைச் சேர்ந்த ஜாவித் (22) ஆகிய 4 பேரை பிடித்து பல்லாவரம் காவல் நிலையம் அழைத்துச் சென்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில், மதுராந்தகம், சித்தாமூர், லத்துார் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களாக பணிபுரிந்து வரும் 5 பேருக்கு, தற்காலிகமாக வட்டார வளர்ச்சி அலுவலராக பதவி உயர்வு வழங்கி கலெக்டர் அருண்ராஜ் நேற்று முன்தினம் உத்தரவிட்டார். அதன்படி, க.ஜெகன், எஸ்.சுந்தரமூர்த்தி, வி.என்.சுரேஷ்ராஜ், டி.கோபிநாத், எம்.கோபாலகண்ணன் உள்ளிட்டோருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த குழிப்பாந்தண்டலம் பகுதியைச் சேர்ந்த கார்த்திகா, அனுஷ்கா, மிர்த்திகா, சிவப்பிரியா, பிரியங்கா, காவியா, ரித்திகா ஆகியோர் இன்று காலை பள்ளிக்கு ஷேர் ஆட்டோவில் சென்றுள்ளனர். ஆட்டோ ஓட்டுநரின் கவனகுறைவால், பண்டிதமேடு பேருந்து நிறுத்தும் அருகே ஆட்டோ நிலைத்தடுமாறி விழுந்தது. இதில் மாணவிகள் அனைவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.
தமிழகத்தில், 2024-25ஆம் ஆண்டில் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் சிறப்பு பருவம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. செங்கல்பட்டில் இத்திட்டம், ‘அக்ரிகல்ச்சர் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிமிடெட்’ காப்பீட்டு நிறுவனம் வாயிலாக செயல்படுத்தப்படுகிறது. ஏக்கருக்கு ரூ.517.5 செலுத்தி, வரும் 15ஆம் தேதிக்குள் விவசாயிகள் காப்பீடு செய்ய வேண்டும் என செங்கல்பட்டு கலெக்டர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
ஊராட்சிப் பகுதியில் உள்ள குளங்களில் மீன் உற்பத்தியை பெருக்கவும், நாட்டு இன மீன்கள் அழியாமல் பாதுகாக்கவும், நீர்நிலைகளில் மீன்வளம் நிலைக்கவும், மீன் குஞ்சுகளை இருப்பு வைத்து குளத்தில் விடும் திட்டம் செயல்படுத்தப்படுள்ளது. சப் – கலெக்டர் நாராயண சர்மா, நேற்று திருக்கழுக்குன்றம் அடுத்த அகத்தீஸ்வரமங்கலம் ஏரியில், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள குளத்தில் 26,000 மீன் குஞ்சுகளை விட்டுத் தொடங்கி வைத்தார்.
கடந்த 2018ஆம் ஆண்டு சென்னையைச் சேர்ந்த 8ஆம் வகுப்பு படித்து வந்த 13 வயது சிறுமியை, பனையூர் பகுதியைச் சேர்ந்த ரகமதுல்லா (45), சாகுல் ஹமீது (42) ஆகியோர் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தனர். இவ்வழக்கு விசாரணை, செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், நேற்று அவர்கள் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி நசீமா பானு தீர்ப்பளித்தார்.
கந்த சஷ்டியை முன்னிட்டு, 2 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளனர். தாம்பரம் – நெல்லை இடையேயான சிறப்பு ரயில் (06099), இன்று இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு செல்லும். மற்றும் திருச்செந்தூர் – சென்னை சென்ட்ரல் இடையேயான சிறப்பு ரயில் (06100), நாளை (நவ.7) இரவு 10:15 மணிக்கு புறப்பட்டு நாளை மறுநாள் காலை 10:30 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க
செங்கல்பட்டு மத்திய மாவட்ட பாமக சார்பாக, கடலோரில் மாநில வன்னியர் சங்க தலைவர் பு.தா. அருள்மொழியை தரக்குறைவாகவும் அவதூறாகவும் பேசி நபர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்து உரிய தண்டனை வழங்க கோரி இன்று (நவ.6) காலை 10 மணிக்கு செங்கல்பட்டு, திருப்போரூர், திருக்கழுக்குன்றம் மாமல்லபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில், அனைத்து பாமக நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
செங்கல்பட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு சங்களால் நடத்தப்படும் நியாயவிலைக் கடைகளுக்கு விற்பனையளர்கள், கட்டுநர்கள் பணிக்கு நேரடி நியமனம் மூலம் பணியமர்த்தப்பட உள்ளது. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் நாளை மாலை 5.45 மணிக்குள் (நவ.7) ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். செங்கல்பட்டில் 184 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தமிழில் பேசவும், எழுதவும் வேண்டும். ஷேர் பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.