India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
செங்கல்பட்டில் விட்டு விட்டு பெய்யும் கனமழை காரணமாக, நேற்று இரவு தாம்பரம் ஜி.எஸ்.டி சாலையில் நேற்றிரவு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வண்டலூர் மேம்பாலம், பெருங்களத்தூர் மேம்பாலம், தாம்பரம் மேம்பாலம் உள்ளிட்ட இடங்களில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. தாம்பரம் மற்றும் குரோம்பேட்டை பகுதிகளில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால், வாகனங்கள் மெல்ல ஊர்ந்து சென்றன. உங்க ஏரியாவில் நேற்று மழை பெய்ததா?
அச்சிறுபாக்கம் அடுத்த பெரும்பேர் கண்டிகை ஊராட்சியில் உள்ள வஜ்ரகிரி மலை மீது வள்ளி, தெய்வானை உடனுறை சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. 5300 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயில், பாம்பன் சுவாமிகளால் பாடல் பெற்ற தலமாகும். கந்த சஷ்டியையொட்டி மலை மீது உள்ள வேல், மின் அலங்காரம் செய்யப்பட்டு, மின் ஒளியில் ஜொலித்தது.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (07.11.24) தேசிய பட்டியல் இனத்தினவருக்கான ஆணையத்தின் உறுப்பினர் வட்டிபள்ளி ராம்சந்தர் ஆதிதிராவிடர் மக்களுக்கு செயல்படுத்தப்படும் திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜ் தலைமையில் இயக்குனர் பட்டியல் இனத்தினவருக்கான ஆணையத்தின் இயக்குநர் டாக்டர்.எஸ்.ரவிவர்மன் முன்னிலையில் அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிஅறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழகம் முழுவதும் டெங்கு மற்றும் விஷக்காய்ச்சல் பரவி வருகிறது. செங்கல்பட்டு மாவட்டம் தேவராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராஜகுரு – அமுல் தம்பதியின் 6 வயது இளைய மகள் யாத்திகா காய்ச்சல் காரணமாக உயிரிழந்த செய்தி வேதனையளிக்கிறது. சிறுமியின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல். சுகாதாரத் துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்றார்
மதுராந்தகம் அருகே லாரி மீது அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இரும்பு கம்பி ஏற்றிச் சென்ற லாரி மீது, பின்னால் வந்த அரசு பேருந்து பலமாக மோதியது. இதில், பேருந்தின் முன்பக்கம் முற்றிலும் உருக்குலைந்து போனது. பேருந்து ஓட்டுநர் படுகாயம் அடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பயணிகள் சிறுசிறு காயங்களுடன் உயிர் தப்பினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளின்மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று (நவ.7) ஒருசில இடங்களிலும், நாளை (நவ.8) பெரும்பாலான இடங்களிலும், 9 முதல் 12ஆம் தேதி வரை ஒருசில இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க
நந்திவரம்- கூடுவாஞ்சேரி தகைசால் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்டம், விதையின் சிறகுகள் மற்றும் பல்வேறு தனியார் தொண்டு அமைப்புகள் சார்பில் கூடுவாஞ்சேரி ஏரிக்கரையில் ஐந்தாயிரம் பனை விதைகள் மாணவர்கள் மூலம் விதைக்கப்பட்டன. இதில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு செங்கல்பட்டு எம்.எல்.ஏ ம.வரலட்சுமி பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினர்.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் திருக்குறளின் 1330 குறட்பாக்களையும் முற்றோதல் செய்த திறமையை பாராட்டி 12 மாணவ மாணவியர்களுக்கு ரூ.15,000/– பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் வழங்கினார். உடன் மாவட்ட கல்வி அலுவலர்கள், தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் (பொறுப்பு) பாரதி மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அண்ணா, அம்பேத்கர், கருணாநிதி ஆகியோர் பிறந்தநாள் முன்னிட்டு நடத்தப்பட்ட பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு முதல் பரிசு ரூ.5,000, இரண்டாம் பரிசு ரூ.3,000, மூன்றாம் பரிசு ரூ.2,000, சிறப்பு பரிசு ரூ.2,000 ஆகிய பரிசுத்தொகைகள், பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜ் வழங்கினார்.
சிட்லபாக்கம் ஏரியில் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் இன்று காலை மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் தலைமையில், ஏரியை சுற்றி 100 பனைமர விதைகள் நடவு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிட்லபாக்கம் – செம்பாக்கம் பகுதி செயலாளர் இரா.மோகன் மற்றும் சமூக ஆர்வலர்கள், அதிமுகவினர் உடன் இருந்தனர்.
Sorry, no posts matched your criteria.