India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளின்மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று (நவ.7) ஒருசில இடங்களிலும், நாளை (நவ.8) பெரும்பாலான இடங்களிலும், 9 முதல் 12ஆம் தேதி வரை ஒருசில இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க
நந்திவரம்- கூடுவாஞ்சேரி தகைசால் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்டம், விதையின் சிறகுகள் மற்றும் பல்வேறு தனியார் தொண்டு அமைப்புகள் சார்பில் கூடுவாஞ்சேரி ஏரிக்கரையில் ஐந்தாயிரம் பனை விதைகள் மாணவர்கள் மூலம் விதைக்கப்பட்டன. இதில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு செங்கல்பட்டு எம்.எல்.ஏ ம.வரலட்சுமி பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினர்.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் திருக்குறளின் 1330 குறட்பாக்களையும் முற்றோதல் செய்த திறமையை பாராட்டி 12 மாணவ மாணவியர்களுக்கு ரூ.15,000/– பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் வழங்கினார். உடன் மாவட்ட கல்வி அலுவலர்கள், தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் (பொறுப்பு) பாரதி மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அண்ணா, அம்பேத்கர், கருணாநிதி ஆகியோர் பிறந்தநாள் முன்னிட்டு நடத்தப்பட்ட பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு முதல் பரிசு ரூ.5,000, இரண்டாம் பரிசு ரூ.3,000, மூன்றாம் பரிசு ரூ.2,000, சிறப்பு பரிசு ரூ.2,000 ஆகிய பரிசுத்தொகைகள், பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜ் வழங்கினார்.
சிட்லபாக்கம் ஏரியில் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் இன்று காலை மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் தலைமையில், ஏரியை சுற்றி 100 பனைமர விதைகள் நடவு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிட்லபாக்கம் – செம்பாக்கம் பகுதி செயலாளர் இரா.மோகன் மற்றும் சமூக ஆர்வலர்கள், அதிமுகவினர் உடன் இருந்தனர்.
திருப்போரூர் ஸ்ரீ கந்தசாமி திருக்கோயில் கந்த சஷ்டி விரதம் 5ஆவது நாளை முன்னிட்டு, 06-11-2024 புதன்கிழமை இன்று பூத வாகனத்தில் முருகர் மற்றும் வள்ளி தெய்வானை ஆகிய சிலைகள் வைக்கப்பட்டு, பக்தர்கள் அனைவரும் ஒன்று திரண்டு வீதி உலாவாக தூக்கி சென்றனர். பக்தர்கள் அனைவரும் முருகப்பெருமானை தரிசித்து சென்றனர்.
தாம்பரம் பகுதியில், இன்று காலை முதல் போலீசார் கஞ்சா வேட்டை நடத்தி வருகின்றனர். இந்நிலையில சூடான் நாட்டைச் சேர்ந்த பியார் அபோய் ஆராக் (31), முகமது அல்ஸ்மானே (30), முகமது ஹேதாம் எல்ராயா எல்சிக் (29) மற்றும் அதே பல்கலை.,இல் 4ஆம் ஆண்டு சட்டம் படித்து வரும் திருச்சியைச் சேர்ந்த ஜாவித் (22) ஆகிய 4 பேரை பிடித்து பல்லாவரம் காவல் நிலையம் அழைத்துச் சென்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில், மதுராந்தகம், சித்தாமூர், லத்துார் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களாக பணிபுரிந்து வரும் 5 பேருக்கு, தற்காலிகமாக வட்டார வளர்ச்சி அலுவலராக பதவி உயர்வு வழங்கி கலெக்டர் அருண்ராஜ் நேற்று முன்தினம் உத்தரவிட்டார். அதன்படி, க.ஜெகன், எஸ்.சுந்தரமூர்த்தி, வி.என்.சுரேஷ்ராஜ், டி.கோபிநாத், எம்.கோபாலகண்ணன் உள்ளிட்டோருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த குழிப்பாந்தண்டலம் பகுதியைச் சேர்ந்த கார்த்திகா, அனுஷ்கா, மிர்த்திகா, சிவப்பிரியா, பிரியங்கா, காவியா, ரித்திகா ஆகியோர் இன்று காலை பள்ளிக்கு ஷேர் ஆட்டோவில் சென்றுள்ளனர். ஆட்டோ ஓட்டுநரின் கவனகுறைவால், பண்டிதமேடு பேருந்து நிறுத்தும் அருகே ஆட்டோ நிலைத்தடுமாறி விழுந்தது. இதில் மாணவிகள் அனைவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.
தமிழகத்தில், 2024-25ஆம் ஆண்டில் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் சிறப்பு பருவம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. செங்கல்பட்டில் இத்திட்டம், ‘அக்ரிகல்ச்சர் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிமிடெட்’ காப்பீட்டு நிறுவனம் வாயிலாக செயல்படுத்தப்படுகிறது. ஏக்கருக்கு ரூ.517.5 செலுத்தி, வரும் 15ஆம் தேதிக்குள் விவசாயிகள் காப்பீடு செய்ய வேண்டும் என செங்கல்பட்டு கலெக்டர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.