India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அரியலூர் ஆண்டிமடம் ஒன்றியம், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வட்டார வள மைய மேற்பார்வையாளர் திரு. வீ.அருமைராஜ், அனைத்து திட்டக் கூறுகளிலும் மிகச்சிறப்பாக பணியாற்றியதை பாராட்டி சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் பொ. இரத்தினசாமி அவர்கள் பாராட்டு சான்று வழங்கினார்.
அரியலூர் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் நாளை மறுநாள் (ஆக.17) கயர்லாபாத், மகாலிங்கபுரம், ஒ.கூத்தூர், பொய்யாதநல்லூர், கோப்பிலியன்குடிக்காடு, அஸ்தினாபுரம், பெரியநாகலூர், புதுப்பாளையம், குறிச்சிநத்தம், சிறுவளூர், பார்ப்பனச்சேரி, மங்களம், குறுமஞ்சாவடி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன், சென்னை தலைமை செயலகத்தில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோரை சந்தித்து, ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் நிறைவேற்றப்பட வேண்டிய பல்வேறு கோரிக்கைகள் குறித்த கடிதங்களை வழங்கினார்.
திருமானூர் அருகே விழுப்பனங்குறிச்சி கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. முகாமில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், மருத்துவ துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார் அப்பொழுது அனைத்து துறைகளின் திட்டங்களும் மக்களைச் சென்றடைய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
அரியலூர் மாவட்ட அளவில் சிறந்த பள்ளியாக தெரிவு செய்து காமராசர் விருது மற்றும் 1லட்சம் பரிசை அரியலூர் மாவட்டம் ஜெ.சுத்தமல்லி அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த தலைமை ஆசிரியர் முருகன் அவர்களுக்கு அரியலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் 1லட்ச ரூபாய்க்கான விருதை வழங்கி தலைமை ஆசிரியருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
அரியலூர் மாவட்ட ஆட்சியரின் புகைப்படத்தை வைத்து முகம் தெரியாத நபர்களிடமிருந்து +94785154768 என்ற எண்ணிலிருந்து வாட்ஸ்அப் கால், வாட்ஸ்அப் மெசேஜை மூலமாக அரசு அதிகாரிகளிடம் தொடர்பு கொள்வதாக கூறப்படுகிறது. இவ்வாறான அழைப்புகளை யாரும் நம்ப வேண்டாம்.
மேலும் இவ்வாறான அழைப்புகள் வந்தால் மாவட்ட நிர்வாகத்திற்கோ, காவல் நிலையத்திற்கோ தகவல் தெரிவிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு அரியலூா் மாவட்டத்தில் உள்ள 201 கிராம ஊராட்சிகளிலும் நாளை கிராம சபைக் கூட்டம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் அறிவித்துள்ளார். இந்த கூட்டத்தில், கிராம ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, தூய்மையான குடிநீா் விநியோகத்தினை உறுதி செய்தல் போன்ற பல இனங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருமானூரை அடுத்த வெங்கனூா் கிராமத்தை சோ்ந்தவா் பன்னீா்செல்வம் மகன் சுரேஷ்குமாா் (36). இவரது மனைவி அனிதா(28).இருவருக்கும் குடும்பப் பிரச்சனை காரணமாக சண்டை நடந்து வந்தது. இந்நிலையில், கடந்த (5.11.2021) அனிதாவின் உடலில் மண்ணெண்ணையை ஊற்றி சுரேஷ்குமாா் தீ வைத்தாா். இதில், பலத்த காயமடைந்த அனிதா உயிரிழந்தாா். இந்த வழக்கை விசாரித்த அரியலூர் மகளிர் நீதிமன்றம் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கியது.
உடையார்பாளையம் அருகே மணகெதி கிராமத்தில் சுங்கச்சாவடிக்கு சொந்தமான 50 கிலோ எடை கொண்ட கம்பி வேலியை அதே ஊரைச் சேர்ந்த கனகராஜ், மணிகண்டன், கார்த்திகேயன் ஆகியோர் திருடி சென்றனர். அப்போது, உடையார்பாளையம் காவல் துணை ஆய்வாளர் ரமேஷ் பாபு ரோந்து சென்றார். அதை கண்ட மூவரும் இரும்பு கம்பியை அதே இடத்தில் போட்டுவிட்டு தப்பி சென்றனர். பின்னர், போலீசார் மூவரையும் கைது செய்தனர்.
ஆண்டிமடம் அருகே கூவத்தூர் மேலத்தெருவை சேர்ந்தவர் லதா. இவர் அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் (41) என்பவரை 2002ல் திருமணம் செய்துகொண்டார். சுரேஷூக்கு மற்றொரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு 2வது திருமணம் செய்து கொண்டார். இதனால், மன வேதனையடைந்த லதா கணவனை பிரிந்து தந்தை வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், லதாவை சமாதானப்படுத்த வந்த சுரேஷ் நேற்று மாமனார் ஆரோக்கியத்தை அரிவாளால் தலையில் வெட்டியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.